அபிப்ராய சிந்தாமணி ‍- ஜெயமோகன் (புத்தகம் – 3)

அபிப்ராய சிந்தாமணி

எழுத்தாளர் ஜெயமோகன் பல்வேறு காலகட்டங்களில் அவருடைய வலைத்தளத்தில் எழுதிய பகடிக்கட்டுரைகளின் தொகுப்பு. எதனையும் மிகவும் வெளிப்படையான நகைச்சுவையாக எதிர்பார்க்கும் தமிழ் வாசகனுக்கு ஒருபடி மேலான நகைச்சுவையையும், அதற்கான சாத்தியங்களை அளிக்கும் நூல். வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பெற்ற கட்டுரைகளாதலால் தொடர்ச்சி என்ற ஒன்று கிடையாது. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம். அத்தோடு பல கட்டுரைகளில் உள்ள அங்கதம் நம்மை சிந்திக்கவும் வைக்கக்கூடியவை. 767 பக்கம் கொண்ட நூலாயினும் வாசிக்கத்தொடங்கியவுடன் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் வசீகரம் உண்டு.

சிற்றிதழ்கள், தத்துவ விவாதங்கள், தமிழ் மருத்துவம் தொடர்பான பல கட்டுரைகள் நம்மை சிந்திக்க வைப்பவை. நல்ல நகைச்சுவை படைப்பது எப்படி என அறியும் ஆர்வலர்களும் வாசிக்கலாம். என்னை மிகவும் கவர்ந்த கட்டுரைகள் இவை.

  1. தமிழ்ப்பெண்ணியம் ‍ சுருக்கமான வரலாறு
  2. மூதாதையரைத் தேடி
  3. சிற்றிதழ்கள் ஓர் ஆய்வறிக்கை
  4. அறிவுஜீவிக்குரங்கும் ஆப்பும்
  5. நீங்களும் பின்நவீனத்துவக்கட்டுரை வனையலாம்
  6. விளம்பரம்
  7. ஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்
  8. முன்னாளெழுத்தாளர்.காம்
  9. நகைச்சுவையும் தமிழ்சினிமாவும்
  10. பத்தினியின் பத்து முகங்கள்

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.