The Siren’s Feast – Benjamin Hulme-Cross

Benjamin Hulme-Cross என்பவரால் எழுதப்பட்டது. சாத்தான்களை ஓட்டும் கதை. சிறுகதை என‌லாம். குழந்தைகள் மற்றும் ஆரம்பகால வாசிப்பு நிலைகளில் உள்ளவர்களின் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கக்கூடிய‌ புத்தகம். அதற்காகவே புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைவான வார்த்தைகள், பெரிய எழுத்துக்கள்.

ப்லட் சாத்தான்களை ஓட்டுபவ‌ர். அவருக்கு உதவக்கூடிய சிறுவர்கள் எட்ஜும் மேரியும்.ஒருமுறை அவர்கள் ஓரிடத்தைக் கடக்கும்பொழுது ஓர் கிராமம் அதீத வறுமையில் இருப்பதைக் கண்டு தங்களிடமுள்ள உணவுப்பொருள்களைக் கொடுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் உள்ள மற்ற‌ அனைவரும் இவர்களிடம் உணவுப்பொருள்களை எதிர்பார்க்கின்றனர். அவர்களிடம் அனைவருக்கும் கொடுப்பதற்கான உணவுப்பொருள் அவர்களிடத்தில் இல்லை. அதனால் ஏதேனும் பிரச்சினை நேரலாம் என எண்ணி அவ்விரவில் அக்கிராமத்தில் தங்காமல் வேறிடம் நோக்கி செல்கின்றனர். சிறிது தூரத்தில் அவர்கள் ஓர் அழகிய இளம்பெண்ணைக் காண்கின்றனர். அவள் தன்னுடன் வந்து தங்கள் வீட்டில் இரவைக் கழிக்கலாம் எனக் கூறுகிறாள். அதனை ஏற்று அவளுடன் செல்கின்றனர்.

அவள் வீட்டில் அவளுடன் அவளுடைய இரண்டு சகோதரிகளும், பெற்றோரும் இருக்கின்றனர். மூன்று பேரும் ஒன்றுபோல் இருக்கின்றனர். அவர்கள் ஒன்றாகப் பிறந்ததாக அவர்களின் அப்பா கூறுகிறார். அனைவரும் வசதியாகவும் செழிப்புடனும் இருப்பதைப் பார்த்து மேரி சந்தேகம் அடைகிறாள். ஆனால் ப்லட்டும், எட்ஜூம் அச்சகோதரிகளையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இரவு உணவுக்குப்பின்னர் படுக்கைக்கு செல்லும் மேரி ஒரு பாடலைக் கேட்கிறாள். அப்பாடல் தன்னை அதனை நோக்கி இழுப்பதை உணர்ந்த அவள் அதனைக் கண்டறிய அதன் பின் செல்கிறாள். அங்கே, வீட்டிற்கு வெளியே உள்ள கொட்டகையில் வெளிச்சம் வருவதைக்கண்டு அங்கே செல்கிறாள். அங்கே அவள் காணும் காட்சி திடுக்கிட வைக்கிறது. சகோதரிகள் மூவரும் பாடிக்கொண்டிருக்க எட்ஜும், ப்லட்டும் அதனைக் கேட்டுக்கொண்டு அசையாமல் நிற்கின்றனர். அவர்களுடைய அப்பா கையில் பெரிய கோடாரி போன்ற ஓர் ஆயுதத்தோடு நிற்கிறார்.அதன் பின்னர் மேரி அவர்களை எப்படிக் காப்பாற்றுகிறாள் என்பது கதை. விறுவிறுப்பான சிறுகதை அல்லது குறுநாவல். குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை தூண்ட வாசிக்க வைக்க‌லாம்.

Similar Posts

  • |

    அர்த்தமுள்ள இந்து மதம் – கண்ணதாசன்

    கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற பத்து தனித்தனி பாகங்களின் மொத்த தொகுப்பு. தன் அனுபவத்தினைக் கொண்டு அதன் மூலம் இந்து மதத்தினை மனித வாழ்வின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் விளக்கம் தருகிறார். ஒருவேளை இப்புத்தகத்தினை ஆரம்ப கால வாசகர்களும், ஆன்மீக வாசகர்களும் பெரிதும் விரும்பலாம். ஆனால் தீவிர இலக்கிய வாசிப்புக் கொண்டவர்கள் சலிப்படையவைக்கும் தட்டையான எழுத்து. சாதரணமாக வயதில் மூத்தவர்கள் கூறும் அறிவுரைகளின் தொகுப்பு எனக்கூறலாம், மற்றபடி இது இந்து மதத்தினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்றெல்லாம் கிடையாது….

