இங்கிலாந்து ஸ்காட்லாந்து இணைப்பு

இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் 1707 வரை தனித்தனி நாடுகளாகவே இருந்தன. 1707 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தின் (Treaty of Union) வழியாக இரு நாடுகளும் (United Kingdom) ஐக்கிய இராஜ்ஜியம் என்ற ஒன்றாக இணைந்தன. இது நடைமுறைக்கு வந்த தினம் மே 1, 1707.

1603 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் ஒரே ராணியின் கீழ் (Union of Crowns) இணைக்கப்பட்டதிலிருந்தே அரசியல் ரீதியாக இரு நாடுகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் 1606,1667 மற்றும் 1689 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் எதிர்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக்கொண்டே சென்றது.

1690 களில் ஸ்காட்லாந்து தன்னை தலைசிறந்த வணிக நாடாக்கும் பொருட்டு பனாமா காலனியாக்கம் (டேரியன் திட்டம், Darien Scheme) என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. ஆனால் ஸ்பெயின் நாட்டின் எதிர்ப்பு, சிறப்பான நிர்வாகமின்மை போன்றவற்றால் அத்திட்டம் தோல்வியடைந்தது. அத்னைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதுவரை இரு நாடுகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தங்களது எதிர்ப்பைத் கைவிட்டனர். எதிப்பைக் கைவிட்டால் இங்கிலாந்தின் பொருளாதார உதவி கிடைக்கும் என்பதே காரணம்.

ஸ்காட்லாந்துடனான இணைப்பிற்கு இங்கிலாந்து முயன்றதற்கு முக்கிய‌ காரணம் ஸ்காட்லாந்தும் பிரான்சும் இணைந்துவிடும் அல்லது ஸ்காட்லாந்தை பிரான்சு கைப்பற்றிவிடும் என்பதே. அவ்வாறு ஆகும்பட்சத்தில் அது இங்கிலாந்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என இங்கிலாந்து எண்ணியது.

அதனால் ஸ்காட்லாந்திற்கு பொருளாதார உதவி செய்ய மறுத்து இணைப்பிற்கு மறைமுக அழுத்தம் அளித்தது. அதனைத் தொடர்ந்து 1705 ஆம் ஆண்டில் இரு நாடுகள் சார்பிலும் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் இருநாடுகளிலும் இருந்து தலா 31 உறுப்பினர்கள் இருந்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1706 ஜுலை 22 ல் ஒரு முடிவு எட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் நாடளுமன்றங்களில் சட்டம் இயற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1707 மே 1 முதல் ஐக்கிய ராஜ்ஜியம் என அறிவிக்கப்பட்டது.

இவ்வொப்பந்தத்தின்படி இரு நாட்டு நாடாளுமன்றங்களும் ஒன்றாக வெஸ்ட்மினிஸ்டரில் ஒரே நாடாளுமன்றமாக இணைக்கப்பட்டது. அதில் 45 ம‌க்களவை உறுப்பினர்களும், 16 பேராயர் அவை உறுப்பினர்களும் ஸ்காட்லாந்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்.

Similar Posts

  • | | |

    ரஷ்யப் புரட்சி மருதன்

    ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக்…

  • லிவ்ரே டூர்னாய்ஸ்

    லிவ்ரே டூர்னாய்ஸ் என்பது 1800 களின் பிற்பகுதியில் பிரான்சில் உபயோகப்படுத்தப்பட்ட பணமாகும். இது பிரான்சின் டூர்னாய்ன் மாகாணத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. இரண்டாம் பிலிப் மன்னன் இம்மாகாணத்தைக் கைப்பற்றியதும் அதுவரை புழக்கத்திலிருந்த லிவ்ரே பாரிசிஸிற்கு பதில் லிவ்ரே டூர்னாய்ஸை அதிகாரப்பூர்வ பணமாக அறிவித்தார். இருப்பினும் 1667 வரை லிவ்ரே பாரிசிஸும் புழக்கத்தில் இருந்தது. ஒரு லிவ்ரே ரூர்னாய்ஸ் என்பது 20 சூஸ்களாகவும் ஒரு சூஸ் என்பது 12 டினையர்ஸாகவும் பகுக்கப்படும். கடைசியாக 1720 ல் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் வரை லிவ்ரே…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • | |

    ஒரு வருட கொரோனா கற்றுத்தந்த பாடங்கள் – யுவல் நோவா ஹராரி

    FINANCIAL TIMES பத்திரிக்கையில் Yuval Noah Harari அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரையின் தமிழாக்கம். (https://www.ft.com/content/f1b30f2c-84aa-4595-84f2-7816796d6841) வரலாற்றின் பார்வையில் இந்த ஒரு வருட கொரோனா காலத்தை நாம் எப்படி மதிப்பிடலாம்? பெரும்பாலானவர்கள் கொரோனா இறப்புகள், இயற்கையின் முன் மனித குலத்தின் மனிதாபிமானமற்ற தன்மையையின் வெளிப்பாடு என எண்ணலாம். ஆனால் உண்மையில் மனிதகுலம் இன்னும் மனிதாபிமானத்தை முற்றிலுமாக விட்டுவிடவில்லை என்பதையே 2020 காட்டியிருக்கிறது. பெருந்தொற்றுக்கள் முந்தைய கால கட்டங்களைப் போல கட்டுப்படுத்தமுடியாதவைகளாக இப்போது இருக்கவில்லை. அறிவியல் அதனை கட்டுப்படுத்தக்கூடிய சவாலாக…

  • லூவர் அருங்காட்சியகம்

    லூவர் அருங்காட்சியகம் பிரான்ஸிலுள்ள ஓரு உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகம். அங்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த புராதானச்சின்னங்கள் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஒவியம் இங்குதான் உள்ளது. இந்த அருங்காட்சியகம் பற்றிய சில தகவல்கள். ‍இந்த அருங்காட்சியகம் 60 சதுர கிமீ பரப்பளவில் செய்ன் நதிக்கரையில் அமைந்துள்ளது. வருடத்திற்கு 97 லட்சம் மக்கள் இங்கு வருகின்றனர். உலகிலேயே அதிக மக்களால் கண்டுகளிக்கப்பட்ட‌ அருங்காட்சியகம் இதுதான். மொத்தம் 380000…