|

இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் ‍- டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி ஜாகிர் நாயக் அவர்கள் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம். வெளியீடு சாஜிதா புக் சென்டர். வருடம் ந‌வம்பர் 2010. தமிழாக்கம் முஹம்மது. இஸ்லாம் மீதான விமர்சனமாக வைக்கப்படும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் ஆகியவற்றை மறுத்து குரானில் கூறப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் விளக்கங்களையும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக்.

ஆன்மீக உரிமைகள்
பொருளாதார உரிமைகள்
சமூக உரிமைகள்
கல்வி உரிமைகள்
சட்ட உரிமைகள்
அரசியல் உரிமைகள்

இவற்றைப் ப‌ற்றி ஒவ்வொரு அதிகாரமாக விளக்குகிறார். இறுதியாக கேள்வி பதில் பகுதி. பங்கேற்பாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வாசிக்கலாம்.

Similar Posts

  • ஒநாய்குலச்சின்னம் – சி.மோகன் (ஜியாங் ரோங்க்)

    சமீபத்திய ஆண்டுகளில் நான் படித்த, கேட்ட‌ பெரும்பாலான இடங்களில் ஓநாய் குலச்சின்னம் என்ற நாவலின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருந்தது. இது தொடர்பாக விவாதங்கள்,பாராட்டுக்கள் என ஏதாவது ஒன்று. அதனால் அந்த புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற வலுவான எண்ணத்தால் உந்தப்பட்டு அந்த புத்தகத்தை வாசித்தேன். [callout title=”ஓநாய் குலச்சின்னம் என்ன நாவல்?”]1965 களில் மங்கோலிய மேய்ச்சல் நிலமும், அம்மக்களின் குலச்சின்னமான ஓநாய்களும் ஹேன் சீனர்களால் விவசாயத்திற்காகவும், வளர்ப்பு மிருகங்களுக்காகவும் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டது என்பதை ஒரு சீனனின் பார்வையில் விவரிக்கும்…

  • |

    உன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு

    வெ. இறையன்பு அவர்களால் சுட்டி விகடனில் எழுதப்பெற்று தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர். சுட்டி விகடனில் வெளிவந்த‌தால் முற்றிலும் குழந்தைகளை நோக்கி எழுதப்பட்ட கட்டுரைகள். பெரும்பாலும் நீதி போதனைக் கட்டுரைகள். அத்தோடு அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டவை. உதாரணமாக தேர்வு சமயத்தில் வெளிவந்த இதழில் தேர்வு தொடர்பான சில அறிவுரைகள், விடுமுறைக்கால இதழில் விடுமுறை தொடர்பான சில ஆலோசனைகள். அதனால் இக்கட்டுரைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும்போது ஒரு புத்தகத்திற்கான‌ ஒட்டுமொத்த வடிவம் இல்லை. ஆனால் இது போன்ற…

  • | |

    லஜ்ஜா – அவமானம்

    1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக  சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார். கதை இதுதான். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து…

  • | |

    மாங்கொட்ட சாமி – புகழ்

    எழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும். இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான…

  • |

    ரகுவம்சம் – அ.வெ.சுப்பிரமணியன்

    ராமன் பிறந்த ரகுவம்சத்தின் வரலாறு, சுருக்கமான வடிவில். அ.வெ.சுப்பிரமணியன் அவர்களால் காளிதாசனின் மூலவடிவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. எளிய பிழையற்ற மொழிநடை. திலீபனின் தொடங்கி, ரகு, அஜன், தசரதன் வழியாக ராமனின் வரலாறைக் கூறும் நூல். சூர்ய குலம் எனப்படும் ரகுவம்ச வரலாறை அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம். ஒட்டுமொத்த அரசகுலத்தின் தோற்றம் கிடைக்கும். ரகுவம்ச மன்னர்களின் பெருமையைப் பற்றிக் கூறும் நூல். ஆதலால் ஒரு வரலாற்று நூல்போலக் கொள்ள இயலாது. ஆழ்ந்த மத நம்பிக்கையாளர்களுக்கான ஆரம்பப்…

  • |

    கடல்புரத்தில் – வண்ணநிலவன்

    வண்ணநிலவன் அவர்களால் எழுதப்பெற்றது. பிலோமி என்ற ஓர் கடற்கரை கிராமத்துப் பெண் மற்றும் அவளது உறவுகள் நண்பர்கள் பற்றிய நாவல். என்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம் கதாபாத்திரங்களை லட்சியவாதிகளாக எல்லாத் தருணங்களிலும் காட்டும் பொய்மை இந்த நாவலில் இல்லை. மிக இயல்பான மனிதர்களைப் போல சில சமயம் லட்சியம் பேசும் மனிதர்கள் வேறு சில சமயங்களில் யதார்த்தம் பேசுகிறார்கள். ஒரு சமயத்தில் தன் மனைவியை பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றோர் சமயம் அவளை நினைத்து பெருமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.