  • |

    ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்காதீங்க – கோபிநாத்

    நீயா நானா கோபிநாத் அவர்களால் எழுதப்பெற்று 2008ல் வெளிவந்த சுயமுன்னேற்ற நூல். இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே இதில் எதையும் தான் புதிதாக சொல்லிவிடவில்லை என்றும் தனக்கு சொல்லப்பட்டதை தான் சொல்வதாகவும் சொல்லி ஆரம்பிக்கிறார் கோபிநாத். எளிமையான கருத்துக்கள். நமக்கு நன்கு தெரிந்த பரீச்சயமான ஒருவர் கூறுவது போல்தான் ஒட்டு மொத்த புத்தகமுமே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் எந்தப் பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். இப்புத்தக வாசிப்பு கண்டிப்பாக வாசிப்பவருக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும், அவர் எத்துனை ஆழமான புத்தகங்களை…

  • |

    திருப்பம் – கேசவதேவ்

    மலையாளத்தில் வெளிவந்த கேசவதேவின் ஒரு குறுநாவலையும், மாதவிக்குட்டியின் ஒரு சிறுகதையையும் தமிழில் சுரா அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவ்விரண்டுமே இப்புத்தகம். முதல் குறுநாவல் திருப்பம், அப்போதைய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தினை ஒட்டிய நாவல். கேரள ஈழவ சாதிகளுக்குள் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மாலேத்து சாணார் வீட்டில் வேலை செய்கிறார் கண்டப்பன். அவர்கள் இடத்தில்தான் இவன் வீடு கட்டிக்குடியிருந்தான். அவர்கள் தரும் கூலியோடு அவர்கள் தரும் எச்சில் சாப்பாடும் அவர்களுக்கு கிடைக்கும். அவரோடு அவர் மகன்…

  • |

    தவிப்பு – ஞானி

    ஞானி அவர்களால் எழுதப்பெற்று விகடனில் தொடராக வெளிவந்த தொடரின் நாவல் வடிவம். வெளியீடு விகடன் பிரசுரம். வெளியிட்ட ஆண்டு ஆகஸ்ட் 2007. டில்லியில் அரசு தொலைக்காட்சியில் பணிபுரியும் விஜயனுக்கு ஒரு தமிழ்த் தீவிரவாதக் கும்பலுடன் சமரசம் பேசுவதற்கான அழைப்பு அரசால் விடுக்கப்படுகிறது. அத்தீவிரவாதிகள் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருக்கின்றனர். அத்தோடு அத்தீவிரவாதிகளுள் ஒருத்தியான ஆனந்தி விஜயனின் கல்லூரிக் கால நெருங்கிய தோழி. விஜயன் அவர்களுடன் பேரம் பேசுவது, அவனுக்கும் ஆனந்திக்குமான முந்தைய நட்பின் நினைவுகள், விஜயன் தற்போதைய அலுவலகத்…

  • |

    ரகுவம்சம் – அ.வெ.சுப்பிரமணியன்

    ராமன் பிறந்த ரகுவம்சத்தின் வரலாறு, சுருக்கமான வடிவில். அ.வெ.சுப்பிரமணியன் அவர்களால் காளிதாசனின் மூலவடிவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. எளிய பிழையற்ற மொழிநடை. திலீபனின் தொடங்கி, ரகு, அஜன், தசரதன் வழியாக ராமனின் வரலாறைக் கூறும் நூல். சூர்ய குலம் எனப்படும் ரகுவம்ச வரலாறை அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம். ஒட்டுமொத்த அரசகுலத்தின் தோற்றம் கிடைக்கும். ரகுவம்ச மன்னர்களின் பெருமையைப் பற்றிக் கூறும் நூல். ஆதலால் ஒரு வரலாற்று நூல்போலக் கொள்ள இயலாது. ஆழ்ந்த மத நம்பிக்கையாளர்களுக்கான ஆரம்பப்…

  • அறம் – ஜெயமோகன்

    உண்மை மனிதர்களின் கதைகள். ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. வம்சி பதிப்பக வெளியீடு. ஒரு சில நூல்களின் மேல் நம் கருத்தையோ, எண்ணத்தையோ வைப்பதற்கு குறைந்த பட்ச த‌குதி என்ற ஒன்று எப்போதும் தேவை என்று நினைப்பவன் நான். இதனை எழுதும் இந்த வேளையில் அத்தகுதி இல்லாதவனாகவே உணர்கிறேன், இருக்கிறேன். ஆதலால் இந்த நூலைப் பற்றி எந்த பார்வையையும் நான் வைக்கமாட்டேன், இப்போதைக்கு. ஆனால் காரணமில்லாமல் ஒரு எழுத்தின் வழியாக மட்டுமே என்னை அழ வைத்த நூல், இது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.