| |

மாங்கொட்ட சாமி – புகழ்

mangotta-saamiஎழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும்.

இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான கிராமத்து சொலவடைகள். நானே நேரடியாகக் கேட்ட பல சொலவடைகள் எங்கோ என் மனதின் ஆழத்தில் கிடந்தவற்றை இச்சிறுகதைகள் உயிரெழுப்பின.

மிகச்சில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் கிராமத்து சொலவடை அப்படியே பதிவு செய்திருக்கிறார். அது இச்சிறுகதைகளுக்கு ஒரு இயல்பான ஒரு தோற்றத்தை அளிக்கிறது.

எல்லா கதைகளுமே ஒன்றுக்கொன்று ஏதோ தொடர்போடு இருப்பதாகவே தோன்றுகிறது. அது இச்சிறுகதைகளை ஒற்றைப்படையாக மாற்றுவதாகத் தோன்றுகிறது. உதாரணமாக ஒலச்சான் சின்னாளு, அருணாச்சலம் பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும் வருகிறார்கள்.

குறிப்பிடத்தக்க ஒரு கதை தொங்கட்டான் கிளவி. இந்தக் கதை ஒரு கிழவியின் மரணப்படுக்கையில் தொடங்குகிறது. நூலாசிரியரே கதை சொல்லியாக மாறி நமக்கு கதையினை சொல்கிறார். பெரும்பாலான அனைத்துக்கதைகளுமே அப்படித்தான். அக்கிழவியின் வாழ்க்கை, பட்ட கஷ்டங்கள், அவள் மகனை வளர்த்த விதம் என எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறார். எல்லோரும் அவள் இறப்பை எதிர்நோக்கி இருக்க, அவள் தன் மகனை எதிர்நோக்கி இருக்கிறாள். அதனால் பால் ஊற்றியும் மரணிக்காமல் இருக்கிறாள். இறுதியில் தன் மகனைப் பார்த்ததும் உயிர் பிரிகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க கதையாக எனக்குத் தோன்றுகிறது.

இதைத் தவிர ஏனைய கதைகள் அனைத்துமே ஒரு வாசகனுக்கு எந்தவித சவாலையும் அளிக்காத கதைகள். உதாரணமாக ஏதாவது ஒரு சொற்றொடரையோ சொலவடையையோ கூறும்பொழுது ஆசிரியரே கதை சொல்லியாக அதற்கான விளக்கத்தையும் அளித்து விடுகிறார். இதனால் அதனை வாசகன் தான் அறியும் பொருட்டு அடையும் பரவசத்தினை அடைய முடிவதில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் ஒருமுறை கூறினார், சிறுகதை என்பது குறைவாகக் கூறி அதிகமாக கற்பனை செய்ய வைப்பது. அந்த இடத்தில் இந்த சிறுகதைத் தொகுப்பு சறுக்கியிருக்கிறது. இச்சிறுகதைத் தொகுப்பை அதன் வெளியீட்டிற்கு முன்னால் ஜெயமோகனிடம் கொடுத்திருந்து அவர் திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாழ்ந்து வரக்கூடிய ஒருவரையாய் இருந்திருந்தால் இத்தொகுப்பு தமிழின் தலைசிறந்த சிறுகதைகளாக மாறியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

Similar Posts

  • அதிக பணம் அச்சடித்தால் என்ன?

    பொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு. இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி. அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு  மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம்…

  • |

    என்றென்றும் வாழும் படைப்புகளும் படைப்பாளர்களும் – எம்.ஏ.அப்பாஸ்

    எம்.ஏ.அப்பாஸ் அவர்களால் எழுதப்பெற்றது. வெளிவந்த ஆண்டு 1960 களின் தொடக்கம். 2006 ஆல் மீண்டும் புதிய பதிப்பாக அம்ருதா பதிப்பகத்தினர் கொண்டு வந்திருக்கின்றனர்.சிறந்த பத்து எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களின் படைப்புகள் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தினையும் செய்யும் புத்தகம். அந்த பத்துப் படைப்பாளிகள் இவர்களே. தஸ்தயேவ்ஸ்கி – ரஷ்யா கார்க்கி – ரஷ்யா T.H. லாரன்ஸ் – இங்கிலாந்து ஹெமிங்வே – அமெரிக்கா ஜேம்ஸ் ஜாய்ஸ் – அயர்லாந்து அல்பட்டோ மொறாவியா –…

