டொலென்டினோ ஒப்பந்தம்

டொலென்டினோ அமைதி ஒப்பந்தம் என்பது பிப்ரவரி 19, 1797 ல் நெப்போலியனால் ஆளப்பட்ட புரட்சிகர பிரான்ஸிற்கும் அப்போதைய போப்பால் ஆளப்பட்ட பப்பல் தேசத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் ஆகும்.

அமைதி ஒப்பந்தம் எனக்கூறப்பட்டாலும் இது பப்பல் நாடுகளுக்கு வேறு வழி இல்லாத ஒரு நிலையிலேயே கையெழுத்தானது. நெப்போலியனின் புரட்சிகளின் விளைவாக ஏற்பட்ட போர் வெற்றிகளைத் தொடர்ந்து ஆஸ்திரியா,ஆர்கோலா போன்ற நாடுகள் நெப்போலியனின் கீழ் வந்தன. அதனைத் தொடர்ந்து வடக்கு இத்தாலியில் நெப்போலியனுக்கு எதிரியே இல்லாத ஒரு நிலை உருவானது. அதனால் பப்பல் நாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர விரும்பி பப்பல் நாடுகளுடன் நடைபெற்ற ஒன்பது மாத பேச்சு வார்த்தைகள் பயனளிக்காத‌தன் பொருட்டு 1797 பிப்ரவரியில் 9000 பிரெஞ்சு வீரர்கள் பப்பல் தேசத்தில் ஊடுருவினர். அதன் தொடர்ச்சியாக போரிட இயலாததால் டோலண்டினோ ஒப்பந்தத்திற்கு பப்பல் நாடுகள் உடன்படவேண்டியதாயிற்று.

இவ்வொப்பந்தத்தின்படி 36 மில்லியன் லிரே எதிர்கால இழப்பீடாக பிரான்சிற்கு வழங்கப்பட்டது.

ஏவிக்னான் நகரம் பப்பல் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு பிரான்சுடன் இணைக்கப்பட்டது. மேலும் ரோமாக்னா பகுதி பப்பல் நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு சிசால்பின் குடியரசு எனும் பிரான்சின் அயல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

அத்தோடு பப்பல் தேசத்தின் பாரம்பரிய ஓவியங்கள், கலைப்பொருட்கள் பிரான்சின் லூவரே அருங்காட்ட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எந்த பொருளைக் கொண்டுசெல்லலாம் என முடிவெடுக்கும் உரிமையும் பிரான்சிற்கே வழங்கப்பட்டது.

Similar Posts

  • பெரியம்மை என்னும் உயிர்கொல்லி

    இந்த நோயின் காரணமாக 1700 களின் பிற்பாதியில் ஐரோப்பாவில் மட்டும் 4 லட்சம் மக்கள் வருடத்திற்கு மாண்டனர். 20 ஆம் நூற்றாண்டில் 30 முதல் 50 கோடி மக்களின் மரணத்திற்கும் இந்த நோய் காரணமாக அமைந்தது. அந்நோய் smallpox எனப்படும் பெரியம்மை. ஆரம்பகாலத்தில் இந்நோய் தாக்கினாலே மரணம் என்ற நிலை இருந்தது. ஆரம்பத்தில் அரிப்பு, காய்ச்சல் எனத்தொடங்கும் இந்நோய் கிட்டத்தட்ட 12 நாட்களில் உயிரைக் குடித்துவிடும்.இந்நோய் Variola Major மற்றும் Variola Minor என்னும் இருவகை கிருமிகளால்…

  • |

    அவியளித்தல் : கேள்வியும் பதிலும்

    சமூகத்தேவை இல்லாத எந்த ஒரு பழக்க வழக்கங்களும் நிலைத்திடாது, அதற்கான தேவை முடிந்த பின்னரும் தொடரும் பழக்க வழக்கங்களே விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய காலத்தினை விட அந்தக் காலகட்டங்களில் போக்குவரத்து வசதிகளும் தொடர்புகளும் குறைவு. அக்காலகட்டங்களில் உணவு என்பது மிகப்பெரும் பிரச்சினை. அந்நிலையில் எவ்வாறு அவியளித்தல் என்பது சடங்காக நிலைபெற்றது? அதற்கான சமூகத்தேவைகள் என்ன? அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நெருப்பில் உணவுப்பொருட்களை இடுகிறோமா?  – மகிழ்நன் இருபதாண்டுகளுக்குமுன் இ.எம்.எஸ் ஒரு கட்டுரையில் இதைச்…

  • |

    தேவாரம் – திருநாவுக்கரசர்

    நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும், துன்பமில்லை.   பொருள்: எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார்….

  • Parliment of Great Britain

    House of Common & House of Lords என்பவை இங்கிலாந்தின் பாராளுமன்றத்தின் இரு அவைகள் ஆகும். இந்திய அரசியலமைப்பும் இங்கிலாந்து அரசியலமைப்பைக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. இங்கிலாந்தின் பாரளுமன்றம் பற்றிய சில தகவல்கள். இங்கிலாந்து பாரளுமன்றம் House of Common & House of Lords எனும் இரு அவைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.House of Common எனும் அவை 650 உறுப்பினர்களைக் கொண்டது. அனைத்து உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். 650 உறுப்பினர்களில் 533 உறுப்பினர்கள் இங்கிலாந்தில் இருந்தும் 40 உறுப்பினர்கள் வேல்ஸில் இருந்தும் 59 உறுப்பினர்கள் ஸ்காட்லாந்தில் இருந்தும், 18 உறுப்பினர்கள் வடக்கு…

  • | |

    ஒற்றைப்படையாகும் உலகம்

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.