ஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள் நிகழும் இந்த மாற்றங்களை உள்ளும் புறமும் வேறோருவனாக இருந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருக்கிறேன்.

என்னால் தினமும் காலை ஐந்து மணிக்கு எழ முடிகிறது. தினமும் என் சொந்த திட்டங்களுக்காக 5 மணி நேரங்களை ஒதுக்க முடிகிறது. அலுவலகத்தில் இட்ட பணியைவிட மும்மடங்கு பணி செய்ய முடிகிறது. எப்பொழுது நண்பர்கள் அழைத்தாலும் இல்லை என்று சொல்லாமல் அவர்களோடு விளையாடவோ வெளியில் செல்லவோ முடிகிறது.

மகிழ்ச்சியான தருணத்திலோ, அமைதியான தருணங்களிலோ எடுக்கும் முடிவுகளை அதற்குரிய‌ சூழ்நிலைகளில் நான் நினைத்தவாறே கையாளுகிறேனா என்று இக்கட்டான தருணங்களில் கூட வேறொருவனாக உள்ளிருந்து அகம் சிந்தித்துக்கொண்டே இருக்கிறது. இல்லையெனின் மனம் அதனை மாற்றியமைத்து மற்றோர் தருணத்தில் கண்காணிக்கிறது. இதெல்லாம் எப்படி சாத்தியப்பட்டதென தொடர்ந்து பல நாட்களாக, சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். என்னால் உறுதியாக இதுதான் எனக்கூற முடியாது என்றாலும் தங்களின் எழுத்திற்கு அதில் ஒரு சீரிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது.

ஏனெனில் மற்ற எழுத்தாளர்கள் எழுத்தின் வழி அறியப்படுபவரும், இயல்பாக அறியப்படுபவரும் வேறாக இருப்பார்கள். அவர்களை நான் தவறென்று சொல்லவில்லை. படைப்பாளி என்பவன் தனி மனிதனிலிருந்து வேறுபட்டவன், படைப்பாளியை படைப்பைக்கொண்டே அணுக வேண்டும் அவன் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டல்ல எனப் பொதுவாகக் கூறினாலும், ஒரு உன்னத படைப்பைப் படைத்த படைப்பாளியும் உன்னதமான ஒருவராக இருக்கும் பொழுது இயல்பாகவே அப்படைப்பின் மீதும், படைப்பாளியின் மீதும் மரியாதை வந்து விடுகிறது. அப்படித்தான்  எனக்கும் தங்களுடைய‌ எழுத்தை வாசித்த பொழுது ஏற்பட்ட உத்வேகம் நான் இருந்த நிலையில் இருந்து வேறோர் இடத்திற்கு தள்ளிவிட்டது. அங்கிருந்து வேறோர் இடம், பின்னர் வேறோர் இடம், இன்று இந்த நிலையில். நாளை இதைவிட உன்னத நிலையில் உறுதியாக (வாசித்துக்கொண்டே இருந்தால்).

என்வாழ்வின் பொற்காலம் கடந்த காலம் அல்ல, நிகழ்காலம், இன்று இக்கணம்.  இதை நீடிக்கச் செய்ய ஒரே வழி, வாசித்துக்கொண்டே இருப்பது என்றே நினைக்கிறேன். வாசிக்கும் ஒரு புத்தகம், வாசிக்க வேண்டிய பத்து புத்தகங்களுக்கு வழியைத் திறக்கிறது. இன்று நான் வாசிப்பையே முழு நேர வேலையாக செய்து, உலகில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் இன்றோடு எழுதுவதை நிறுத்தினாலும் கூட என் இறப்பிற்கு முன் இவ்வாசிப்புக்கடலில் ஒரு கைப்பிடி அள‌வு மட்டுமே அள்ள முடியும் என்றே நினைக்கிறேன். தங்களுக்கு என் உளமாற நன்றி.

Similar Posts

  • எங்கே இந்தியக் கல்வி?

    நான் கடைசியில் கூறப்போவதை இப்போதே சொல்லிவிடுகிறேன். “இந்தியக்கல்வி பில்கேட்ஸிடம் வேலை செய்ய 1000 பேரை உருவாக்கும். ஆனால் ஒரு பில்கேட்ஸை கூட உருவாக்காது” இந்தியா:—–>மனித சக்தியில் உலக அளவில் இரண்டாம் இடம். பரப்பளவில் ஏழாம் இடம். பொருளாதாரத்தில் பத்தாம் இடம். ஆனால் கல்வியில் வரிசைப்படித்தினால் உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை. ஆம் உண்மை அதுதான். இந்தியாவில் உள்ள 568 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட உலகின் தலைசிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இல்லை.இதன்…

  • தொடர்பெனும் சிக்கல்

    மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு. பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம்…

  • இந்தியக் கண்டுபிடிப்புகள்

    கடந்த நூறாண்டுகளில் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனை தொழில்நுட்பங்கள் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் பூஜ்யமே. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அதன் விகிதாச்சாரம் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் புறந்தள்ளக்கூடியதே. சரி 700 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாம் மட்டுமே 120 கோடி. சராசரியாக 6 விழுக்காடு உலக மக்கள் இந்தியர்கள். ஆனால் கண்டுபிடிப்புகள்? ஏன் இந்த நிலை? உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் தலைசிறந்த தொழில்நுட்ப…

  • மீண்டும் ஆசானுக்கு

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். மீண்டும் வெண்முகில் நகருக்கு வந்து விட்டேன். ஆம் சில மாதங்களுக்கு முன்னர் வண்ணக்கடல் படிக்கும்போது தினமும் வாசிப்பதனைவிட ஒரே மூச்சாக ஒவ்வொரு புத்தகமாக வெளிவரும்பொழுது வாசிக்கலாம் என்ற எண்ணத்தை அடைந்தேன். அதன் காரணமாக தினசரி வாசிப்பை வெண்முரசில் இருந்து வேறு சில புத்தகங்களுக்கு மாற்றினேன். அதே சமயம் வெண்முரசு அல்லாத தங்களின் பதிவுகளையும், மற்ற புத்தகங்களையும் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தேன். மாதங்கள் கடந்தன‌. முதற்கனல், மழைப்பாடலின் வாசிப்பின் விளைவாக மென்பொருள் துறையில்…

  • நேர மேலாண்மை

    லட்சியத்தின் முதல்படி நேர மேலாண்மை. நம்முடைய நேரத்தை நம்மால் வடிவமைக்க முடியாது போனால் எந்த ஒரு இலக்கையும் அடைய முடியாது. நேர மேலாண்மை தொடர்பான மிகச்சிறந்த வழிகாட்டுதல்கள் இங்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.