பொருளாதாரம் பற்றிய புரிதல்
பொருளாதாரம் பற்றிய புரிதலுக்கான எளிமையான ஒரு காணொளி.
நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First…
அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். 1083 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர். எரிந்து சாம்பலாகாத இழைகளைக் கொண்ட மின்சார பல்பை உருவாக்க அயராது உழைத்துக் கொண்டிருந்தார். பல ஆண்டுகள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு கடைசியில் ஒரு நாள் தன் முயற்சியில் முழு வெற்றியும் பெற்றார். அப்போது அதிகாலை மூன்று மணி. மின்சார பல்பு பிரகாசமாக எரிவதைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்த அவர், தூங்கிக்கொண்டிருந்த தன் மனைவியைத் தட்டி எழுப்பினார். “ஏய்! பார் இந்த…
முந்தைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தின் இறுதியிலும், இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் அப்போதைய அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய தகவல் கூட்டணி ஆட்சியாக இருப்பதனால் தங்களால் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரமுடியவில்லை என்பது. 2009 ல் நடைபெற்ற தேர்தலில் 206 இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையைவிட 66 இடங்கள் குறைவாக வென்றிருந்தது. தாங்கள் பெரும்பான்மை பெறாத காரணத்தால் தன்னிச்சையாக எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க முடியவில்லை என மன்மோகன் சிங்கே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது…
நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று கவனித்தால் அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள். ஆனால் இசை என்பது உயர்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை பிற்கால உயர்குடி மக்கள்…
எல்லோரும் வாசிப்பதில்லை. ஒரு சிலரே வாசிக்கின்றனர். அவர்கள் எதற்காக வாசிக்கிறார்கள்? வாசிப்பு சோறு போடுகிறதா? ஆம்,உலகுக்கே சோறு போடுகிறது, இவ்வுலகையே இயக்குகிறது. உலகையே நிர்ணயம் செய்கிறது. வாசிப்பு இல்லாதவனிடத்து தானும் உலக நடப்பு தெரிந்ததைப்போலவும், தானும் வாசிப்பவன் என்ற எண்ணம் கொண்டிருக்கச் செய்தே இயற்கை மிகச்சரியான, நுட்பமானவர்களை மட்டுமே வாசிப்பு உலகத்தில் சேர்த்துக்கொள்கிறது. வாசிப்பவன் மற்றவர்களில் இருந்து எப்படி மேலோங்குகிறான்? மேல் என்பது என்ன? நாம் கொண்டுள்ள எண்ணம்தானே அன்றி வேறல்ல. என்னிடம் பணம் இருக்கிற பொழுது…
உலகமெங்கும் மக்களால் ஒரே மொழிதான் பேசப்படப்போகிறது, எழுதப்படப்போகிறது. இதனைச் சிலர் மறுத்தும் சிலர் ஏற்றும் பேசலாம். ஆனால் அதுதான் நடைபெறுகிறது. எந்த ஒரு மொழியும் அதன் வாழும் காலத்தை அதன் மாற்றங்களைக் கொண்டே நிர்ணயம் செய்து கொள்கிறது. காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டே, புதுப்பித்துக்கொண்டே வரக்கூடிய மொழிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன,எஞ்சியிருக்கும். இன்றைய நிலையில் உலகம் முழுவது ஏறத்தாழ 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றுள் உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழிகள் 20…