அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? – டாக்டர் ஜாகிர் நாயக்

Zahir-Naik

இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும், ராஷ்மிபாய் ஸ‌வேரி அவர்களுக்கும் இடையில் நடந்த அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? என்ற விவாதத்தின் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பகுதியினை சுருக்கமாக புத்தகவடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே இப்புத்தகம். தமிழாக்கம் நூ.முகமது கனி. வெளியிடப்பட்ட வருடம் ஜனவரி 2011.

அசைவ உணவு மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதனை ஜாகிர் நாயக் குரான் மற்றும் பிற அறிவியல் இதழ்களின் ஆதாரம் கொண்டு விவரிக்கிறார். ஸவேரி அவர்களின் உரைவடிவம் இப்புத்தகத்தில் இல்லையாதலால் நம்மால் அவரின் கருத்துக்களை இந்நூலில் காணமுடியவில்லை. அவருடைய கேள்விகளுக்கான‌ பதிலுரைகளின் போதே ஸவேரி அவர்களின் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

அவர்கள் இருவருக்கும் நடந்த முழு விவாவதம் இணையத்தில் காணொளியாக இருக்கிறது. ஆர்வமிருப்பின் காண‌வும். இணைப்பு கீழே.

இஸ்லாம் கூறும் உணவு முறைகள், எவற்றை உண்ணலாம், எவற்றை உண்ணக்கூடாது.உணவுக்காக ஒரு உயிர் கொல்லப்பட்டால் அது எவ்வாறு செய்யப்படவேண்டும் போன்ற தகவல்களை இப்புத்தகத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். உதாரணமாக கோரைப்பல் கொண்ட மிருகங்களை உண்பதனை இஸ்லாம் தடை செய்கிறது. ஏனெனில் அவை மாமிச பட்சிகள், அவற்றை உண்பதால் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதனால் அது தடை செய்யப்பட்டிருக்கிறது. இது போன்ற பல தகவல்கள் இப்புத்தகத்தில் உண்டு.

வாசிக்க வேண்டிய புத்தகம்.

1 thought on “அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? – டாக்டர் ஜாகிர் நாயக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.