ஞானகுரு – எஸ்.கே.முருகன்

தனியனாய், பரதேசியாய் சுற்றித்திரியும் ஞானகுரு எனக்கூறப்படுபவரின் பதில்களின் தொகுப்பு. பெயரை வைத்து அவரை ஏதோ புனிதர், மானுட அவதாரம் தரித்த மகான் என்றெல்லாம் எண்ண வேண்டியதில்லை. நம் ஊரிலே தெருவிலே இதைவிட அருமையாகத் தத்துவங்கள் கூறும் பல சாமியார்கள் உண்டு. குடித்துவிட்டு, கஞ்சா அடித்துவிட்டு உளரும் ஒருவருடைய சொற்கள் புத்தகமாயிருக்கின்றன. வேறு ஒன்றும் இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை யே(கஞ்சா, குடி, மாமிசம், சுருட்டு) அறமாய்க் கொண்டு அதையே நியாயப்படுத்தும் தகவல்களை அறிவுரைகளாக ஒட்டுமொத்த நூலும் விளம்புகிறது. இந்த அறிய தகவல்களை கூற ஞானகுரு வேண்டாம், நம் தெருவில் குடித்துவிட்டு இரவில் அலையும் ஒருவனே போதும் என நினைக்கிறேன்.njanaguru

ஏற்கனவே ஒரு 10 புத்தகங்களாவது ஒருவ‌ர் வாசித்திருப்பாரானால் அவருக்கு இப்புத்தகம் மீது ஒரு மிகப்பெரிய வருத்தம் கண்டிப்பாக ஏற்படும். நானும் அந்நிலையிலேயே நிற்கிறேன். இந்தப் புத்தகம் ஒரு கடைநிலைக் கட்சிப் பிரமுகரின் மேடைப் பேச்சு என்ற அளவில்தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்குத்தான் அந்த வசதி உண்டு. அதிகம் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. ஏதாவது சற்றே உணர்ச்சிப்பூர்வமாக, அறைகுறைத்தகவல்களை வைத்துக் கொண்டு பேசி விட்டுப் போய் விடலாம். ஏனென்றால் அது ஆவணப்படுத்தப்பட மாட்டாது. 

ஆனால் புத்தகங்கள் அப்படியில்லை. ஒரு புத்தகம் என்பது பலமுறை திருத்தப்பட்டு, தகவல்கள் சரி பார்க்கப்பட்டு வெளிவரக்கூடிய ஒன்று. எழுதப்பட்ட காலத்தை தன்னுள்ளே தாங்கி நிற்கும் பெட்டகம். அதானேலேயே புத்தகங்கள் படிப்பதற்கு தலையாய முன்னுரிமை கொடுக்கும் ஒருவன் நான். புத்தகங்கள் எல்லாமே உயர்வானவையாய் ஏதோ ஒரு விதத்திலாவது இருக்குமென எண்ணி வாசிக்கும் எனக்கு இது ஒரு சம்மட்டி அடி, இங்கும் விதி விலக்குகள் உண்டு என. ஒரு நூல் என்பதற்கான குறைந்த பட்ச வரையறை கூட இல்லாத நூல். சிறப்பாய் இருப்பது அட்டைப்படமும் தலைப்பும் மட்டுமே. நான் வேண்டுவதெல்லாம் தயவு செய்து இது போன்றவற்றையெல்லாம் ஆவணப்படுத்தாதீர்கள்.

Similar Posts

  • மனம் – திரைப்படம்

    நாகேஸ்வரராவ்,நாகர்ஜுனா,நாக சைதன்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நான் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு திரைப்படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்த‌தே இல்லை. எவ்வளவு நல்ல திரைப்படம் என்றாலும். ஆனால் இந்த திரைப்படத்தினை இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டேன். காரணம் மற்ற படங்கள் என் புத்தியை தொட்டிருக்கின்றன. இப்படம் என் மனதைத் தொட்டதே. முதல்முறை போலவே இம்முறையும் கண்களில் கண்ணீர் பல இடங்களில். வாழ்க்கைதான் எத்தனை அழகானது? நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவனாகவே…

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் ‍- 1

    16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான‌ ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய‌ வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தே முகலாயப் பேரரசினை பாபர் தொடங்கி வைத்தார். மங்கோலிய இன‌ செங்கிஸ்கான் வழி வந்தவர் தைமூர். தைமூர் மங்கோலிய,…

  • | |

    கொரோனா தோல்வி

    கொரோனாவைக் கையாள்வதில் இந்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தோல்விக்கான முழுப்பொறுப்பும் பாரதிய ஜனதா அரசினையே சாரும். தேர்தல் ஆணையத்திற்கும், இந்தியக் கட்சிகளுக்கும் கணிசமான பங்கும் உண்டு. முதலில் உலக நாடுகளில் முதலாம் கட்ட அலை ஏற்பட்ட போது வெறும் 34 வெளிநாட்டு விமான நிலையங்களைக் கட்டுப்படுத்த முடியாத நாம் 32 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என நினைத்தது மகா முட்டாள்தனம். நம் அதிகாரிகள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவும் மிகப்பிந்தியே…

  • | |

    மாதொருபாகன்

    மாதொருபாகன் நாவலை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதன் விளைவாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை திரும்பப் பெற்று விட்டார். இனிமேல் தான் எழுத‌ப்போவதில்லை எனவும் தான் எழுதிய அனைத்து நாவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்து விட்டார். எதிர்ப்பாளர்கள் மறுப்பை வெளிப்படுத்திய விதம் முற்றிலும் தவறு. இதில் மாற்றுக்கருத்து கிடையாது. எதிர்ப்பாளர்கள், மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னபடி பதிலுக்கு ஒரு மறு நாவலையோ அல்லது விளக்கவுரையோ எழுதி கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கலாம். அதனைவிடுத்து மூன்றாம்…

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

One Comment

  1. நான் படித்த புத்தகங்களில், மிகச் சிறந்த புத்தகம் இது என்பேன்… விட்டேத்தியாக திரியும் சாமியாரிடம் இவ்வளவு இயல்பான, தெளிவான, உண்மையான கருத்துக்களா, என்று ஆச்சர்யப்பட வைக்கும்… என் வாழ்க்கையில் , பெரிய திருப்பத்தை ஏற்ப்படுத்திவிட்டார் எழுத்தாளர் முருகன்.. நன்றி .. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.