ஜே ஜே சில குறிப்புகள்

சுந்தர ராமசாமியால் எழுதப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அக்காலகட்டத்தில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்திய நாவல். ஓர் இளம் எழுத்தாளன் தன்னுடைய ஆளுமையாக எண்ணும் ஓர் எழுத்தாளனைப் பற்றி எழுதும் குறிப்புகள், அதுவே நாவல்.மிகச்சிறந்த அங்கதம். சுந்தர ராமசாமி தன் வாழ்நாளில் சந்தித்த, பழகிய‌ உண்மை நபர்களை வைத்தே நாவலை வடிவமைத்ததாக ஓர் விமர்சனம் உண்டு. உதாரணமாக மையக்கதாபாத்திரமான ஜேம்ஸ் ஜோசப். வழக்கமான நாவல்களின் கட்டமைப்பை உடைத்து புதியதோர் நாவல் வடிவத்தை தமிழில் உருவாக்கிய‌ நாவல். ஆரம்பகால வாசிப்பாளர்கள் கருதும் நாவலின் வடிவத்திற்கு முற்றிலும் மாறானது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நாவல்.

Similar Posts

  • | |

    லஜ்ஜா – அவமானம்

    1993 ஆம் ஆண்டு வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் அவர்களால் எழுதப்பட்ட நாவல். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு வங்கதேசத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது ஒரு இந்து குடும்பத்தின் நிலையே நாவல். அந்தக்குடும்ப நபர்கள் கற்பனை எனக் கூறப்பட்டிருந்தாலும் விவரிக்கப்படும் சம்பவ‌ங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்களே. இதற்காக  சம்பவங்களை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார். கதை இதுதான். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெறுவதற்கான போராட்டங்களில் பங்கு பெற்ற பல இந்துக்களில் சுதாமயும் ஒருவர். பாகிஸ்தானிலிருந்து…

  • |

    கன்னி நிலம் – ஜெயமோகன்

    ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன். நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ…

  • |

    Design of Web APIs – Arnaud Lauret

    Written by Arnaud Lauret. This book is for API designers, who involves in designing the API as well for those who develop APIs. It mostly talks about the best practices of designing APIs including best naming practices, documentation practices, security approaches. As I have already involved in few API developments already after reading this book…

  • |

    குர் ஆனும் நவீன விஞ்ஞானமும் ‍ – டாக்டர் ஜாகிர் நாயக்

    நவீன விஞ்ஞானம் கண்டறிந்து நிறுவிய பல்வேறு உண்மைகள் ஏற்கனவே எவ்வாறு குர் ஆனில் விளக்கப்பட்டுள்ளது என்பதனை விவரிக்கும் புத்தகம். சாஜிதா புக் சென்டர் வெளியீடு. தமிழாக்கம் இப்னு ஹூசைன். விண்ணியல்,இயற்பியல்,புவியியல்,மண்ணியல்,சமுத்திரவியல்,உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவம், உடல் செயலியல், கருவியல், பொது விஞ்ஞானம் ஆகிய துறைகளின் இந்நூற்றாண்டு கண்டுபிடிப்புகளும் அறிதல்களும் எவ்வாறு ஏற்கனவே குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதனை புத்தகம் முழுவதும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக். பெருவெடிப்புக் கோட்பாடு, பூமி தட்டையானது அல்ல‌ உருண்டையானது, கோள்கள் சூரியனை மையமாகக்…

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • |

    THE ANTHROPOCENE REVIEWED – JOHN GREEN (புத்தகம் – 2)

    John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என‌ எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.