| |

ஆசானுக்கு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

இந்த‌க்கடிதத்தினை தங்களுக்கு இன்னும் சில நாட்கள் கழித்தே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் முன்னரே எழுதினால் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுவீர்கள் என்று நம்பியே இப்பொழுதே எழுதுகிறேன். முதலில் சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். எனக்கு அவரைப்பற்றி தெரியாது. தங்களின் மூலமே தெரியும். இருந்தாலும் சரியான தூக்கம் மிக அவசியம் என்ற ஒற்றை சொல் எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது. சரியான அளவில் திட்டமிட்டு நாட்களை கடத்தும் எனக்கு கடந்த சில வாரங்களாக நான் திட்டமிட்டபடி தூக்கம் அமையவில்லை. அதனையே வழக்கமாக்கிக் கொள்ளலாம் என்ற நிலை வந்த தருணத்தில், அந்த வார்த்தை எனக்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு சிறிய திருப்பம். அது சிறியதே என்றாலும் சற்றே காலம் கடந்த பின்னர் இந்த விலக்கம் எத்துனை பெரிய மாற்றமாக இருக்குமென என்னால் உணரமுடிகிறது. அதற்கு நன்றி.

மற்றொன்று, நேற்று வெளியான தீர்ப்பு. நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் இதனைப் பற்றியே பொங்கினார்கள். இருந்தாலும் இன்றைய அதிகார அடுக்கு நன்கு அறியும் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் கும்பல் கடல் நுரை போல, பயங்கரமாக பொங்கும், ஆனால் ஒன்றும் இராது என. அவர்களும் இன்றும் நாளையும் இதனை வைத்து சில‌ ஒற்றை வரி கருத்துக்களை தெரிவித்து விட்டு அடுத்த செய்திக்கு போய்விடுவார்கள்.

ஆனால் என்னால் சற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதெப்படி இத்துனை விவரமாக நிருபிக்கப்பட்டும், அடுத்த தீர்ப்பில் முற்றிலுமாக இல்லையென்றாகி விட்டது? 100 லிருந்து 0. நம் தேசம் அத்தனை கீழ்த்தரமாக ஆகிவிட்டதா? அதிகாரமும் பணமும் உள்ளவர்களுக்கு சட்ட‌மென்பதே இல்லையா? அவர்கள் அதிலிருந்து விலக்கு பெற்றவர்களா? கண்டிப்பாக இந்த தீர்ப்புக்கு முன்னதாக நடைபெற்ற உள் வேலைகள் நமக்குத் தெரியாதுதான். இருந்தாலும் ஐந்து வருடத்தில் இரண்டு கோடியில் இருந்து 66 கோடியான சொத்து, எப்படி சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை சிறு குழந்தை கூட அறியுமே. என்னுடைய கேள்வியெல்லாம் நாங்கள் அப்படித்தான் தீர்ப்பு வழங்குவோம்? என்ன செய்ய முடியும் உங்களால் என்று இத்துனை வெளிப்படையாக நம் முகத்தில் காறி உமிழ்கிறார்களே? நம்மால் ஒன்றுமே செய்ய முடியாதா? என்ன செய்வது நாம்? எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீண்டும் ஊழல்வாதிகளுக்கே வாக்களீக்க வேண்டுமா? இது தொடர்பாக என்னால் யாரிடமும் விவாதிக்க முடியவில்லை. எல்லோரும் நேற்றைய இன்றைய செய்தித்தாள், சமூக ஊடக செய்திகளை மட்டுமே பேசுகிறார்கள். அதற்கு மேல் எதுவும் அவர்களால் பேச முடிவதில்லை. என் தேசத்தினைப் பற்றிய பெருமையே கொண்டிருந்த என் முகத்தில் இந்த தீர்ப்பு காறி உமிழ்கிறது. தங்கள் கருத்தினை அறியும் ஆர்வத்தில் இதை எழுதியிருக்கிறேன். நன்றி.

Similar Posts

  • ஆசானிடமிருந்து

    நான் எழுதிய மடலுக்கு ஆசானின் பதில். அன்புள்ள ராஜேஷ் புனைவை வாசிப்பதற்கான திறன் அனைவருக்கும் இயல்பிலேயே அமைவதில்லை. மிக‌ச்சிலருக்கே மொழியை உடனடியாக சித்திரங்களாக மாற்றிக்கொள்ள முடிகிறது என்பதைக் கண்டிருக்கிறேன். அது ஒரு பெரிய வரம். அந்த வரத்தை நாம் நம் நிறைவுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அது நம் கடமை என்றே சொல்லலாம் வாழ்த்துக்களுடன் ஜெ

  • தேசியக்கட்சிகள் ஏன் மாநிலத்தை ஆளக்கூடாது?

    முந்தைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தின் இறுதியிலும், இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் அப்போதைய அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய தகவல் கூட்டணி ஆட்சியாக இருப்பதனால் தங்களால் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரமுடியவில்லை என்பது. 2009 ல் நடைபெற்ற‌ தேர்தலில் 206 இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையைவிட 66 இடங்கள் குறைவாக வென்றிருந்தது. தாங்கள் பெரும்பான்மை பெறாத காரணத்தால் தன்னிச்சையாக எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க முடியவில்லை என‌ மன்மோகன் சிங்கே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது…

  • | | |

    தேர்தல்

    நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன். 1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம். 2. யார் வரவேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி யார் வரக்கூடாது என நினைக்கும் வேட்பாளரை வெல்லும் வாய்ப்புள்ளவருக்கு எக்காரணம் கொண்டு வாக்களிக்கமாட்டேன். ஏனெனில் நான் எந்த காரணத்திற்காக ஒரு வேட்பாளார் வரக்கூடாது என…

  • இந்தியக் கண்டுபிடிப்புகள்

    கடந்த நூறாண்டுகளில் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனை தொழில்நுட்பங்கள் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் பூஜ்யமே. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அதன் விகிதாச்சாரம் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் புறந்தள்ளக்கூடியதே. சரி 700 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாம் மட்டுமே 120 கோடி. சராசரியாக 6 விழுக்காடு உலக மக்கள் இந்தியர்கள். ஆனால் கண்டுபிடிப்புகள்? ஏன் இந்த நிலை? உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் தலைசிறந்த தொழில்நுட்ப…

  • ராமரும் பாபரும்

    திசம்பர் 6, 1992. அயோத்தியிலிருந்த பாபர் மசூதி முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்ட நாள். 20 ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது இறுதித்தீர்ப்பை அறிவித்து விட்டது. (அதனை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பது வேறு.) இந்நிலையில் எஸ். சொக்கனால் தொகுக்கப்பட்டு இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள நூல் அயோத்தி. முதல் பதிப்பில் பெற்ற வரவேற்பின் காரணமாக, இறுதித் தீர்ப்பு விவரங்களோடு, மேலும் பல விவரங்களையும் இணைத்து வெளிவந்துள்ள நூல்.  முதன் முதலாக பாபர் ஆப்கனிலிருந்து வந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.