| |

தூய்மை இந்தியா

சமீபத்தில் நமது பிரதமர் அவர்களால் தூய்மை இந்தியா துவங்கப்பட்டதை விமர்சனம் செய்து பல்வேறு விதமான கட்டுரைகளும் பேச்சுக்களும் இணையத்தில் உலாவுகின்றன. ஒரு எளிய இணைய வாசகன் வாசிக்கும்பொழுது அவன் நம்பக்கூடிய வண்ணமே அப்பதிவுகள் இடப்படுகின்றன. எதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள்?

ஒன்று அவர்கள் மோடியை வெறுப்பவராகவோ, அல்லது எதிர்க் கட்சியை சேர்ந்தவராகவோ இருப்பார். ஆனால் அவர்களின் எண்ணங்களை இணையத்தில் முடிந்த அளவிற்கு பரப்பி அதனைப் பெருக்குகிறார்கள். உதாரணமாக ஒரு அமைச்சர் குப்பையை ஓரிடத்தில் பரப்பி வைத்துவிட்டு பின்னர் அதனை சுத்தம் செய்வது போன்ற ஒரு காணொளி. கண்டிப்பாக இதனைப் பார்த்திராத ஒரு இணைய வாசகன் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த காணொளி பரப்பப்பட்டு விட்டது. இதில் பிற மதங்களைச் சேர்ந்த சிலர் தங்கள் சுய லாபத்திற்காக இதனை மீண்டும் மீணிடும் பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்துகிறார்கள்.

மற்றொரு சம்பவம் சீமான் போன்றவர்கள் மேடைப்பேச்சுகளில் இது ஒரு வெற்று விளம்பரம், முதலில் குப்பைகளைப் போடாமல் இருக்கக் கற்றுக்கொடுங்கள், கழிப்பறை கட்டிக்கொடுங்கள் பின்னர் சுத்தம் செய்யுங்கள் என்பது போன்ற ஆக்ரோஷமான மொழிகளில் பேசி இத்திட்டத்தின் நோக்கத்தினை முடிந்த அளவிற்கு சிதைத்து வருகின்றனர். அதிலும் அவர் ஏன் ரோட்டில் குப்பை பொறுக்குபவனையோ, இல்லை சாக்கடை அள்ளுபவனையோ அழைக்காமல் பிரபலங்களை மட்டும் அழைக்கிறார் மோடி என்றெல்லாம் ஆக்ரோஷமாகக் கதறுகிறார். இக்காட்சியெல்லாம் இன்று இணையத்தில் அதிகம் உலாவுபவை. எதற்காக பிரபலங்களை மோடி அழைத்தார் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாதவரா இந்த‌ சீமான்?

நண்பர்களே பிரபலங்களை அழைப்பது என்பது அவர்களை தெருவில் இறங்கி சாக்கடையை அள்ளுவதற்காக‌ அல்ல. அவர்கள் ஒரு குறியீட்டுப் பொருள். அவர்களால் சமூகத்தில் ஏற்பட இருக்கும் விழிப்புணர்வுதான் நோக்கம். சீமான் கூறுவதுபோல யாரோ ஒரு தொழிலாளியை மோடி அறிவித்திருந்தால் இச்செய்தி ஒரு வழக்கமான அரசின் அறிவிப்பாகவே இருந்துவிட்டுப் போயிருக்கும் தானே? பிரபலங்களின் வழியாக இச்செயல்பாடு மீண்டும் மீண்டும் சமூகத்தின் சிந்தனையில்,செய்தியில் இருப்பதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது போன்ற திட்டங்களை விமர்சனங்கள் செய்பவர்களைப் பார்த்தால் ஒன்று தெரியும். இவர்களால் எதுவும் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். ஆனால் வேறு யாராவது அதனை செய்தால் அதில் குறை சொல்வார்கள். சரி வாருங்கள் விவாதத்திற்கு என அழைத்தால் நாங்கள் இதனை செய்யக்கூடாது என்று சொல்லவில்லை, அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் என்று ஏதாவது காரணத்தை அடுக்குவார்கள்.

நன்கு சிந்தியுங்கள் நண்பர்களே ஒரு குளிர்பானம் அருந்த வேண்டும் என்ற மனநிலை வந்த உடனேயே ஏதோ ஒரு பானத்தின் பெயர் நம் நினைவுக்கு வருகிறது. அது எப்படி சாத்தியமானது. அந்நிறுவனம் பல்வேறு வழிகளில் அதனை நம‌க்கு நினைவூட்டி நினைவூட்டி நம் மனதில் அதனை நிறுத்தியிருக்கிறது. இத்திட்டமும் அப்படியே. மீண்டும் மீண்டும் குப்பைகளைப் பற்றி விவாதிப்பதன் மூலம் நம் மனநிலையிலேயே இயல்பான குப்பை போடாத எண்ணத்தை கொண்டுவருவதே நோக்கம்.

