|

அவியளித்தல் : கேள்வியும் பதிலும்

சமூகத்தேவை இல்லாத எந்த ஒரு பழக்க வழக்கங்களும் நிலைத்திடாது, அதற்கான தேவை முடிந்த பின்னரும் தொடரும் பழக்க வழக்கங்களே விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய காலத்தினை விட அந்தக் காலகட்டங்களில் போக்குவரத்து வசதிகளும் தொடர்புகளும் குறைவு. அக்காலகட்டங்களில் உணவு என்பது மிகப்பெரும் பிரச்சினை. அந்நிலையில் எவ்வாறு அவியளித்தல் என்பது சடங்காக நிலைபெற்றது? அதற்கான சமூகத்தேவைகள் என்ன? அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நெருப்பில் உணவுப்பொருட்களை இடுகிறோமா?  – மகிழ்நன்

இருபதாண்டுகளுக்குமுன் இ.எம்.எஸ் ஒரு கட்டுரையில் இதைச் சொல்லியிருந்தார், வேதகாலத்தில் வேள்விகளில் உணவு வீணாக்கப்பட்டது என்று.அதை நான் நித்ய சைதன்ய யதியிடம் கேட்டேன். ‘இ.எம்.எஸ்ஸால் குறியீட்டுச்சடங்குகளைப் புரிந்துகொள்ளமுடியாது. அதற்கு கிராம்ஷி படித்த அடுத்த தலைமுறை மார்க்ஸியர்கள் வரவேண்டும்’ என்றார்.

அவர் சொன்ன விளக்கம் இது. வேதவேள்விகள் மிகமிக அபூர்வமாக நிகழக்கூடியவை. பல்லாயிரம் மக்களில் மிகச்சிலரே அதைச் செய்கிறார்கள். அதுவும் எப்போதாவது. அங்கே நேரடியாக வீணாகும் உணவு மிகக்குறைவு. ஆனால் அதன் மூலம் கட்டமைக்கப்படும் ‘உணவு நெரடியாகவே இறைவனுக்குச் செல்லக்கூடியது, மிகமிகப் புனிதமானது’  என்னும் உணர்வு உணவு வீணடிக்கப்படுவதை தடுக்கிறது. அதன்மூலம் சேமிக்கப்படும் உணவு பலநூறு மடங்கு அதிகம்

உங்கள் வினாவுக்கான பதில் இதுதான். அன்று உணவு குறைவானதாக இருந்தமையால்தான் அதை மிகப்புனிதமானதாக ஆக்கி வீணாகாமல் காக்கவேண்டியிருந்தது.வேதவேள்விகள் அதற்காகவே. இன்று ஆலயங்களில் உணவு அபிஷேகம்பண்ணப்படுவதையும் அப்படி புரிந்துகொள்ளலாம். ஆனால் உணவின் மீதான அப்புனிதஉணர்வை இழந்துவிட்ட நாம் இன்று உண்ணும் அளவுக்கே உணவை வீணடிக்கிறோம் என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.

ஜெ.

Similar Posts

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • தினம் ஒரு வார்த்தை 50 – philanthropist

    philanthropist – மக்கள வாழ்வினை உயர்த்த விரும்பும் நன்கொடையாளர்களைக் குறிக்கும் வார்த்தை Sample Sentence the trust was founded by an American philanthropist

  • Gambian Dalasi

    காம்பியா நாட்டின் பணம் காம்பியன் டாலசி பற்றிய சில தகவல்கள். காம்பியா இங்கிலாந்து பிரிட்டீஷாரால் ஆளப்பட்ட ஒரு தேசம்.1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ல் சுதந்திரம் பெற்றது.சுதந்திரத்திற்கு பின்னர் 1971 ஆம் ஆண்டுவரை காம்பியா இங்கிலாந்து அரசின் பிரிட்டீஷ் வெஸ்ட் ஆப்ரிக்க பவுண்டையே (British West African pound) உபயோகித்து வந்தது. இந்த (British West African pound) பிரிட்டீஷ் வெஸ்ட் ஆப்ரிக்க பவுண்ட் காம்பியா மட்டுமல்லாது பிரிட்டீஷ் கோஸ்ட் கார்டு (தற்போதைய கானா), நைஜீரியா, சியரா…

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் ‍- 1

    16 ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான‌ ஏறத்தாழ 350 ஆண்டுகள் இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சிக்காலம். அதுவரை இந்தியாவினை ஆண்டு வந்தவர்கள் ஆப்கானிய‌ வம்சத்தைச் சேர்ந்த சுல்தானியர்கள். சுல்தானியர்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆளவில்லை. இன்றைய வட இந்திய நிலப்பகுதி, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் நிலப்பகுதியினை ஆண்டு வந்தார்கள். அவர்களைத் தோற்கடித்தே முகலாயப் பேரரசினை பாபர் தொடங்கி வைத்தார். மங்கோலிய இன‌ செங்கிஸ்கான் வழி வந்தவர் தைமூர். தைமூர் மங்கோலிய,…

  • இங்கிலாந்து ஸ்காட்லாந்து இணைப்பு

    இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் 1707 வரை தனித்தனி நாடுகளாகவே இருந்தன. 1707 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தின் (Treaty of Union) வழியாக இரு நாடுகளும் (United Kingdom) ஐக்கிய இராஜ்ஜியம் என்ற ஒன்றாக இணைந்தன. இது நடைமுறைக்கு வந்த தினம் மே 1, 1707. 1603 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் ஒரே ராணியின் கீழ் (Union of Crowns) இணைக்கப்பட்டதிலிருந்தே அரசியல் ரீதியாக இரு நாடுகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் 1606,1667 மற்றும் 1689 ஆம்…

  • Navigating the Evolution of Media and Information in the Digital Age

    Do our thoughts primarily stem from our personal expectations and ideas, or are they more influenced by external factors such as societal norms and the opinions of others? Have you ever thought about it? Am I influencing your though now? 🙂 Media, in its various forms, has been a cornerstone of how we consume information,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.