  • |

    அபிப்ராய சிந்தாமணி ‍- ஜெயமோகன் (புத்தகம் – 3)

    எழுத்தாளர் ஜெயமோகன் பல்வேறு காலகட்டங்களில் அவருடைய வலைத்தளத்தில் எழுதிய பகடிக்கட்டுரைகளின் தொகுப்பு. எதனையும் மிகவும் வெளிப்படையான நகைச்சுவையாக எதிர்பார்க்கும் தமிழ் வாசகனுக்கு ஒருபடி மேலான நகைச்சுவையையும், அதற்கான சாத்தியங்களை அளிக்கும் நூல். வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பெற்ற கட்டுரைகளாதலால் தொடர்ச்சி என்ற ஒன்று கிடையாது. எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் படிக்கலாம். அத்தோடு பல கட்டுரைகளில் உள்ள அங்கதம் நம்மை சிந்திக்கவும் வைக்கக்கூடியவை. 767 பக்கம் கொண்ட நூலாயினும் வாசிக்கத்தொடங்கியவுடன் நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும் வசீகரம் உண்டு. சிற்றிதழ்கள், தத்துவ…

  • Fail Fast Fail Often

    ரியான் பாபினக்ஸ் மற்றும் ஜான் க்ரும்போட்ஸ் என்ற இருவரால்  எழுதப்பெற்ற சுய முன்னேற்ற புத்தகம் Fail Fast Fail Often. தற்போதைய அறிவியல் உலகின் செயல்பாடுகளின் தாரக மந்திரம் என்பது உடனடி செயல்பாடு, பின்னர் மேம்பாடு என்பதே. இதுவே கூகுள், ஃபேஸ்புக் போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் இன்றைய செயல்முறை. அதாவது முற்றிலும் திட்டமிட்டு அல்லது முழுமையாக தயார் செய்துவிட்ட பின்னர்தான் ஒரு செயலைத் தொடங்கவேண்டும் என்ற செயல்பாடு இக்காலத்திற்கு ஏற்றதல்ல என நிறுவப்பட்டு விட்டது. அதனால் உடனடியாக…

  • | |

    இந்திய சினிமா 100

    இந்திய சினிமா தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடிவிட்டது. விழாவும் எடுத்தாயிற்று. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா இந்திய சமூகத்திற்காக செய்தவை என்று எண்ணினால் ஏமாற்றமே. சினிமா தொடர்பான துறையில் இருப்பவர்கள் வேண்டுமானால் சினிமாவைப் பற்றிப் புள்ளிவிபரங்களை அடுக்கி அதனை நியாயப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கே தெரியும் உண்மை எதுவென்று. அவர்களுக்கு வேறு வழியில்லை. சினிமாவில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே உயரத்தூக்கிக் கொள்வார்கள். அதற்கென்றே உள்ளது இன்றைய ஊடகத்துறை. இயல் இசை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக வந்த சினிமா ஆரம்பகாலங்களில்…

  • |

    ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. பின்வரும் கதைகள் நூலில் உள்ளன. திரஸ்காரம்சாளரம்பிணக்குநந்தவனத்தில் ஓர் ஆண்டிதேவன் வருவாரா?சிலுவையுகசந்திஇருளைத் தேடிசுய தரிசனம்புதிய வார்ப்புகள்அக்கினிப்பிரவேசம்லட்சாதிபதிகள்ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறதுஅந்தரங்கம் புனிதமானதுகுருபீடம்புதுச் செருப்பு கடிக்கும் ஒவ்வொரு கதையும் மனித வாழ்வின் இக்கட்டான அல்லது முக்கிய‌ தருணங்களை விவரிப்பவை. அக்கினிப்பிரவேசம் சிறுகதை பின்னாளில் சில நேரங்களில் சில மனிதர்களாக உருமாறிய கதை. வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.