இதிலும் குறைகள் இருக்கலாம். ஒரு சிலர் புகைப்படம் மட்டும் எடுத்து ஏமாற்றலாம். நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அவையெல்லாம் கடந்தும் கூட இது நமக்கான திட்டமே. பிழையோடே இத்திட்டம் செல்லட்டுமே. பின்னாளில் அது அதற்கான சரியான வழியைக் கண்டுகொள்ளும் தானே. இந்திய சுதந்திர வரலாற்றில் இது போன்ற செயலை இதுவரை வந்த எந்த அரசும் செய்யவில்லை. இவர்கள் செய்கிறார்கள். நம்மால் பங்குகொள்ள முடியவில்லை என்றாலும், பழிக்காமல் இருப்போம். இந்தியக் குழ‌ந்தை முதலில் தவழட்டும், பின்னர் அது ஓடுவதைப் பற்றி யோசிப்போம். எடுத்த உடனேயே ஓடவேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் இல்லையா?

Similar Posts

  • | | |

    ஜெயலலிதா கைதும், மக்களின் மனநிலையும்

    ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். அதனைப் பற்றிய பேச்சு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அது தொடர்பான நிகழ்வுகளின் போதே இப்பதிவை இட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட இரைச்சலுக்கு மத்தியில் இதற்கு இடமில்லாது போகுமென்பதால் அவ்விவாதங்கள் முற்றிலுமாக அடங்கும் வரைக் காத்திருந்து இப்பதிவை இடுகின்றேன். ஜெயலலிதா கைது ஆன பின்னர் அதனைப் பற்றி அளவுக்கு அதிகமாக விவாதித்து கட்டுரைகளை எழுதியவர்களோ, அதனைப்பற்றி செய்திகளைப் படித்துவிட்டு அப்போதைய நாட்களில் மட்டும் நண்பர்கள் மத்தியில் தனக்கு…

  • |

    Design of Web APIs – Arnaud Lauret

    Written by Arnaud Lauret. This book is for API designers, who involves in designing the API as well for those who develop APIs. It mostly talks about the best practices of designing APIs including best naming practices, documentation practices, security approaches. As I have already involved in few API developments already after reading this book…

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

  • எடிசன் போட்ட வெளிச்சம்!

    அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். 1083 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர். எரிந்து சாம்பலாகாத இழைகளைக் கொண்ட மின்சார பல்பை உருவாக்க அயராது உழைத்துக் கொண்டிருந்தார். பல ஆண்டுகள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு கடைசியில் ஒரு நாள் தன் முயற்சியில் முழு வெற்றியும் பெற்றார். அப்போது அதிகாலை மூன்று மணி. மின்சார பல்பு பிரகாசமாக எரிவதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த அவர், தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியைத் தட்டி எழுப்பினார். “ஏய்! பார் இந்த…

  • ராமரும் பாபரும்

    திசம்பர் 6, 1992. அயோத்தியிலிருந்த பாபர் மசூதி முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்ட நாள். 20 ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது இறுதித்தீர்ப்பை அறிவித்து விட்டது. (அதனை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பது வேறு.) இந்நிலையில் எஸ். சொக்கனால் தொகுக்கப்பட்டு இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள நூல் அயோத்தி. முதல் பதிப்பில் பெற்ற வரவேற்பின் காரணமாக, இறுதித் தீர்ப்பு விவரங்களோடு, மேலும் பல விவரங்களையும் இணைத்து வெளிவந்துள்ள நூல்.  முதன் முதலாக பாபர் ஆப்கனிலிருந்து வந்து…

  • நாம் ஏன் வாசிக்க வேண்டும்?

    எல்லோரும் வாசிப்பதில்லை. ஒரு சிலரே வாசிக்கின்றனர். அவர்கள் எதற்காக வாசிக்கிறார்கள்? வாசிப்பு சோறு போடுகிறதா? ஆம்,உலகுக்கே சோறு போடுகிறது, இவ்வுல‌கையே இயக்குகிறது. உலகையே நிர்ணயம் செய்கிறது. வாசிப்பு இல்லாதவனிடத்து தானும் உலக நடப்பு தெரிந்ததைப்போலவும், தானும் வாசிப்பவன் என்ற எண்ணம் கொண்டிருக்கச் செய்தே இயற்கை மிகச்சரியான, நுட்பமானவர்களை மட்டுமே வாசிப்பு உலகத்தில் சேர்த்துக்கொள்கிறது. வாசிப்பவன் மற்றவர்களில் இருந்து எப்படி மேலோங்குகிறான்? மேல் என்பது என்ன? நாம் கொண்டுள்ள எண்ணம்தானே அன்றி வேறல்ல. என்னிடம் பணம் இருக்கிற பொழுது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.