• தொடர்பெனும் சிக்கல்

    மனித குலத்தின் கடந்த கால வரலாற்றினை ஓரளவிற்கு வாசித்தால் நாம் ஒரு மிகப்பெரிய‌ மாற்றத்தினை உணரலாம். முன் காலங்களில் மிகப்பெரும் விஷயமாக இருந்த ஒன்று இன்று முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. அது தொடர்பு. பழைய காலங்களில் ஒரு நாட்டிலிருந்து புதியதோர் நாட்டிற்குச் செல்வதென்பது மிகப்பெரிய‌ செயல்பாடாக இருந்திருக்கிறது, ஆறு மாத காலப்பயணம், 1 வருடப்பயணம் ஏன் திரும்பி வருவதென்பதே சாத்தியமில்லாத பயணம் என . ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகத்தினையும் சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். காரணம்…

  • |

    அவியளித்தல் : கேள்வியும் பதிலும்

    சமூகத்தேவை இல்லாத எந்த ஒரு பழக்க வழக்கங்களும் நிலைத்திடாது, அதற்கான தேவை முடிந்த பின்னரும் தொடரும் பழக்க வழக்கங்களே விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய காலத்தினை விட அந்தக் காலகட்டங்களில் போக்குவரத்து வசதிகளும் தொடர்புகளும் குறைவு. அக்காலகட்டங்களில் உணவு என்பது மிகப்பெரும் பிரச்சினை. அந்நிலையில் எவ்வாறு அவியளித்தல் என்பது சடங்காக நிலைபெற்றது? அதற்கான சமூகத்தேவைகள் என்ன? அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நெருப்பில் உணவுப்பொருட்களை இடுகிறோமா?  – மகிழ்நன் இருபதாண்டுகளுக்குமுன் இ.எம்.எஸ் ஒரு கட்டுரையில் இதைச்…

  • நேரு பற்றி ராமச்சந்திர குஹா

    நேரு அவர்களைப் பற்றி எழுத்தாளர் ராமச்சந்திர குஹா அவர்களின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் காந்திடுடே தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மிகச்சிறந்த கட்டுரை. 1976ஆம் ஆண்டு, இந்தியாவில் அவசரநிலைச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தபோது, ஏ எம் ரோசன்தால் என்ற அமெரிக்க பத்திரிகையாளர் புது தில்லிக்கு வந்திருந்தார். முன்னொரு காலத்தில், ந்யூ யார்க் டைம்ஸின் இந்திய நிருபராக இங்கு இருந்திருந்தவர் அவர். அவர் ஜவகர்லால் நேருவின்மீது மிக அதிக மரியாதை வைத்திருந்தார். எங்கும் நிறைந்திருந்த சமூக ஏற்றத்தாழ்வுகளாலும் சமய அடிப்படையில்…

  • Words at Work

    இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் ப‌லனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது. எந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தக‌வல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது…

  • | |

    தேர்வு முடிவுகள்

    பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் பெற்றுள்ளதை தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. அனைவரையும் வாழ்த்தும் அதே வேளையில் இந்த தேர்வு முடிவுகளின் உண்மை நிலையை நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. முதலாவது தமிழகத்தைப் பொறுத்த வரையில் தேர்ச்சி விழுக்காடு என்பதனை பெரும்பாலும் கடந்த ஆண்டின் தேர்ச்சி விழுக்காட்டிலிருந்து அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டிற்குள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை…

  • |

    புதிய இந்தியா

    16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு…

  • இங்கிலாந்து ஸ்காட்லாந்து இணைப்பு

    இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் 1707 வரை தனித்தனி நாடுகளாகவே இருந்தன. 1707 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தின் (Treaty of Union) வழியாக இரு நாடுகளும் (United Kingdom) ஐக்கிய இராஜ்ஜியம் என்ற ஒன்றாக இணைந்தன. இது நடைமுறைக்கு வந்த தினம் மே 1, 1707. 1603 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் ஒரே ராணியின் கீழ் (Union of Crowns) இணைக்கப்பட்டதிலிருந்தே அரசியல் ரீதியாக இரு நாடுகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் 1606,1667 மற்றும் 1689 ஆம்…

  • டொலென்டினோ ஒப்பந்தம்

    டொலென்டினோ அமைதி ஒப்பந்தம் என்பது பிப்ரவரி 19, 1797 ல் நெப்போலியனால் ஆளப்பட்ட புரட்சிகர பிரான்ஸிற்கும் அப்போதைய போப்பால் ஆளப்பட்ட பப்பல் தேசத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தம் ஆகும். அமைதி ஒப்பந்தம் எனக்கூறப்பட்டாலும் இது பப்பல் நாடுகளுக்கு வேறு வழி இல்லாத ஒரு நிலையிலேயே கையெழுத்தானது. நெப்போலியனின் புரட்சிகளின் விளைவாக ஏற்பட்ட போர் வெற்றிகளைத் தொடர்ந்து ஆஸ்திரியா,ஆர்கோலா போன்ற நாடுகள் நெப்போலியனின் கீழ் வந்தன. அதனைத் தொடர்ந்து வடக்கு இத்தாலியில் நெப்போலியனுக்கு எதிரியே இல்லாத ஒரு…

  • லிவ்ரே டூர்னாய்ஸ்

    லிவ்ரே டூர்னாய்ஸ் என்பது 1800 களின் பிற்பகுதியில் பிரான்சில் உபயோகப்படுத்தப்பட்ட பணமாகும். இது பிரான்சின் டூர்னாய்ன் மாகாணத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. இரண்டாம் பிலிப் மன்னன் இம்மாகாணத்தைக் கைப்பற்றியதும் அதுவரை புழக்கத்திலிருந்த லிவ்ரே பாரிசிஸிற்கு பதில் லிவ்ரே டூர்னாய்ஸை அதிகாரப்பூர்வ பணமாக அறிவித்தார். இருப்பினும் 1667 வரை லிவ்ரே பாரிசிஸும் புழக்கத்தில் இருந்தது. ஒரு லிவ்ரே ரூர்னாய்ஸ் என்பது 20 சூஸ்களாகவும் ஒரு சூஸ் என்பது 12 டினையர்ஸாகவும் பகுக்கப்படும். கடைசியாக 1720 ல் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்கள் வரை லிவ்ரே…