|

முத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி

அழகிரிசாமி அவர்களின் பத்து கதைகளை தொகுத்து அம்ருதா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள சிறுகதை நூல். தொகுத்தவர் திலகவதி. ராஜா வந்திருக்கிறார்,அக்கினிக் கவசம்,திரிபுரம்,புன்னகை,புது உலகம்,தியாகம்,தரிசனம்,முருங்கைமர மோகினி,மனப்பால், சிறுமைக்கதை ஆகிய பத்துக்கதைகளை தேர்வு செய்துள்ளார். இதில் ராஜா வந்திருக்கிறார் தமிழக பள்ளிகளில் பாடத்திட்டமாக உள்ள கதை. பெரும்பாலானவர்கள் படித்திருக்கும் வாய்ப்பு உண்டு. மிக அழகாக ஓர் ஏழைக்குடும்பத்தின் சித்திரம் வெகு இயல்பாக அக்கதையினூடே ஓடுவது அக்கதையில் நான் மிகவும் ரசித்த ஒன்று.

நான் மிகவும் ரசித்த மற்ற கதைகள் முருங்கை மர மோகினி மற்றும் திரிபுரம். ஒரு முருங்கைக்காய் மீது தீராக் காதல் கொண்டு அதனை யாருக்கும் தெரியாமல் பறித்துக்கொண்டு வந்து அதனை சாப்பிடும் பொழுது அதனை வேண்டாமென‌ ஒதுக்கி விடுவதே கதை. நம் வாழ்வின் ஆசைகளும் அப்படித்தானே. அனைத்துக் கதைகளின் மற்றோர் சிறப்பென நான் கருதும் ஓர் விஷயம் கதைகள் வாழ்வின் ஓர் தருணத்தில் தொடங்கி மற்றோர் தருணத்தில் முடிந்து விடுபவையாகவே உள்ளன. கதைகளை முற்றுப்பெறச் செய்யும் நோக்கில் கதை சுருக்கப்படவில்லை. விரிந்து செல்லும் ஒரு புனல் போல கதை நின்று விடுகிறது. விரித்துச் செல்வது வாசகரின் வாசிப்பே.

வாசிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு.

Similar Posts

  • |

    கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

    1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம். அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய…

  • முத்துக்கள் பத்து – தி.ஜானகிராமன்

    ஜானகிராமன் அவர்களின் ப‌த்துக் கதைகளின் தொகுப்பு. அம்ருதா பதிப்பகம் வெளியீடு. கங்கா ஸ்நானம் சிலிர்ப்பு பரதேசி வந்தான் பிடி கருணை முள்முடி மேரியின் ஆட்டுக்குட்டி கோதாவரிக்குண்டு பசி ஆறிற்று சத்தியபாமா செய்தி இவையே அந்த பத்து சிறுகதைகள். வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

  • | |

    மாங்கொட்ட சாமி – புகழ்

    எழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும். இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான…

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

  • |

    Rise of the Planet of the Apes

    2011 ஆம் ஆண்டு Rupert Wyatt இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நடிப்பு James Franco. இவர்தான் சமீபத்தில் வெளிவந்த Interview மற்றும் 127 Hours திரைப்படங்களில் நடித்தவர். நாயகி Freida Pinto. இவர் இந்தியப் பெண் . Slumdog Millionaire படத்தில் நடித்த அதே பெண். கதைப்படி வில் ரோட்மென் ஒரு ஆய்வாளர். அல்சமீர் ( Alzheimer) போன்ற மறதி நோய்களுக்கான‌ மருந்தினைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ALZ-112 என்னும் மருந்தைக் கண்டறிகிறார். பின்னர் அதனை சோதனைக்காக…

  • | |

    தூய்மை இந்தியா

    சமீபத்தில் நமது பிரதமர் அவர்களால் தூய்மை இந்தியா துவங்கப்பட்டதை விமர்சனம் செய்து பல்வேறு விதமான கட்டுரைகளும் பேச்சுக்களும் இணையத்தில் உலாவுகின்றன. ஒரு எளிய இணைய வாசகன் வாசிக்கும்பொழுது அவன் நம்பக்கூடிய வண்ணமே அப்பதிவுகள் இடப்படுகின்றன. எதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள்? ஒன்று அவர்கள் மோடியை வெறுப்பவராகவோ, அல்லது எதிர்க் கட்சியை சேர்ந்தவராகவோ இருப்பார். ஆனால் அவர்களின் எண்ணங்களை இணையத்தில் முடிந்த அளவிற்கு பரப்பி அதனைப் பெருக்குகிறார்கள். உதாரணமாக ஒரு அமைச்சர் குப்பையை ஓரிடத்தில் பரப்பி வைத்துவிட்டு பின்னர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.