Words at Work

இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் ப‌லனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது.

எந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தக‌வல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஏற்பட்டது. உதாரணமாக Cereal Box என்ற வார்த்தை நறுமணத்திரவியங்கள் தொடர்பாக பயன்படுத்தப்படுகிறது. அதன் பொருள் நறுமணத்திரவியத்தைப் போலவே ஒரு அட்டைப் பெட்டியில் பெரியதாக செய்து கடைகளில் காட்சிக்கு வைப்பது. இதனை நாம் பல முறை கண்டிருந்தாலும், அதற்குப் பின்னாலும் ஒரு திட்டமிடல் இருக்கிறது எனும்போது புதிய அனுபவமாய் அது அமைகிற‌து. இனி அதனைப் பார்க்கும் பொழுது நம் பார்வை மாறுபடலாம்.

இதனைப் போலவே வாசனைத்திரவியத்தின் மேல் மூடியில் இருக்கும் அழுத்து விசையை Actuator என்று குறிப்பிடுகின்றனர். இதனைப் போலவே Tulip Mania, Hockey Stick எனப் பல வார்த்தைகள் உண்டு. அது தொடர்பான விளக்கங்களும் உண்டு. புதிய வார்த்தைகளையும் பொருள்களையும் விரும்புபவர்களும், ஆர்வமுடையவர்களும் வாசிக்கலாம்.

நன்றி.

Similar Posts

  • | |

    மாதொருபாகன்

    மாதொருபாகன் நாவலை முன்வைத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று அதன் விளைவாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் எழுத்துக்களை திரும்பப் பெற்று விட்டார். இனிமேல் தான் எழுத‌ப்போவதில்லை எனவும் தான் எழுதிய அனைத்து நாவல்களையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்து விட்டார். எதிர்ப்பாளர்கள் மறுப்பை வெளிப்படுத்திய விதம் முற்றிலும் தவறு. இதில் மாற்றுக்கருத்து கிடையாது. எதிர்ப்பாளர்கள், மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னபடி பதிலுக்கு ஒரு மறு நாவலையோ அல்லது விளக்கவுரையோ எழுதி கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கலாம். அதனைவிடுத்து மூன்றாம்…

  • புத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்

    பாக்கியம் ராமசாமியால் எழுதப்பெற்று குமுதத்தில் 1963 களில் தொடர்கதையாக வெளிவந்த நகைச்சுவைத் தொடர். பின்னர் மொத்த நாவலாக வெளியிடப்பட்டது. அப்புசாமித் தாத்தா தன்னுடைய மனைவி சீதாவுடன் நாள்தோறும் சண்டையிட்டு வருபவர். சாதாரண விளையாட்டுச் சண்டைகள். ஒருமுறை அவருடைய தாடியை அவர் மழிக்கவில்லை என்பதற்காக அவரைத் தன்னுடன் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாமல் விடுகிறாள் சீதா. அதனால் தான் இனிமேல் தாடியை எடுக்கப்போவதில்லை என சபதம் செய்கிறார் அப்புசாமி. இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் ஒரு ஆப்ரிக்க இளவரசி…

  • | | |

    ரஷ்யப் புரட்சி மருதன்

    ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக்…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • தொடர்பெனும் சிக்கல்

    மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு. பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம்…

  • எக்சைல் – சாரு நிவேதிதா

    தன்னுடைய வாசகர் வட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் தன்னுடைய எக்சைல் நாவலைப் படித்திருக்க வேண்டும் என்ற அவருடைய தகுதி வரையறையின் காரணமாகப் படித்த நாவல். வாசிப்பின் முடிவில் என் மனநிலை, இப்போதைக்கு சாருவின் வாசகர் வட்டத்தின் இணைய முயல வேண்டாம் என்பதே. ஒருவேளை இதற்குத்தான் அந்த நாவலை வாசிக்கச் சொல்லியிருப்பாரோ என்னவோ? நாவலின் கரு இதுதான். மற்ற ஒருவரின் மனைவியை காதலிக்கும், உறவுகொள்ளும் ஒருவனின் வாழ்வியல் நிகழ்வுகள். அக்காலக் கட்டத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் நாவலாக்கியிருக்கிறார். சாரு இந்நாவலில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.