100 புத்தகங்கள்

இந்த வருட இறுதிக்குள்ளாக 100 புத்தகங்களை படிப்பது என்ற மிக முக்கியமான முடிவு ஒன்றினை இன்றிலிருந்து துவங்குகிறேன். கடந்த ஆண்டே செயல்படுத்தியதுதான் என்றாலும் கடந்த ஆண்டில் நான் திட்டமிட்ட எண்ணிக்கையை அடைய முடியவில்லை. அதனால் மீண்டும் ஒரு சோதனை முயற்சி.

நான் இன்னும் வாசிப்பில் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகம். அதனால் இந்த முறை புத்தகங்களை பட்டியலிடாமல் என்னிடம் இருக்கும் புத்தகங்களிலிருந்தே வாசிக்கலாம் என நினைக்கிறேன். ஒருவேளை வரும் காலங்களில் பட்டியலிட்டு வாசிக்கலாம்.

ஒவ்வொரு புத்தக வாசிப்பின் முடிவிலும் அப்புத்தகத்தினைப் பற்றிய என்னுடைய புரிதலை என்னுடைய வலைத்தளத்தில் பதிவிடுவதாகத் திட்டம்.

நன்றி.

Similar Posts

  • அரசியல் கட்சியை நடத்துவது எப்படி?

    நீண்ட நாட்களாக அனைத்து அரசியல் கட்சி நண்பர்களும் கேட்டுக்கொண்டதால் தமிழகத்தில் அரசியல் கட்சி எப்படி நடத்துவது என்ற செய்முறையை இன்று வெளியிடுகிறோம். இந்த வழிமுறைகள் புதியதாக கட்சி தொடங்கியிருப்பவர்களும், ஏற்கனவே கட்சி தொடங்கியிருப்பவர்களும், ஆட்சிக்கு வந்தவர்களுக்கும், ஆட்சிக்கு வரவிருப்பவர்களுக்கும், ஆட்சிக்கு வராதவர்களுக்கும், ஆட்சிக்கு வரவிருப்பவர்களுக்கு துணை நிற்பதற்காக கட்சி நடத்துபவர்களுக்கும் என அனைவருக்கும் ஏற்றது. இதனை பின்பற்றுவதால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு இந்த கட்டுரை எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என்பதை ஆழ்மன பயத்தோடு முன்னரே கூறிக்கொள்கிறோம். ஒவ்வொரு…

  • இரண்டு மரங்கள் – பாவண்ணன்

    பாவண்ணன் அவர்களால் வெவ்வேறு காலங்களில் எழுதப்பெற்ற ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு.புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியீடு. வெளிவந்த ஆண்டு 2008. கையெழுத்துகூடுஇனிப்பும் கசப்பும்பற்றுதல்இரண்டு மரங்கள்கடல்பொங்கல்உயரத்தை நோக்கிவரிசை கையெழுத்துவாழாவெட்டியாக தன்னுடைய அண்ணன் வீட்டில் வந்து தங்கும் அம்பிகா, இருபது வருடங்கள் கழித்து அவள் கணவனுடைய மரணத்திற்கும் செல்ல மறுக்கிறாள். அதன் பின்னர் அவருடைய சொத்து வாரிசாக உரிமை கொண்டாடவும் மறுக்கிறாள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தவே வீட்டை விட்டு வெளியேறுகிறாள். கூடுதன்னுடைய குடும்பத்தினரோடு மன வருத்தம் கொண்டு வெளியேறி வேறோர் ஊரில்…

  • its, it’s என்ன வேறுபாடு ?

    ஆங்கிலத்தில் மிக அதிகமாக உபயோகிக்கக்கூடிய நூறு வார்த்தைகளில் it ஒன்று. ஆனால் அதில் உள்ள வேறுபாடு அறியாமலேயே பல இடங்களில் அந்த வார்த்தையை உபயோகிக்கின்றோம். its என்பது it என்பதன் possessive form. அதாவது உடைய என்ற பொருளில் வருகிறது. அவனுடைய, அவளுடைய, கண்ணனுடைய என்பது போன்ற இடங்களில். உதாரணத்திற்கு பின்வரும் வாக்கியத்தைக் கவனியுங்கள்.  “I have to fix my bike. Its front wheel came off”. இதில் its என்பது அதன் என்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.