இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்த சாரதி அவர்களால் பல்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்ட‌ கட்டுரைகளின் தொகுப்பு.

indira-partha

ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து எழுதப்பட்ட குவியல் அல்ல. கற்பு, அரசியல், தமிழக, இந்திய, உலக‌ இலக்கியம், சினிமா, இலக்கணம், உலக‌ப்போர் என பல்வேறு துறைகள் தொடர்பான கருத்தாளமிக்க‌ கட்டுரைகள். மிகவும் மூத்த படைப்பாளி என்பதனால் அவருடைய சொல் வண்ணமும், தகவல்களின் தரமும் இயல்பாகவே உயர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆரம்ப நிலை கட்டுரைகளில் இல்லாமல், பின்னர் வரும் கட்டுரைகளில் உள்ள நகைச்சுவை உணர்வு நான் விரும்பி ரசித்த ஒன்று. அத்துணை சிறப்பான நகைச்சுவைகள். அந்த அந்த நிகழ்வுகளுடன் பொருந்திப் போகின்ற நகைச்சுவைகள். மொத்தத்தில் என் பார்வையில் இன்னுமொரு விழியைத்திறக்கும் நூல். 

Similar Posts

  • |

    உப்பு வேலி – ராய் மாக்சிம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)

    இந்தியாவின் குறுக்கே உப்பின்மீது சுங்கம் வசூலிப்பதற்காக ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட வேலியைப் பற்றி அறிந்துகொள்ளும் ஓர் ஆய்வாளர் அதனைத் தேடி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். ஆரம்ப ஆண்டுகளில் கண்டறிய முடியாமல் தன்னுடைய மூன்றாவது பயணத்தின் போது அதனைக் கண்டடைகிறார். அவருடைய அந்த ஒட்டு மொத்த பயணமும், அந்த வேலிக்குப் பின்னர் இருந்த ஆங்கிலேய வரலாற்று நிகழ்வுகளுமே இந்த உப்பு வேலி. இது ஓர் வரலாற்று நிகழ்வினை ஆவணப்படுத்தும் நாவல். கண்டிப்பாக இது வரை இது பற்றிய நாவலோ, ஆவணமோ…

  • | |

    பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

    எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…

  • |

    செங்கிஸ்கான் – முகில்

    ஆங்காங்கே சிதறிக்கிடந்த மங்கோலிய இனக்குழுக்களை ஒன்றினைத்த மாவீரன் செங்கிஸ்கான். அலெக்ஸாண்டரின் பேரரசைவிட நான்கு மடங்கு பெரிய மங்கோலியப் பேரரசை நிறுவியவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது முகிலின் செங்கிஸ்கான். இப்புத்தகம் செங்கிஸ்கானுடைய தாயார் மற்றோர் இனக்குழுவால் கவரப்படுவதிலிருந்து துவங்கி செங்கிஸ்கானுடைய வாரிசுகளால் எவ்வாறு மங்கோலிய பேரரசு பிரிக்கப்பட்டு, வலுவிழக்கத் தொடங்கியது என்பது வரை விவரிக்கப்பட்டுள்ளது. டெஜிமுன் என்னும் இயற்பெயர் கொண்ட செங்கிஸ்கான் அனைத்து மங்கோலிய இனங்களையும் வென்று, சீனாவையும் வென்ற பின்னரே செங்கிஸ்கான் என பட்டம் ஏற்றிருக்கிறார்….

  • | |

    Singapore in Transition: Hope, Anxiety and Question Marks – Han Fook Kwang

    It’s a collection of articles written by Mr.Han Fook Kwang who was previously the chief editor of The Strait Times. All these articles were published earlier in the newspaper itself. Now those articles were combined and released as a collection. Most of the articles covers the current issues and challenges in the public space. For…

  • |

    புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

    1960 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. அத்தோடு கதை மாந்தர்களின் நினைவின் வழியாக இந்திய கிராமங்களினுடைய வாழ்வியலும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிரானங்கள். நாவல் பாண்டியன் என்னும் இளைஞனைச் சுற்றியே நகருகின்றது. பாண்டியன் பிழைப்பிற்காக இந்தோனேசியா சென்று, பின்னர் இந்தோனேசியாவிலிருந்து மலேயாவிற்கு செல்வது, அங்கே நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வது என கதை நீள்கிறது. நாவல் நடைபெறும் காலம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.