விஜய் டிவியில் எப்படி Program நடத்துவது?

vijaytvஎளிய‌ வழிமுறைகள்.

1. எந்த program ஆ இருந்தாலும் அதுல குண்டா ஒரு பையன் இருக்கணும். (Ex 7C,கனா காணும் காலங்கள், Super Singer இப்படி)

2. program 30 நிமிஷம்னா விளம்பரம் கொறஞ்சது 6 மணி நேரமாவது போடணும். (Ex: இளையராஜா கனடாவுல பண்ற program 1 மணி நேரம்னா, விளம்பரம் 15 மணி நேரம் போடணும்.)

3. ஒரு program ஹிட் ஆயுடுச்சுன்னா அதுல கொறஞ்சது 25 Season வரைக்கும் கொண்டு போகணும். (Ex: Super Singer Season 26, Home Sweet Home Season 36 இப்படி)

4. அதே மாதிரி ஒரு program ஹிட் ஆனா அதுல இருந்து இன்னொரு program கொண்டு வரணும். (Ex: Super Singer ல இருந்து Super Singer Junior வந்த மாதிரி Super Singer Senior Citizen, Super Singer Middle Aged citizen , அப்புறம் 7C ல இருந்து 7D,7E இப்படி)

5. அப்புறம் program பேரோட விளம்பரப் பேரை முடிஞ்ச வரைக்கும் சேர்க்கணும். எப்படின்னா ஆச்சி மசாலா வழங்கும் Airter Super Singer Junior Powered by பிந்து அப்பளம், Organized by அணில் சேமியா.( பணம் வரணும்ல).

4. ஒரு episode ல ஒரு அஞ்சு நிமிஷம் நல்லா இருந்தா, அதே மாதிரி இருக்குற scene அ எல்லாம் பொறுக்கி எடுத்து Golden Moments, Sweet Memories இப்படியெல்லாம் பேரு வச்சு, ஒரு 25 episode ஓட்டிரணும்.

5. அதே மாதிரி ஒண்ணுக்கும் ஆகாதுண்ணு வெட்டி எறிஞ்ச scene அ எல்லாம் பொறுக்கி எடுத்து Spot Moments,Shooting Spot Galatta அப்படிங்க்ற பேர்ல ஒரு மாசத்த ஓட்டிரணும்.

6. நம்ம Program ல participate பண்றவங்கள, அவங்க வீட்டுக்குப் போயி video எடுத்து, அரை மணி நேர program ல இதயே 20 நிமிஷம் போடணும். வேணும்னா ஒரு 10 நிமிஷம் program நடத்திக்கலாம்.

7.அப்புறம் participate பண்றவங்களோட அம்மா, அப்பா, மாமா இந்த மாதிரி யாராவது வந்துருந்தாங்கன்னா, அவங்கள அழவிட்டு ரெண்டு episode எடுத்துரணும். (எல்லாத்துக்கும் Background music ரொம்ப முக்கியம்.)

8. Program அ நடத்துறோம்கற பேர்ல ரெண்டு பேர (ஒரு பொண்ணு, ஒரு பையன் கட்டாயம்) விட்டு ஒரு participant க்கு அடுத்து participant வர்றதுக்குள்ள இவங்கள 20 நிமிஷம் பேச விட்டு 20 episode ல முடிய வேண்டிய program அ 50 episode ஆ கொண்டு போகணும்.

9. நம்ம program க்கு சம்பந்தமா இருக்குறவங்கள தான் Judge ஆ கூட்டிட்டு வரணும்னு கட்டாயம் கிடையாது. Famous ஆ இருக்குற யார வேணாலும் கூட்டிட்டு வரலாம். (உதாரணமா, நமிதாவ எந்த program க்கு வேணாலும் Judge ஆ போடலாம்.)

10. Celebrities Special ங்ற பேர்ல ஒரு program ல இருக்குறவங்கள இன்னொரு program க்கு கூட்டிட்டு வந்து ரெண்டு வாரத்த ஒட்டிரணும். (Ex: நீயா நானாவுக்கு சூர்யாவ கூட்டிட்டு வரணும், கோபிநாத்தை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிக்கு கூட்டிட்டு வரணும் இந்த மாதிரி)

11. எல்லா program லயும் நம்மதான் முடிவு எடுத்தாலும், சும்மா மக்கள்கிட்ட ஓட்டு போடுங்க, SMS அனுப்புங்க, உங்கள் தீர்ப்பு இறுதியானது, உறுதியானதுன்னு அவுத்துவுட்டு இருக்குற காசையெல்லாம் புடுங்கிரணும்.

12. எந்த program இருந்தாலும் அதுல audience க்கு SMS போட்டி வைக்கணும். அதுல சுப்பிரமணியோட அப்பாவுக்கு ஒரே பையன்னா அவன் பேரென்ன? இந்த மாதிரி கஷ்டமான கேள்விய கேட்டு SMS அனுப்ப சொல்லணும். choice கண்டிப்பா குடுக்கணும், அதிகபட்சம் ரெண்டு அல்லது மூணு choice கொடுக்கலாம். ஒரு SMS க்கு 5 ரூவான்னு போட்டு 5000 ரூவா பரிசுக்கு 50,0000 ரூவா SMS லே பாத்துரணும்.

13. அப்புறம் show ல நடிச்சவங்க famous ஆயிருந்தா அவங்கள விட்ரவே கூடாது. அவங்கள வச்சு அடையாளம், படிக்கட்டுன்னெல்லாம் பேர் வச்சு ஒரு program எடுத்து அவங்க நடிச்ச program அ பத்தி பேச வச்சே புதுசா ஒரு program பண்ணிரணும்.

14. அதே மாதிரி ஒரு program, famous ஆயிட்டா வென்றது எப்படி?, சரவணன் மீனாட்சி family உடன் கலாட்டா இப்படியெல்லாம் பேர் வச்சு ஒரு 5 episode எடுத்துரணும்.

இப்படியெல்லாம் பண்ணீங்கன்னா உங்க program தான் டாப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.