புத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்
பாரசீகக் கவிஞர் உமார் கய்யாமின் பாடல்களை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாடல்களையும் அதற்கான பொருள்களையும் கமலா முருகன் என்பவர் தொகுத்திருக்கும் நூல் இது. நேரடியான மொழிபெயர்ப்பு கிடையாது. அதாவது தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் அந்தக் கருவை நம் மொழியில் வடித்துள்ளார். ஒரு கவிதையில் கம்பராமயணம் பற்றிக் கூட உண்டு. பொதுவாக இந்த நூலில் உள்ள பாடல்கள் மூன்று வகையாக இருக்கின்றன. ஒன்று வாழிவின் நிலையாமை பற்றிய பாடல்கள். உதாரணமாக, புலர்ந்து…