|

रंग दे बसंती

நான் இந்த வாரம் ரங்க் தே பசந்தி என்ற இந்தி திரைப்படத்தினைப் பார்த்தேன். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா. லண்டனில் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் சூ மெக்கின்லி தன்னுடைய தாத்தாவினுடைய டைரி ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அவளுடையா தாத்தா 1930களில் இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் கர்னல் ஆக இருந்தவர். அவர் அந்த டைரியில் மூன்று இந்தியப்போராட்ட வீரர்களின் கைது மற்றும் அவர்களுடைய மரணதண்டனை பற்றியும், அவர்களுடைய மன உறுதியைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அதனால் ஈர்க்கப்படும் சூ அதனை திரைப்படமாக எடுப்பதற்காக டெல்லி வருகிறாள். அங்கு தன்னுடைய தோழி சோனியாவுடன் திரைப்படத்தில் நடிப்பதற்கான நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறாள். பின்னர் சோனியாவின் நண்பர்களான டல்ஜித் சிங், கரண், சுகி ராம் மற்றும் அஸ்லாம் கானை சந்திக்கும் அவள், அவர்களே இந்தக் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள் எனக் கண்டடைகிறாள். முதலில் மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஏற்றுக்கொள்கிறார்கள். டல்ஜித் சிங் சந்த்ரசேகர் ஆசாத் ஆகவும், கரண் பகத் சிங் ஆகவும், சுகி ராம் சிவராம் ராஜகுரு ஆகவும் அஸ்லாம் கான் அஸ்ஃபகுல்லா கானாகவும் கதாபாத்திரம் ஏற்கிறார்கள். இவர்களோடு பின்னாளில் தீவிர வலதுசாரியான லக்ஷ்மண் பாண்டேவும் ராம் பிரசாத் பிஸ்மில் கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார். ஏற்கனவே முந்தையவர்களோடு மோதலில் இருப்பதால் லக்ஷ்மண் பாண்டே யாருடனும் பெரிதாக நெருக்கம் காட்டாமல் இருந்து வருகிறான். ஆரம்பத்தில் முற்றிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் நண்பர்கள், நடிக்க நடிக்க அந்தக் கதாபாத்திரங்களுக்குள் ஐக்கியமாகிறார்கள். நாட்டின் நலனுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் அவர்களுடைய எண்ணங்கள் வலுப்பெற்றுக்கொண்டே வருகின்றன.

இதற்கிடையில் அவர்களுடைய நண்பன் அஜய் சிங் ரதோட் இந்திய விமானப்படையில் லெப்டினன்ட் ஆக இருக்கிறான். அவனுக்கும் சோனியாவுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற‌ இருக்கிறது. இந்நிலையில் மிக் 21 போர் விமானத்தில் ஏற்படும் கோளாறால் அஜய் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் பாதுகாப்புத் துறை அமைச்சர், மலிவான, தரமில்லாத உதிரி பாகங்களை வாங்கியதே காரணமாக இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அஜய் கவனக்குறைவாக விமானத்தினை இயக்கியதே விபத்திற்கு காரணம் என அறிவிக்கிறது. இதனால் வெறுப்படையும் அஜயின் அம்மா, மற்றும் நண்பர்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சரை கைது செய்யக்கோரியும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அரசாங்கம் அவர்கள் மீது வன்முறையை ஏவி போராட்டத்தை கலைக்கிறது. அதில் அஜயின் அம்மா காயமடைந்து கோமாவிற்கு செல்கிறாள். அந்த வன்முறையின் பின்னால் இருப்பது, தான் இதுவரை பின்பற்றி வந்த வலதுசாரி அமைப்பின் தலைவர்கள் என்பதனை அறியும் லக்ஷ்மி பாண்டே அவர்களிடமிருந்து முற்றிலும் விலகி, நண்பர்களோடு நெருக்கமாகிறான். பின்னர் ஆவேசமடையும் நண்பர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரைக் கொலை செய்யத் திட்டமிட்டு அதனை செய்தும் முடிக்கிறார்கள்.

அரசும், பத்திரிக்கைகளும் கொலை தீவிரவாதிகளால் செய்யப்பட்டதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சரை தியாகியாகவும் சித்தரிக்கின்றன‌. அதனால் மீண்டும் வெறுப்படையும் நண்பர்கள், டெல்லி வானொலி நிலையத்தினைக் கைப்பற்றி தாங்கள் தான் கொலை செய்ததாகவும், தாங்கள் தீவிரவாதிகள் அல்ல எனவும், பாதுகாப்புத்துறை அமைச்சரின் ஊழ‌ல் பற்றியும் அதனால் தங்கள் நண்பன் இறந்தது பற்றியும் அறிவிக்கிறார்கள். அவர்கள் வானொலி நிலையத்தில் இருப்பதை அறியும் அரசாங்கம், அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சுட்டுக் கொலை செய்கிறது. அவர்கள் இறப்பதற்கு முன் பேசிய வானொலி உரையாடல் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தி இளஞர்கள் ஊழ‌லுக்கு எதிராகப் போராட சபதம் எடுப்பதாக படம் நிறைவடைகிறது.

நல்ல திரைப்படம்.

Similar Posts

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • |

    காவி கார்ப்பரேட் மோடி

    மோடி அவர்களைப் பற்றி பல்வேறு காலகட்டங்களில் வினவு இணையதளம் மற்றும் புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். நூலகத்தின் காட்சிப்பலகையில் வைக்கப்பட்டிருந்ததால் இப்புத்தகத்தை வாசித்தேன். முற்றிலும் ஒற்றைச்சார்பு கொண்ட கட்டுரைகள். ஒற்றை வரி இதுதான். மோடி வெறுப்பு. அதற்கான சம்பவங்களையெல்லாம் எடுத்து கட்டுரையாக்கியிருக்கிறார்கள். அதிலும் கீழ்த்தரமான வார்த்தைகள். இரண்டாவது நோக்கம் புத்தகம் வெளிவந்த காலம் 2013 ஆம் ஆண்டு. அப்போதைக்குத்தான் மோடி அவர்களை பிரதமராக அறிவிப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அதனால் மோடியின் மதிப்பினைக்த…

  • | |

    அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

    கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி. அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

  • |

    ஏறுவெயில் – பெருமாள் முருகன்

    எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை. கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட…

  • |

    நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

    நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம். அந்த பத்தொன்பது பேர் இவர்களே மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு பி.ஆர்.அம்பேத்கர் ராம்மோகன் ராய் ரவீந்திரநாத் தாகூர் பாலகங்காதர திலகர் ஈ.வே.ராமசாமி முகம்மது அலி ஜின்னா சி.ராஜகோபாலச்சாரி ஜெயப்பிரகாஷ் நாராயணன் கோபால கிருஷ்ண கோகலே சையது அகமது கான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.