இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

இந்திய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதிலுள்ள ஒவ்வோர் அம்சமும் என்ன? அவை தரும் உரிமைகள் எவை? அவை தரும் கட்டுப்பாடுகள் எவை? எந்தெந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து அவை தருவிக்கப்பட்டன? இந்த நிலத்தை ஆளும் முறையை எவ்வாறு தீர்மானிப்பது? எதிர்காலாத்தில் ஏதேனும் ஓர் மாநிலம் தனி நாடு கோரினால் என்ன செய்வது? போன்ற அனைத்தையும் விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தினைப் பற்றி தெளிவாக விளக்கக் கூடிய ஓர் புத்தகம். நம் மனநிலையில் இந்தப் புத்தகம் ஓர் போட்டித்தேர்வுக்கான புத்தகம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டதால் இதனை பொதுவாக நாம் வாசிப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு இந்திய பிரஜையும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாகக் கொள்ளவேண்டும் என்பதே என் எண்ணம்.

உதாரணமாக தனி மனிதனுக்கான உரிமைகள் எவையெவை? அவை மீறப்படும்பொழுது தனிமனிதன் நேரடியாக இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை அணுகலாமா? அல்லது இடை நிலை நீதிமன்றங்களில் முறையிட்டுவிட்டு இறுதியாக மட்டுமே உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டுமா போன்ற விளக்கங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ளவேண்டியவையே. அத்தோடு ஒவ்வொருவரும் தன் மதம்,கலாச்சாரத்தைப் பேணுவதற்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன போன்றவை. தனக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அறிந்துகொள்ளும்போதே அதனை பெற முடியும், அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். அப்படித்தானே?

இந்திய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு அதற்கான குழுவில் இருந்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்த பல்வேறு அம்சங்களை எடுத்து அதனை இந்தியாவிற்கு ஏற்றார்போல மாற்றி அரசியலமைப்பை உருவாக்கும் ஓர் கடினமான பணியிணை மிகக் குறைந்த காலகட்டத்தில் அதாவது இரண்டு ஆண்டுக்கும் குறைவில் உருவாக்கிய விதம், அரசாங்கங்கள் கட்டற்று செயல்பட்டுவிடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள், அந்நீதிமன்றங்களின் பாதுகாப்பிற்கான விதிமுறைகள் போன்ற பல்வேறு தகவல்கள் இதில் உண்டு. சில முக்கிய காலகட்டங்களில் அரசிலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளும், கோட்பாபாடுகளும் மீறப்படும்பொழுது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் பலவற்றையும் மிகத்தெளிவாக விளக்கக்கூடிய புத்தகம்.

Similar Posts

  • | |

    மாங்கொட்ட சாமி – புகழ்

    எழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும். இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான…

  • எக்சைல் – சாரு நிவேதிதா

    தன்னுடைய வாசகர் வட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்சம் தன்னுடைய எக்சைல் நாவலைப் படித்திருக்க வேண்டும் என்ற அவருடைய தகுதி வரையறையின் காரணமாகப் படித்த நாவல். வாசிப்பின் முடிவில் என் மனநிலை, இப்போதைக்கு சாருவின் வாசகர் வட்டத்தின் இணைய முயல வேண்டாம் என்பதே. ஒருவேளை இதற்குத்தான் அந்த நாவலை வாசிக்கச் சொல்லியிருப்பாரோ என்னவோ? நாவலின் கரு இதுதான். மற்ற ஒருவரின் மனைவியை காதலிக்கும், உறவுகொள்ளும் ஒருவனின் வாழ்வியல் நிகழ்வுகள். அக்காலக் கட்டத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் நாவலாக்கியிருக்கிறார். சாரு இந்நாவலில்…

  • |

    ரகுவம்சம் – அ.வெ.சுப்பிரமணியன்

    ராமன் பிறந்த ரகுவம்சத்தின் வரலாறு, சுருக்கமான வடிவில். அ.வெ.சுப்பிரமணியன் அவர்களால் காளிதாசனின் மூலவடிவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. எளிய பிழையற்ற மொழிநடை. திலீபனின் தொடங்கி, ரகு, அஜன், தசரதன் வழியாக ராமனின் வரலாறைக் கூறும் நூல். சூர்ய குலம் எனப்படும் ரகுவம்ச வரலாறை அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம். ஒட்டுமொத்த அரசகுலத்தின் தோற்றம் கிடைக்கும். ரகுவம்ச மன்னர்களின் பெருமையைப் பற்றிக் கூறும் நூல். ஆதலால் ஒரு வரலாற்று நூல்போலக் கொள்ள இயலாது. ஆழ்ந்த மத நம்பிக்கையாளர்களுக்கான ஆரம்பப்…

  • |

    மணலின் கதை – மனுஷ்யபுத்திரன்

    மனுஷ்ய புத்திரன் அவர்களால் 2002, 2003 ஆம் ஆண்டுகளின் வெவ்வேறு நாட்களில் எழுதப்பெற்ற 37 கவிதைகளின் தொகுப்பு. 2004 ல் வெளிவந்த நூல். உயிர்மை பதிப்பகம் வெளியீடு. அவற்றுள் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை ‘இந்தக் காயங்கள்’. இந்தக் காயங்கள்இன்று வெய்யில் நோக்கி திறந்திருக்கின்றன‌நாளை மழை நோக்கி திறந்து கிடக்கும் வெட்ட வெளியில் கிடத்தப்பட்ட‌ஒரு காயம்மருந்திட இயலாததல்ல‌மருந்திடப்படாமல் புறக்கணிக்கப்பட்டதுமல்ல‌ இந்தக் காயங்கள்காயங்களாக இருப்பதற்காகவேகசிந்துகொண்டிருக்கின்றன‌ பிடிவாதமாய் தன்னை மூடிக்கொண்டிருக்கும்ஒரு கருணையின் ஊற்றுக்கண் திறக்க வாசிக்கலாம்.

  • |

    உன்னோடு ஒரு நிமிஷம் ‍ – வெ.இறையன்பு

    வெ. இறையன்பு அவர்களால் சுட்டி விகடனில் எழுதப்பெற்று தொடராக வெளிவந்த சுயமுன்னேற்றத் தொடர். சுட்டி விகடனில் வெளிவந்த‌தால் முற்றிலும் குழந்தைகளை நோக்கி எழுதப்பட்ட கட்டுரைகள். பெரும்பாலும் நீதி போதனைக் கட்டுரைகள். அத்தோடு அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்டவை. உதாரணமாக தேர்வு சமயத்தில் வெளிவந்த இதழில் தேர்வு தொடர்பான சில அறிவுரைகள், விடுமுறைக்கால இதழில் விடுமுறை தொடர்பான சில ஆலோசனைகள். அதனால் இக்கட்டுரைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும்போது ஒரு புத்தகத்திற்கான‌ ஒட்டுமொத்த வடிவம் இல்லை. ஆனால் இது போன்ற…

  • |

    Home Deus – Yuval Noah Harari

    This books follows the popular book ‘The Sapiens’ from the same author Yuval Noah Harari. If you have not read the book ‘The Sapiens’ it should be read first. So that it will give better picture on understanding this book. The Sapiens talks on how the homo sapiens evolved as human being in detail. This…

2 Comments

  1. இந்த நூல் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதா? எந்த பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.