சித்தி

சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் ஒரு பழைய திரைப்படத்தின் காட்சி ஒளிபரப்பானது. அந்தக் காட்சியில் தன் வீட்டு வறுமையை தன் தம்பிக்கு தெரியாமல் மறைப்பாள் அக்கா. தம்பியை டாக்டராக்க வேண்டும் என்பது அவள் கனவாக இருக்கும். அந்த அக்கா பத்மினி, தம்பி முத்துராமன். அப்படத்தின் பெயர் தெரியாததால் என் அம்மாவிடம் காட்சியை விளக்கிக் கேட்டேன். பட்டென்று பதில் வந்தது, சித்தி என்று.

அப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எஸ். வாசன் அவர்களின் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இசை எம்.எஸ்.விஸ்வநாதன். நான் பிறப்பதற்கு கால் நூற்றாண்டு காலம் முன்னர் வந்த திரைப்ப‌டம். அதனால் அந்த திரைப்படத்தை இந்த காலகட்டத்தோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தோடு பார்த்தேன்.

எட்டு தங்கைகள், ஒரு தம்பியோடு பிறந்த ஒரு பெண் அவர்களுக்காக தன்னுடைய‌ காதலை தியாகம் செய்து, இரண்டாம் தாரமாக ஒருவரை மணக்கிறார். ஆனால் அவரோ சில காலம் கழித்து சொன்னபடி அவர் குடும்பத்தையும், தம்பியின் படிப்பையும் பார்த்துக் கொள்ள முடியாது என கை விரிக்கிறார். இந்நிலையில் எப்படி அனைவரையும் அந்த பெண் கறை சேர்க்கிறாள் என்பதே கதை.

இன்றைக்கும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதை. எந்த ஒரு கதாபத்திரமும் தொய்வடைவதே இல்லாத கதை அமைப்பு. நான்கைந்து கதாபாத்திரங்களையே நிர்வகிக்க முடியாத சமீபத்திய பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் எம்.ஆர்.ராதா,பத்மினி, ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ்,வி.கே.ராமசாமி இன்னும் எனக்குப் பெயர் தெரியாத பல நடிகர்கள். ஆனாலும் அனைவருடைய கதாபாத்திரமும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், இயல்பாகவும் கதை ஓட்டத்தோடு பின்னப்பட்டிருப்பதை கண்டு நான் வியந்தேன்.

இன்றைய படங்களை நான் முற்றிலுமாக குறை சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக காலம் செல்லச் செல்ல ஆகச் சிறந்தவையே எஞ்சி நிற்கும் என்பது விதி. அப்படிப்பார்த்தால் கண்டிப்பாக 60 ஆண்டுகளுக்கு முன் வந்த இப்படத்தோடு ஒப்பிடும் அளவுக்குக் கூட பல படங்கள் இப்போது இல்லை.

இந்தப்ப‌டத்தில் நான் வியந்த மற்றோர் அம்சம் வசனம். இத்தனை சிறப்பாக இப்போழுது கூட வசனம் இருக்கிறதா என்று நினைத்தால் சில படங்களைத் தவிர மற்றவை ஏமாற்றத்தையே தருகின்றன. Timing Dialog ஆகட்டும், இல்லை சின்னச் சின்ன பாடல்களாகட்டும் பிரமாதம்.

பின்னாளில் இந்தத் திரைப்ப‌டம் அதே பத்மினியின் நடிப்பில் இந்தியில் என்ற பெயரில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள். Youtuble  ல் இருக்கிறது. இணைப்பு கீழே.

Similar Posts

  • |

    ஆயிரம் ஜன்னல் ‍‍- ஜக்கி வாசுதேவ்

    ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய‌ கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச் சொல்வதைக்கூட பிரமாண்டமாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வாசிப்பவர்கள் சென்றே ஆக வேண்டும். அப்படிப்பட்டவையே இக்கட்டுரைகள். வாராந்திர சஞ்சரிகைகளையும், தினசரி செய்திகளையும்…

  • |

    ரகுவம்சம் – அ.வெ.சுப்பிரமணியன்

    ராமன் பிறந்த ரகுவம்சத்தின் வரலாறு, சுருக்கமான வடிவில். அ.வெ.சுப்பிரமணியன் அவர்களால் காளிதாசனின் மூலவடிவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. எளிய பிழையற்ற மொழிநடை. திலீபனின் தொடங்கி, ரகு, அஜன், தசரதன் வழியாக ராமனின் வரலாறைக் கூறும் நூல். சூர்ய குலம் எனப்படும் ரகுவம்ச வரலாறை அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம். ஒட்டுமொத்த அரசகுலத்தின் தோற்றம் கிடைக்கும். ரகுவம்ச மன்னர்களின் பெருமையைப் பற்றிக் கூறும் நூல். ஆதலால் ஒரு வரலாற்று நூல்போலக் கொள்ள இயலாது. ஆழ்ந்த மத நம்பிக்கையாளர்களுக்கான ஆரம்பப்…

  • |

    நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

    நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம். அந்த பத்தொன்பது பேர் இவர்களே மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு பி.ஆர்.அம்பேத்கர் ராம்மோகன் ராய் ரவீந்திரநாத் தாகூர் பாலகங்காதர திலகர் ஈ.வே.ராமசாமி முகம்மது அலி ஜின்னா சி.ராஜகோபாலச்சாரி ஜெயப்பிரகாஷ் நாராயணன் கோபால கிருஷ்ண கோகலே சையது அகமது கான்…

  • | |

    The Boss Baby – குழந்தை முதலாளி

    2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் இதுதான். கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும்…

  • |

    மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

    ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது. இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.