|

THE ANTHROPOCENE REVIEWED – JOHN GREEN (புத்தகம் – 2)

The Anthropocene Reviewed

John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என‌ எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால், தானும் தான் எழுதுபவற்றை பற்றிய அனைத்திற்கும் ஐந்திற்கு இத்தனை என மதிப்பிடுவதாக நூலின் ஆரம்பத்திலேயே கூறிவிடுகிறார்.

இந்நூலின் சிறப்பம்சம் என்பது, இதிலுள்ள பல நுண்தகவல்கள்தான். இப்புத்தகம் ஒரு கற்பனாவாத, இலக்கிய புத்தகம் இல்லை. மாறாக வரலாற்றில் நடந்த‌ அல்லது நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளை நாம் அறியாத்தகவல்களோடு தருவது. உதாரணமாக TEDDY BEAR நாம் அனைவரும் விரும்பும் ஒரு பொம்மை. குறிப்பாக பெண் குழந்தைகள் விரும்பும் பொம்மையாக ஆகி அது மிகப்பெரும் வியாபாரமாக இன்று உலகம் முழுவதிலும் ஆகிவிட்டது. ஆனால் அதன் வரலாறு சற்றே விசித்திரமானது.

ஸ்காண்டிநேவிய நாடுகளில் சென்ற நூற்றாண்டில் கரடி என்ற பெயரை உச்சரிப்பது கெட்ட சகுனமாகப் பார்க்கப்பட்டது . கரடி என உச்சரித்தால் கரடி வந்துவிடும் என நம்பப்பட்டது. அது வந்தால் ஏற்படக்கூடிய அழிவுகளைப் பற்றிய பயத்தினால் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையில் 1800 களின் பிற்பாதியிலும் 1900 களின் ஆரம்பத்திலும் மனிதர்களாலேயே அதிகம் கரடிகள் கொல்லப்பட்டன. குறிப்பாக கரடியைக் சங்கிலியால் கட்டி வைத்து நாய்களால் கடிக்கச்செய்து சாகடிக்கும் விளையாட்டு இங்கிலாந்தில் மிகப்பிரபலமாக இருந்திருக்கிறது. கரடியையும் காளையையும் கூண்டினுள் சண்டையிட வைத்து அவை இறப்பதை வேடிக்கை பார்ப்பது மன்னர்களால் பெரிதும் விரும்பப்பட்டிருக்கிறது. அத்தோடு வேட்டையும் அதிகமாக இருந்ததால் கரடிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துகொண்டிருந்த‌ காலகட்ட‌ம் அது.

அக்காலக்கட்டத்தில் 1902 ஆம் ஆண்டு அப்போதைய‌ அமெரிக்க அதிபர் Teddy Roosevelt வேட்டையாட தன்னுடைய காவலர்கள், நாய்கள் சகிதம் சென்றிருக்கிறார். கரடி எதுவும் தென்படாததால், சில காவலர்களையும் நாயையும் கரடியைத் தேடும்படி கூறிவிட்டு உணவருந்த வந்துவிட்டார். பின்னர் அவருடைய காவலர்களும், நாய்களும் ஒரு கரடியைக் கண்டுபிடித்து அதனை ச‌ங்கிலியால் கட்டி வைத்துக்கொண்டு அவரை வரும்படி ஒலி எழுப்ப அங்கு வந்தார் ரூஸ்வெல்ட்.

Washington Post – Clifford Berryman

ரூஸ்வெல்ட் வந்து பார்த்தபொழுது, பாவமாக சங்கிலியால் கழுத்து கட்டப்பட்டிருந்த கரடியைக் கொல்ல மனமில்லாமல் அதனை சுட மறுத்துவிடுகிறார். இந்நிகழ்வைக் கேள்விப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் கார்டூனிஸ்ட் Clifford Berryman அதனை ஒரு சித்திரமாக வரைந்து பத்திரிக்கையில் வெளியிட்டுவிடுகிறார். அதில் அவர் அக்கரடியை குட்டியாகவும், அதன் கண்களை பாவமாகப் பார்க்கும்படியும் வரைந்திருக்க அது மிகப்பிரபலம் அடைகிறது. (பார்க்க படம்) அப்போது ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேரியிருந்த‌ இரு நண்பர்கள், தங்களுடைய மிட்டாய்க்கடையில் அதனைப் போன்ற ஒரு பொம்மையைச் செய்து அதற்கு Teddy Bear எனப் பெயர் வைத்து விற்பனைக்காக வைக்கின்றனர். அது உடனடியாக விற்றுத்தீர டெடி பியர் வியாபாரம் துவங்குகிறது. பின்னர் சில நிறுவனங்கள் இப்பொம்மையை செய்யத்தொடங்கி ஒரு கட்டத்தில் 10 லட்சம் பொம்மைகள் விற்கும் அளவிற்கு Teddy Bear பிரபலம் அடைகிறது. இதுதான் நாம் இன்று Cute என்று சொல்லிக் கொஞ்சும் Teddy Bear ன் வரலாறு.

