நேர மேலாண்மை
லட்சியத்தின் முதல்படி நேர மேலாண்மை. நம்முடைய நேரத்தை நம்மால் வடிவமைக்க முடியாது போனால் எந்த ஒரு இலக்கையும் அடைய முடியாது.
நேர மேலாண்மை தொடர்பான மிகச்சிறந்த வழிகாட்டுதல்கள் இங்கே.
Whenever I see something new or innovative I am remembering the people behind that. Along with that getting this question also in my mind. Are these people blessed with creative minds? Are they born with creativity? How can they are able to do innovative thinks which others can’t.The fact is that, they are not born with the creativity. But…
எத்தனையோ குறைகளைக் கூறிக்கொண்டும், மற்றவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துகொண்டு வாழும் இவ்வுலகில் இத்துனை குறைகள் இருந்தாலும் மற்றவர்களுக்காக வாழும் உயர்ந்த உள்ளம் கொண்ட சகோதரிகள். மனதை நெருடும் ஒரு காணொளி.
காஷ்மீர் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள் பற்றிய நேரத்தில் வாசித்த சிறந்ததொரு கட்டுரை. திருச்சி வே விஜயகிருஷ்ணன் அவர்களால். எனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை…
சிங்கப்பூர் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரமலான். வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான முஸ்லீம் மக்கள் மலே இனத்தவரகாவே இருக்கின்றனர். இந்திய முஸ்லீம்களும், சீன முஸ்லீம்களும் குறைந்த அளவிலேயே இருக்கின்றனர். நம் ஊரைப்போலவே இங்கும் பண்டிகைக்கால சந்தைகள் உண்டு. ஆனால் இங்கு முப்பது நாட்களுக்கு மேலாக சந்தைகளை நடத்துகின்றனர். இந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதற்காக சந்தைக்கு நானும் சென்றேன். பல நாட்டு உணவு வகைகள், பானங்கள், அலங்காரப் பொருட்கள், ஆடைகள்,மெத்தை விரிப்புகள், விளையாட்டுப் பொருட்கள்,…
கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி. அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…
நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…