|

சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

நீண்ட நாட்களாக கேள்விப்பட்டுக்கொண்டு இருந்த, ஆனால் வாசித்திராத ஒரு நாவல். ஜெயகாந்தன் அவர்களால் எழுதப்பெற்று தொடர்கதையாக வெளிவந்தது.

கதை நாயகி கங்கா பாலியல் ரீதியாகப் எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறாள். அதன் காரணமாக அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே நாவலின் சுருக்கம். கங்கா முற்போக்கிற்கும், பிற்போக்கிற்கும் இடையில் அல்லாடும் ஒரு பெண். இந்நாவல் வெளிவந்தது 1970. பெண் கல்வி, வேலைக்கு செல்வது தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்ற கால கட்டம் அது. ஒரு தரப்பில் பெண் கல்வி கற்கச் செல்வதும், வேலைக்கு செல்வதும் ஒழுக்கக்கேட்டினை உருவாக்கும் என தீவிரமாக முன்வைக்கப்பட்டது. மறுதரப்பில் அதற்கு எதிரான ஆதரவுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன‌. அச்சூழ்நிலையில் வெளிவந்த இந்நாவல் அது தொடர்பான பல்வேறு விவாதங்களை உருவாக்கியது. இந்நூலைப் பற்றிய‌ ஓர் விமரிசனக் கட்டுரையில் எழுத்தாளர் ஜெயமோகன், அக்காலகட்டத்தில் உருவான அத்தகைய‌ கருத்து மோதல்கள் இந்நாவல் மீதான உண்மையான ஆழமான வாசிப்பினை மழுங்கச்செய்துவிட்டதாகவும், இந்நூல் மீள்வாசிப்பு செய்யப்பட வேண்டும் என்றும் தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

இருப்பினும் இந்நாவல் அக்காலத்தில் மிகப்பிரபலம் அடைந்தது. இந்நாவல், இதே பெயரில் பின்னாளில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அக்காலகட்டதின் பின்புலத்தை ஏற்கனவே வாசிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ அறிந்த ஒருவருக்கு இந்நாவல் காட்டும் சித்திரம் வேறாக இருக்குமென நினைக்கிறேன். இந்நூலை வாசித்த பின்னர் இந்நூல் தொடர்பான பல்வேறு விமரிசன‌ங்களை வாசித்தேன். பல்வேறு பட்ட கோணங்களில் பல்வேறு விமரிசனங்கள். வாசிக்க வேண்டிய புத்தகம்.

ஜெயமோகனுடைய தளத்தில் இந்நூல் தொடர்பான பல்வேறு கட்டுரைகள் உள்ளன. சில இங்கே.

https://www.jeyamohan.in/98338
https://www.jeyamohan.in/98456

Similar Posts

  • |

    ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. பின்வரும் கதைகள் நூலில் உள்ளன. திரஸ்காரம்சாளரம்பிணக்குநந்தவனத்தில் ஓர் ஆண்டிதேவன் வருவாரா?சிலுவையுகசந்திஇருளைத் தேடிசுய தரிசனம்புதிய வார்ப்புகள்அக்கினிப்பிரவேசம்லட்சாதிபதிகள்ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறதுஅந்தரங்கம் புனிதமானதுகுருபீடம்புதுச் செருப்பு கடிக்கும் ஒவ்வொரு கதையும் மனித வாழ்வின் இக்கட்டான அல்லது முக்கிய‌ தருணங்களை விவரிப்பவை. அக்கினிப்பிரவேசம் சிறுகதை பின்னாளில் சில நேரங்களில் சில மனிதர்களாக உருமாறிய கதை. வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

  • |

    Rich Dad Poor Dad – Robert Kiyosaki

    Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல். இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki…

  • |

    குர் ஆனும் நவீன விஞ்ஞானமும் ‍ – டாக்டர் ஜாகிர் நாயக்

    நவீன விஞ்ஞானம் கண்டறிந்து நிறுவிய பல்வேறு உண்மைகள் ஏற்கனவே எவ்வாறு குர் ஆனில் விளக்கப்பட்டுள்ளது என்பதனை விவரிக்கும் புத்தகம். சாஜிதா புக் சென்டர் வெளியீடு. தமிழாக்கம் இப்னு ஹூசைன். விண்ணியல்,இயற்பியல்,புவியியல்,மண்ணியல்,சமுத்திரவியல்,உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவம், உடல் செயலியல், கருவியல், பொது விஞ்ஞானம் ஆகிய துறைகளின் இந்நூற்றாண்டு கண்டுபிடிப்புகளும் அறிதல்களும் எவ்வாறு ஏற்கனவே குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதனை புத்தகம் முழுவதும் விவரிக்கிறார் ஜாகிர் நாயக். பெருவெடிப்புக் கோட்பாடு, பூமி தட்டையானது அல்ல‌ உருண்டையானது, கோள்கள் சூரியனை மையமாகக்…

  • |

    Work Rules!: Insights from Inside Google

    கூகுள் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரி லாஸ்லோ போக்கால் எழுதப்பட்ட ஓர் சுய முன்னேற்ற நாவல். பெரும்பாலும் இந்நாவல் மற்ற நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகளை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மேலாண்மை அதிகாரியின் பார்வையில் எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பேணலாம் என விளக்குவதே இப்புத்தக்கத்தின் அடிப்படை. பணியாளர் விரும்பும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்க‌க்கூடிய நிறுவனங்களில் கூகுள் ஒன்று. லாஸ்லோ போக் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எப்படி கூகுளை அந்த நிலையை அடைய…

  • விளையாட்டல்ல வியாபாரம்

    சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலானவர்களின் பேச்சுக்களில் இந்த வார்த்தை இடம் பிடித்திருக்கும். IPL அவர்கள் அனைவருக்கும் (எனக்கும் சேர்த்து) கேள்வி இதுதான். IPL ஆல் அடைந்த நன்மைகள் என்னென்ன? பட்டியலிடுங்கள். நன்மை என்பது உங்களுக்காகவோ நாட்டுக்காகவோ இருக்கலாம். சிறந்த பொழுதுபோக்கு என்பதை தவிர்த்து ஒரு சில நன்மைகளை மட்டும்தான் கூற முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

  • Words at Work

    இந்த புத்தகத்தினை தலைப்பினைக்கொண்டு வேலை செய்யும் இடத்தில் சொற்களைக் கையாள்வது எப்படி என்ற எண்ணத்தில் வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் இந்த புத்தகம் அதைப்பற்றி அல்லாமல் ஒவ்வொரு துறை சார்ந்த இடத்திலும் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள், அதற்கு அவர்கள் மொழியிலான பொருள் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. மிக எளிய நூலாக இருப்பினும் மிகுந்த சிரத்தையின் ப‌லனாகவே இந்த எளிமை சாத்தியமாயிருக்கிறது. எந்த ஒரு புத்தகத்திலும் கற்றுக்கொள்வதற்கு தக‌வல்கள் உண்டு என்ற என் எண்ணம் மீண்டும் இந்த புத்தகத்தை வாசிக்கும் பொழுது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.