இதில் மற்றொரு தகவலும் உண்டு. ரூஸ்வெல்ட் தான் கொல்லவில்லையே தவிர, அவருடைய காவலர்களால்
அக்கரடி கொல்லப்பட்டு அதன் தலை ரூஸ்வெல்டிடம் அளிக்கப்பட்டது. இது போல 40க் கும் மேற்பட்ட கட்டுரைகள். பெரும்பாலான கட்டுரைகள் தகவல்களால் நிரம்பியுள்ளன. வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இப்புத்தகம் மிகச்சுவாரசியமாக இருக்கும்.

தனித்தனிக்கட்டுரைகள் என்பதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் வாசிக்கலாம். பாணியியிலேயே சொல்வதானால் “I give The Anthropocene Reviewed three and a half stars”

Similar Posts

  • | |

    அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

    கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி. அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப் பற்றியவையே. இதனை அவர் திட்டமிட்டு செய்ததாக நினைக்கவேண்டியதில்லை. அக்காலகட்டத்தின் சமூகப்பார்வையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…

  • |

    சூல் ‍- சோ.தர்மன்

    2019 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் தொடங்கி சுதந்திரத்திற்குப் பிந்தைய ஜனநாயக அரசுகள் வரையிலான காலகட்டத்தினை ஒட்டிய ஒரு சுற்று வட்டார கிராமங்களின் கதை. ஒட்டுமொத்த கதையும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தினை ஒட்டி அமையும் கதை அல்ல இது. கிராமங்களில் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களும் அதற்கு முந்தைய பிந்தைய மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுமாக அமைந்த நாவல். ஒரு நீர்ப்பாய்ச்சியும், ஒரு கண்மாயுமே கதையின் மையம். கண்மாயின் நீரை அக்கண்மாய்க்குப்…

  • |

    ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது – ஜெயகாந்தன்

    ஜெயகாந்தன் அவர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. பின்வரும் கதைகள் நூலில் உள்ளன. திரஸ்காரம்சாளரம்பிணக்குநந்தவனத்தில் ஓர் ஆண்டிதேவன் வருவாரா?சிலுவையுகசந்திஇருளைத் தேடிசுய தரிசனம்புதிய வார்ப்புகள்அக்கினிப்பிரவேசம்லட்சாதிபதிகள்ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறதுஅந்தரங்கம் புனிதமானதுகுருபீடம்புதுச் செருப்பு கடிக்கும் ஒவ்வொரு கதையும் மனித வாழ்வின் இக்கட்டான அல்லது முக்கிய‌ தருணங்களை விவரிப்பவை. அக்கினிப்பிரவேசம் சிறுகதை பின்னாளில் சில நேரங்களில் சில மனிதர்களாக உருமாறிய கதை. வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

  • |

    Flutter in action – Eric Windmill

    Written by Eric Windmill. As the name describes, this book is about Google’s open source hybrid framework which can be used to develop mobile applications for the android and iOS platforms. If you are a back end/front end/full stack developer, interested in mobile app development this will be one of the good choices to start…

  • | |

    தற்கொலைக் குறுங்கதைகள் – அராத்து

    அராத்து அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கதைகளை உயிர்மை பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். எதேச்சையாக கண்ணில் பட்ட நூல், இந்நூலின் வெளியீட்டு விழாவில் சாருவும், ஜெயமோகனும் கலந்துகொண்ட நினைவு. அதனால் இப்புத்தகத்தை வாசிக்கலாம் என நினைத்து எடுத்து வந்தேன். ஒட்டுமொத்த நாவலின் பெரும்பான்மை பேசுபொருள் உடலுறவு. காமம் அல்ல. இதற்கு பாலுறவுக் கதைகளாகவே வெளியிடப்படும் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை. அவர்கள் அவர்களுடைய கதைகளை உலகத்தர நாவல் என்றோ அல்லது தமிழின் முதல் ஃபோர்னோ நாவல் என்றோ இன்ன பிற…

  • |

    என்றென்றும் வாழும் படைப்புகளும் படைப்பாளர்களும் – எம்.ஏ.அப்பாஸ்

    எம்.ஏ.அப்பாஸ் அவர்களால் எழுதப்பெற்றது. வெளிவந்த ஆண்டு 1960 களின் தொடக்கம். 2006 ஆல் மீண்டும் புதிய பதிப்பாக அம்ருதா பதிப்பகத்தினர் கொண்டு வந்திருக்கின்றனர்.சிறந்த பத்து எழுத்தாளர்களைப் பற்றிய சிறிய வாழ்க்கைக் குறிப்பும், அவர்களின் படைப்புகள் பற்றிய ஒரு எளிய அறிமுகத்தினையும் செய்யும் புத்தகம். அந்த பத்துப் படைப்பாளிகள் இவர்களே. தஸ்தயேவ்ஸ்கி – ரஷ்யா கார்க்கி – ரஷ்யா T.H. லாரன்ஸ் – இங்கிலாந்து ஹெமிங்வே – அமெரிக்கா ஜேம்ஸ் ஜாய்ஸ் – அயர்லாந்து அல்பட்டோ மொறாவியா –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.