மற்றவை

  • Navigating the Evolution of Media and Information in the Digital Age

    Do our thoughts primarily stem from our personal expectations and ideas, or are they more influenced by external factors such as societal norms and the opinions of others? Have you ever thought about it? Am I influencing your though now? 🙂 Media, in its various forms, has been a cornerstone of how we consume information,…

  • இன்றைய காந்தி ‍- ஜெயமோகன்

    மகாத்மா காந்தி அவர்களைப் பற்றி உண்மையாக அறியத் தொடங்க விரும்புபவர்களுக்கான சிறந்த தொடக்க நூல். ஜெயமோகன் அவர்களால் அவரது இணைய தளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த கேள்வி பதில் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அஹிம்சைப் போராட்டம் எவ்வளவு தூரம் சாத்தியமானது? இந்திய நிலப்பகுதி அல்லாமல் பிற தேசங்களுக்கு இது சாத்தியமா? காந்தியை ஏன் மகாத்மா என அழைக்க வேண்டும்? காந்தி இந்திய சுதந்திரத்தினை தனது அஹிம்சைப்போராட்டத்தினால் மேலும் தாமதிப்படுத்தினார். இல்லையேல் இன்னும் முன்னதாகவே நம‌க்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்ற…

  • மலையாளம் செய்வது எப்படி?

    மலையாளம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள். தமிழ் தேன் ‍ நான்கு தேக்கரண்டிகள் செய்முறை:ஒரு பாத்திரத்தில் தமிழை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். மலையாளம் தயார். தமிழ் செய்வது எப்படி? தேவையான பொருட்கள். மலையாளம் தேன் ‍ நான்கு தேக்கரண்டிகள் செய்முறை:ஒரு பாத்திரத்தில் மலையாளத்தை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். தமிழ் தயார்.

  • 2021 – ஒரு புதிய தொடக்கம்

    2021 ஆம் ஆண்டு இனிதே தொடங்கி விட்டது. ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும் அந்த வருடத்தில் செய்வதற்கான சில பெரிய முயற்சிகளைத் தொடங்குவதை பழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதனை இத்தளத்தில் வெளியிடுவதன் நோக்கம், எனக்கு நானே இட்டுக்கொள்ளும் ஒரு வித அழுத்தமே. ஏனெனில் பொதுவெளியில் அறைகூவிவிட்டாயிற்று என்பதே எனக்கான உத்வேகத்தை அதிகப்படுத்தும். இத்திட்டமிடல்களை என்னளவில் மனதில் மட்டுமே வைத்துக்கொண்டிருப்பேயானால், காலப்போக்கில் நோக்கத்தின் வடிவம் நான் இன்று நினைப்பதைப் போலல்லாமல் வேறொன்றாக மாறிவிடலாம். அதனை வைத்து நான் அடைந்தவற்றை மதிப்பிடுவேன். அதற்காகவே…

  • 2020 ஒரு மீள்பார்வை

    2020 ஆம் வருடம் இனிதே நிறைவுற்று விட்டது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக நம்மை விட்டு நீங்கவில்லை என்றாலும், பெரும்பாலான தொழில் செயல்பாட்டு முறைகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது. அரசுகளும் இது போன்ற சூழல்களினை எப்படிக் கையாள்வது போன்ற திட்டங்களை வகுக்கத்தொடங்கி விட்டன. இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் கிட்டத்தட்ட தனித்து இயங்க முடியாது என்ற நிலையில்தான் இருக்கின்றன. அதனால் கொரோனா போன்ற தொற்றுக்கள் ஒரு தேசத்தில் ஏற்படின் கண்டிப்பாக மற்ற நாடுகளுக்கும் நேரடியாகவோ…

  • இரண்டு மரங்கள் – பாவண்ணன்

    பாவண்ணன் அவர்களால் வெவ்வேறு காலங்களில் எழுதப்பெற்ற ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு.புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியீடு. வெளிவந்த ஆண்டு 2008. கையெழுத்துகூடுஇனிப்பும் கசப்பும்பற்றுதல்இரண்டு மரங்கள்கடல்பொங்கல்உயரத்தை நோக்கிவரிசை கையெழுத்துவாழாவெட்டியாக தன்னுடைய அண்ணன் வீட்டில் வந்து தங்கும் அம்பிகா, இருபது வருடங்கள் கழித்து அவள் கணவனுடைய மரணத்திற்கும் செல்ல மறுக்கிறாள். அதன் பின்னர் அவருடைய சொத்து வாரிசாக உரிமை கொண்டாடவும் மறுக்கிறாள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தவே வீட்டை விட்டு வெளியேறுகிறாள். கூடுதன்னுடைய குடும்பத்தினரோடு மன வருத்தம் கொண்டு வெளியேறி வேறோர் ஊரில்…

  • முத்துக்கள் பத்து – தி.ஜானகிராமன்

    ஜானகிராமன் அவர்களின் ப‌த்துக் கதைகளின் தொகுப்பு. அம்ருதா பதிப்பகம் வெளியீடு. கங்கா ஸ்நானம் சிலிர்ப்பு பரதேசி வந்தான் பிடி கருணை முள்முடி மேரியின் ஆட்டுக்குட்டி கோதாவரிக்குண்டு பசி ஆறிற்று சத்தியபாமா செய்தி இவையே அந்த பத்து சிறுகதைகள். வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

  • மான்களுக்கும் கோபம் வரும் – மரபின் மைந்தன் முத்தையா

    மரபின் மைந்தன் முத்தையா அவர்களால் எழுதப்பெற்ற மற்றும் கவிதையரங்குகளில் வாசிக்கப்பெற்ற கவிதைகளின் தொகுப்பு. 2005 ஆம் ஆண்டு வெளிவந்தது. கற்பகம் புத்தகாலயம் வெளியீடு. இத்தொகுப்பில் என்னை ஈர்த்த கவிதை ‘புகார்கள் மற்றும் ஆலோசனைகள்’. ‘எந்தப்புகாரும் இல்லையென்றில்லைஎழுதும் தரமாய் இல்லையெம் புகார்கள்‘ ஏதேனும் நடைபெறுமிடத்திலேயே புகார் அளிக்க இயலும். ஆனால் இங்கே புகாரளிக்கும் அளவிற்கூ கூட செயல்கள் நடைபெறவில்லை என்பதன் அங்கதம் வெளிப்படும் தொணி என்னைக்கவர்ந்தது. அதே கவிதையில் ‘ஆனால் நண்பரே உம்மிடம் சொல்ல‌ஆலோசனைகள் உள்ளன எம்மிடம்கண்துடைப்புக்காக இங்கே…