கேள்வியும் பதிலும்

நம்மிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. அது சரியானதா இல்லையா என்பதை விட என்னால் பதிலளிக்க முடிகிறது என்பதனையே நம் திறமையாக எண்ணுகிறோம். நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலோ, கேள்வி ஞானத்தின் அடிப்படையிலோ இப்போதைய கேள்விக்கான பதிலை உருவாக்குகிறோம். பின்னர் அதை மெய்ப்பிப்பதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் நம் மனம் இறங்கி விடுகிறது.

கற்றலின் முதல் நிலையென்பதே நமக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என ஒப்புக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது. நாம் ஒருவருடைய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நம் உள்மனதுக்குத் தெரியும், இது சரியான பதிலில்லை என்பது. ஆனால் அந்த எண்ணத்தை நாம் மென்மேலும் ஆள‌ சிந்திக்காமல் மற்றவரிடம் விளக்குவதைப் போலவே நம் மனதுக்கும் விளக்கி அந்த ஆரம்ப கட்ட அற உணர்வை மேலெழுந்து வரவிடாமல் செய்து விடுகிறோம்.

நம்மிட‌ம் கேள்விகளை விட மற்றவரின் கேள்விகளுக்கான பதில்கள் நிறைய உள்ளன. அறிதலின் அடிப்படை எப்போதும் கேள்வியோடிருப்பதே ஒழிய பதில்களோடு இருப்பது அல்ல. இதன் பொருள் பதில்கள் இல்லாம‌ல் இருப்பது என்பது அல்ல. உண்மையாக அறியத்தொடங்கும் பொழுது நம் ஒவ்வொரு கேள்விக்கும் கிடைக்கும் பதில், இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது. அதனைப் பின்தொடர்ந்து அந்த கேள்விக்கான பதிலை அறியும்பொழுது அது அதனுடைய கேள்விகளை கொண்டுள்ளது. ஆகவே கேள்வியோடிருங்கள் என்பதன் பொருள், பதிலில்லாமல் இருங்கள் என்பதல்ல. கேள்விகளோடு இருங்கள்; விடைகளைத் தேடுங்கள்; மீண்டும் அடுத்தகட்ட‌ கேள்விகளோடு இருங்கள் என்பதே.

Similar Posts

  • ஆசானுக்கு மீண்டும் ஒரு கடித‌ம்

    மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர வாசிப்புக்கு ஆளான நாள் முதல் என்னுள் நிகழும் இந்த மாற்றங்களை உள்ளும் புறமும் வேறோருவனாக இருந்துகொண்டு கவனித்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் தினமும் காலை ஐந்து மணிக்கு எழ முடிகிறது. தினமும் என் சொந்த திட்டங்களுக்காக 5 மணி நேரங்களை ஒதுக்க…

  • | | | |

    இந்தியாவில் முகலாயர்கள் – 2

    முகலாயர்களின் ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்ட கலாச்சார பாதகங்கள், பொருளாதார பாதகங்கள் பல இருப்பினும் அவர்களால் ஏற்பட்ட சில சமூக நன்மைகளும் உண்டு. முகலாய சாம்ராஜ்யத்தின் போதே இந்தியா நிர்வாக ரீதியில் இன்றைய‌ ஒருங்கிணைந்த வடிவை அடைந்தது. அதற்கு முன்புவரை வெவ்வேறு பகுதிகளும் வெவ்வேறு நிலச்சுவான்தாரர்களாலும், குறு மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்தது. முகலாயர்களே அவர்களை வென்று ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். முகலாயர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் அவ்வொருங்கிணைக்கும் பணியினையே செய்தனர். அவர்கள் இவற்றையெல்லாம் இந்தியா என்னும் தேசத்தை உருவாக்க…

  • உலகின் நிலைப்புள்ளி

    பெரும்பாலும் அதீத கேளிக்கைகள் நடைபெறும் நிகழ்வுகளுக்கு செல்லும் வழக்கம் இல்லாத நான் சமீபத்திய‌ காலங்களில் அத்தகைய‌ நிகழ்வுகளுக்குச் செல்கிறேன். அங்கே நான் கண்ட சில கேளிக்கை நிகழ்வுகள் சென்று வந்த சில நாட்களுக்குப் பின்னரும் என் மனதில் நீடித்துக்கொண்டே இருந்தது, முற்றிலும் கேளிக்கைக்காகவே இத்தனை வளம் வீணடிக்கப்படுகிறதே என. உதாரணமாக ஓர் மிகப்பிரமாண்டமான செயற்கை நீரூற்று. அங்கே அது கண்டிப்பாக தேவையில்லைதான். அதனைக் காண்பதனைத்தவிர வேறொன்றும் எவரும் எதுவும் செய்யவில்லை.மிக மோசமான நிலையில் வாழும் மக்களின் வாழ்க்கையினை…

  • விஜய் டிவியில் எப்படி Program நடத்துவது?

    எளிய‌ வழிமுறைகள். 1. எந்த program ஆ இருந்தாலும் அதுல குண்டா ஒரு பையன் இருக்கணும். (Ex 7C,கனா காணும் காலங்கள், Super Singer இப்படி) 2. program 30 நிமிஷம்னா விளம்பரம் கொறஞ்சது 6 மணி நேரமாவது போடணும். (Ex: இளையராஜா கனடாவுல பண்ற program 1 மணி நேரம்னா, விளம்பரம் 15 மணி நேரம் போடணும்.) 3. ஒரு program ஹிட் ஆயுடுச்சுன்னா அதுல கொறஞ்சது 25 Season வரைக்கும் கொண்டு போகணும். (Ex:…

  • |

    A Letter to President

    Dear Sir/Madam, I am Rajeshkumar, from a Village named Nattampatti, Pudukkottai, Tamil Nadu, India. I am a proud Indian who values our country’s rich heritage, culture, and traditions. I have a deep appreciation for the sacrifices our forefathers made to secure our freedom, and I am grateful for the democracy that we have today. I…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.