|

ஏறுவெயில் – பெருமாள் முருகன்

Eruveyil

எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை.

கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தன் மனைவியோடு அருகில் ஏரிக்கு பக்கத்தில் தங்கிவிடுகிறார் தாத்தா. இரண்டு மகன்கள் அவர்களின் மாமனார் வீட்டோடு சென்றுவிட பொன்னையாவின் தந்தை மட்டும் அருகில் நான்கு ஏக்கர் நிலத்தை அதில் விவசாயம் பார்க்கிறார். அதனைத் தொடர்ந்து தாத்தாவின் குடிசையும் வெள்ளத்தில் மூழ்கிவிட தாத்தாவும் பாட்டியும் இவர்களோடு வந்து பக்கத்திலேயே தங்கிவிடுகிறார்கள். அதனைத்தொடர்ந்து ஏற்படும் உறவுச்சிக்கல்களும், பொருளாதார சிக்கல்களும், சமூகச் சிக்கல்களுமே இந்நாவலின் கதை.

இந்நாவலின் என்னைக் கவர்ந்த அம்சம் வட்டார வழக்கு. அந்த நிலப்பகுதியைச்சேர்ந்தவராகவோ அல்லது அதன் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்தவராக இருப்பின் அதனை எளிதில் உள்வாங்க முடியும். இந்நாவலின் தொடக்கத்தில் தன்னுடைய கிணற்றை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு மண்ணால் நிரப்புவதை நினைத்துக் குடித்துவிட்டு புலம்பும் தாத்தாவைத் திட்டிக்கொண்டே தேற்றும் பாட்டி மொத்த நாவலின் உச்சம். அதனைத் தொடர்ந்து மிகப்பேருருவாக நாவலை எண்ணிக்கொண்டு வாசித்தபொழுது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் நாவல் உடனடியாக சராசரிக்குள் திரும்புகிறது.

வாசிக்கலாம்.

Similar Posts

  • | |

    லஜ்ஜா – அவமானம்

    1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக  சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார். கதை இதுதான். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து…

  • முத்துக்கள் பத்து – தி.ஜானகிராமன்

    ஜானகிராமன் அவர்களின் ப‌த்துக் கதைகளின் தொகுப்பு. அம்ருதா பதிப்பகம் வெளியீடு. கங்கா ஸ்நானம் சிலிர்ப்பு பரதேசி வந்தான் பிடி கருணை முள்முடி மேரியின் ஆட்டுக்குட்டி கோதாவரிக்குண்டு பசி ஆறிற்று சத்தியபாமா செய்தி இவையே அந்த பத்து சிறுகதைகள். வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

  • |

    கடல்புரத்தில் – வண்ணநிலவன்

    வண்ணநிலவன் அவர்களால் எழுதப்பெற்றது. பிலோமி என்ற ஓர் கடற்கரை கிராமத்துப் பெண் மற்றும் அவளது உறவுகள் நண்பர்கள் பற்றிய நாவல். என்னை மிகவும் கவர்ந்த ஓர் அம்சம் கதாபாத்திரங்களை லட்சியவாதிகளாக எல்லாத் தருணங்களிலும் காட்டும் பொய்மை இந்த நாவலில் இல்லை. மிக இயல்பான மனிதர்களைப் போல சில சமயம் லட்சியம் பேசும் மனிதர்கள் வேறு சில சமயங்களில் யதார்த்தம் பேசுகிறார்கள். ஒரு சமயத்தில் தன் மனைவியை பயங்கரமாகத் திட்டும் மிக்கேல், மற்றோர் சமயம் அவளை நினைத்து பெருமை…

  • |

    रंग दे बसंती

    நான் இந்த வாரம் ரங்க் தே பசந்தி என்ற இந்தி திரைப்படத்தினைப் பார்த்தேன். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இயக்கம் ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா. லண்டனில் திரைப்படக் கல்லூரியில் படிக்கும் சூ மெக்கின்லி தன்னுடைய தாத்தாவினுடைய டைரி ஒன்றைக் கண்டுபிடிக்கிறாள். அவளுடையா தாத்தா 1930களில் இந்தியாவில் பிரிட்டீஸ் ஆட்சிக்காலத்தில் கர்னல் ஆக இருந்தவர். அவர் அந்த டைரியில் மூன்று இந்தியப்போராட்ட வீரர்களின் கைது மற்றும் அவர்களுடைய மரணதண்டனை பற்றியும், அவர்களுடைய மன உறுதியைப்பற்றியும் எழுதியிருக்கிறார். அதனால்…

  • |

    ஆயிரம் கைகள் – ஜெயமோகன்

    ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரதமாகிய வெண்முரசுவில் வரும் பரசுராமன் தொடர்பான அத்தியாயங்களைத் திரட்டி ஒரு சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் கூறியது போல இது வெண்முரசில் நுழைய ஒரு வழி. பரசுராமனி பிறப்பிற்கான காரணம் முதல் பிருகுகுல பிராமணர்களிற்கும், யாதவ குடிகளுக்கும் பல தலைமுறைகள் நடந்த போரினைப் பற்றி சுருக்கமாக விளக்கும் நாவல். வாசிக்க வேண்டிய புத்தகம்.

  • |

    புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

    1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது. நாவல் நடைபெறும் காலம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.