|

கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம்.

அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய கிராமம் என்பதானல் தன்னுடைய மகளை அவனுக்கு மண்முடித்து வைக்க எண்ணுகிறார். ஆனால் சூழ்நிலையால் இந்திய தேசிய ராணுவத்தில் இணைகிறான் செல்லையா. இந்திய தேசிய ராணுவம் நிலை குலைந்தவுடன் மீண்டும் தன்னுடைய முதலாளியிடம் வருகிறான். போர்க்காலங்களில் அனைத்து வட்டிக்கடைகளும் மூடப்பட்டதால், அவர்களுடைய வட்டிக்கடையும் மூடப்பட்டது. போர் ஓரளவிற்கு கட்டிற்குள் வந்ததும் மீண்டும் திறக்க ஆயத்தமாகிறார் செட்டியார். தன்னுடைய படைப்பிரிவிலிருந்து வெளியாகும் காலத்தில் சில மற்ற ராணுவ வீரர்களைக் கொன்றுவிட்டு செல்லையாவும், மற்ற வீரர்களும் வந்திருப்பது செட்டியாருக்கு தெரிய வருகிறது. அவன் தன்னுடைய தொழிலுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என நினைத்து தன் மகளை தன்னிடம் வேலை பார்க்கும் மற்றொருவனுக்கு மணம் முடிக்கிறார்.

அக்கால கட்டத்தின் காதலையும், அதிலுள்ள எல்லைகளையும் மிக அழகாகக் காட்டியுள்ளார் சிங்காரம் அவர்கள். என்னதான் ராணுவத்திலே இருந்திருந்தாலும் அவனால் அவன் முதலாளியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது. செல்லையாவைக் காதலித்தாலும் அப்பாவின் பேச்சைத்தான் கேட்க வேண்டும். செல்லையாவுக்க் தன் மகளைத் தரவில்லையென்றாலும் அவனுக்கான எதிர்காலத்திற்கானவற்றை செட்டியார் செய்வது என நாவல் உண்மைக்கு அருகில். மற்றோர் சிறந்த நாவல்.

Similar Posts

  • |

    உன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு

    வெ. இறையன்பு அவர்களால் சுட்டி விகடனில் எழுதப்பெற்று தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர். சுட்டி விகடனில் வெளிவந்த‌தால் முற்றிலும் குழந்தைகளை நோக்கி எழுதப்பட்ட கட்டுரைகள். பெரும்பாலும் நீதி போதனைக் கட்டுரைகள். அத்தோடு அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டவை. உதாரணமாக தேர்வு சமயத்தில் வெளிவந்த இதழில் தேர்வு தொடர்பான சில அறிவுரைகள், விடுமுறைக்கால இதழில் விடுமுறை தொடர்பான சில ஆலோசனைகள். அதனால் இக்கட்டுரைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும்போது ஒரு புத்தகத்திற்கான‌ ஒட்டுமொத்த வடிவம் இல்லை. ஆனால் இது போன்ற…

  • இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

    மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதி அவர்களால் பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட‌ கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து எழுதப்பட்ட குவியல் அல்ல. கற்பு, அரசியல், தமிழக, இந்திய, உலக‌ இலக்கியம், சினிமா, இலக்கணம், உலக‌ப்போர் என பல்வேறு துறைகள் தொடர்பான கருத்தாளமிக்க‌ கட்டுரைகள். மிகவும் மூத்த படைப்பாளி என்பதனால் அவருடைய சொல் வண்ணமும், தகவல்களின் தரமும் இயல்பாகவே உயர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆரம்ப நிலை கட்டுரைகளில் இல்லாமல், பின்னர் வரும் கட்டுரைகளில் உள்ள…

  • | |

    மாங்கொட்ட சாமி – புகழ்

    எழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும். இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான…

  • | |

    மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்

    எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே….

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • |

    THE ANTHROPOCENE REVIEWED – JOHN GREEN (புத்தகம் – 2)

    John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என‌ எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.