| |

பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

perum_puhalumஎசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான ஒற்றைப்படை அறிவுரை நூல் என்பதனால் சிறுவர்களுக்கு ஆரம்பகால ஒழுக்கத்தினை வளர்க்கும் பொருட்டு வாசிக்கத் தரலாம்.

Similar Posts

  • |

    இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் ‍- டாக்டர் ஜாகிர் நாயக்

    இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி ஜாகிர் நாயக் அவர்கள் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம். வெளியீடு சாஜிதா புக் சென்டர். வருடம் ந‌வம்பர் 2010. தமிழாக்கம் முஹம்மது. இஸ்லாம் மீதான விமர்சனமாக வைக்கப்படும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் ஆகியவற்றை மறுத்து குரானில் கூறப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் விளக்கங்களையும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக். ஆன்மீக உரிமைகள்பொருளாதார உரிமைகள்சமூக உரிமைகள்கல்வி உரிமைகள்சட்ட உரிமைகள்அரசியல் உரிமைகள் இவற்றைப் ப‌ற்றி ஒவ்வொரு அதிகாரமாக விளக்குகிறார். இறுதியாக…

  • மாற்றத்தின் மாற்றம்

    எத்தகைய மாற்றத்தின் மீதும் மீண்டும் மாற்றம் ஏற்படும் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கின்றது. Facebook ஒட்டுமொத்த இணைய உலகை ஆட்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் அதனுடைய ஒரு பகுதி சேவையை மட்டுமே தன் முழு சேவையாகக் கொண்டு கோலோச்சுகின்றது WhatsApp. See the slides below for details.

  • பண‌ம் அச்சடிப்பதை நிறுத்தினால் என்ன?

    இந்த பதிவைப் படிப்பதற்கு முன் இந்த பதிவைப் படித்திருத்தல் சிறந்தது. அதிக பணம் அச்சடித்தால் என்ன? அதிக பணம் அச்சடித்தால் பணத்தின் மதிப்பு சரியுமென்றால் பணம் அச்சடிப்பதை நிறுத்தினால் பண மதிப்பு உயரத்தானே வேண்டும்? கேள்வி சரிதான். என்ன நடக்கும்? பணத்தின் புழக்கம் குறைவதால் மக்களிடம் அதிக பணம் புழங்காது. ஆனால் பொருள்களின் உற்பத்தி, மனித வளம் போன்றவை அதிகரித்துக்கொண்டே வரும். இதனால் குறைவான பணம். அதிக பொருள் சந்தையில் நிலவும். பொருள்களின் விலை குறையும். அதோடு குறைவான…

  • அறம் – ஜெயமோகன்

    உண்மை மனிதர்களின் கதைகள். ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. வம்சி பதிப்பக வெளியீடு. ஒரு சில நூல்களின் மேல் நம் கருத்தையோ, எண்ணத்தையோ வைப்பதற்கு குறைந்த பட்ச த‌குதி என்ற ஒன்று எப்போதும் தேவை என்று நினைப்பவன் நான். இதனை எழுதும் இந்த வேளையில் அத்தகுதி இல்லாதவனாகவே உணர்கிறேன், இருக்கிறேன். ஆதலால் இந்த நூலைப் பற்றி எந்த பார்வையையும் நான் வைக்கமாட்டேன், இப்போதைக்கு. ஆனால் காரணமில்லாமல் ஒரு எழுத்தின் வழியாக மட்டுமே என்னை அழ வைத்த நூல், இது….

  • |

    வைகறை மேகங்கள் ‍- வைரமுத்து

    வைரமுத்து அவர்களால் எழுதப்பெற்று, அவருடைய 17 ஆம் வயதில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. வெளிவந்த ஆண்டு 1972. பல்வேறு பதிப்புகள் கண்டு தற்போது முப்பதாம் பதிப்பாக வெளிவந்துள்ளது 2011 ஆம் ஆண்டில். அதற்குப் பின்னர் எத்தனை பதிப்புகள் வந்துள்ளன எனத் தெரியவில்லை. வைரமுத்துவை சிறந்த பாடலாசிரியர் எனவும் அவர் கவிஞர் அல்ல எனவும் ஒரு பார்வை நீண்டகாலமாக முன்வைக்கப்படுகிறது. கவிதையை வாசிப்பவன் என்ற அளவில் எனக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கிறது. நமக்குத் தெரிந்த ஏதோ ஒன்றின், தெரியாத அல்லது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.