|

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 1

ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு?

இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்ல‌து இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல் தொடங்கக் கூடிய காலமே 1940களின் பிற்பாதி. ஏறக்குறைய இந்திய சுதந்திரம் உறுதி செய்யப்பட்ட காலம். சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு கலவரங்கள், இந்து முஸ்லீம் போராட்டங்கள், பஞ்சகாலங்கள், சீன பாகிஸ்தான் போர்கள், எல்லையோர மக்களின் தனி நாடு கோரிக்கை, அதனை இந்திய தலைவர்கள் கையாண்ட விதம், அவர்களின் தோல்விகள், சறுக்கல்கள் என விரைகிறது இப்புத்தகம். நான் இவற்றை இங்கே ஒற்றை வரியில் கூறியிருந்தாலும் புத்தகத்தில் இவை கிட்டத்தட்ட 500 பக்கங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அத்த‌னை அடர்த்தியான தகவல்கள்.

இரண்டாவது, புத்தகத்தில் ஒற்றை வரி கூட ஆசிரியரின் கருத்தோ, எண்ணமோ கிடையாது. உதாரணமாக பல நூல்களில் நேரு நினைத்தார், காந்தி நினைத்தார் என நூலாசிரியர்கள் குறிப்பிடுவதை நாம் காணலாம். அந்த வரலாற்று நபரின் ஏதோ ஒரு செயல்பாட்டின் அடிப்படையில், ஒரு நூலாசிரியர் அந்த முடிவுக்கு வந்து அதனை எழுதுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் அதனைப் போல ஒற்றை வரி கூட கிடையாது. நேரு எண்ணினார் என்றால் அது ஒரு ஆதாரத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது நேரு தான் எண்ணியதாக யாருக்காவது எழுதிய கடிதம் இருக்கும். எல்லாவற்றிற்கும் அந்தந்த வரிகளிலேயே ஆதாரம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலின் ஒட்டு மொத்த 500 பக்கங்களும் விவரிக்கும் காலகட்டம் என்பது 1945 முதல் 1964 வரை மட்டுமே. இந்திய வரலாற்றினை சுதந்திர காலத்திலிருந்து அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

Similar Posts

  • மனம் – திரைப்படம்

    நாகேஸ்வரராவ்,நாகர்ஜுனா,நாக சைதன்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நான் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு திரைப்படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்த‌தே இல்லை. எவ்வளவு நல்ல திரைப்படம் என்றாலும். ஆனால் இந்த திரைப்படத்தினை இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டேன். காரணம் மற்ற படங்கள் என் புத்தியை தொட்டிருக்கின்றன. இப்படம் என் மனதைத் தொட்டதே. முதல்முறை போலவே இம்முறையும் கண்களில் கண்ணீர் பல இடங்களில். வாழ்க்கைதான் எத்தனை அழகானது? நல்லதையே பார்த்து நல்லதையே செய்து நல்லவனாகவே…

  • இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

    இந்திய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதிலுள்ள ஒவ்வோர் அம்சமும் என்ன? அவை தரும் உரிமைகள் எவை? அவை தரும் கட்டுப்பாடுகள் எவை? எந்தெந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து அவை தருவிக்கப்பட்டன? இந்த நிலத்தை ஆளும் முறையை எவ்வாறு தீர்மானிப்பது? எதிர்காலாத்தில் ஏதேனும் ஓர் மாநிலம் தனி நாடு கோரினால் என்ன செய்வது? போன்ற அனைத்தையும் விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தினைப் பற்றி தெளிவாக விளக்கக் கூடிய ஓர் புத்தகம். நம் மனநிலையில் இந்தப் புத்தகம் ஓர் போட்டித்தேர்வுக்கான…

  • | |

    அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

    கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி. அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

  • |

    கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

    1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம். அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய…

  • மகாபாரதம்:அறத்தின் குரல் – நா.பார்த்தசாரதி

    நா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே.  எந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம். அத்துணை பெரிய காவியம். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள். படிக்க படிக்க திகட்டாத, தீராத காவியம். இந்து மரபின் உயரிய கருத்தான அறத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.