மகாபாரதம்:அறத்தின் குரல் – நா.பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி அவர்களால் 1964 ஆம் ஆண்டு தமிழில் எழுதப்பெற்ற காவியம். அரைகுறையாகத் தெரிந்த மகாபாரதத்தினை முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பி வாசித்த நூல். வாசிப்பின் முடிவில் புலப்படுவதென்னவோ முழு மகாபாரதத்தையும் புரிந்து கொள்வதென்பது இயலாத ஒன்று என்பதையே. mahabaratham

எந்த ஒரு மகாபாரதப் பதிப்பினையும் எழுதப்பெற்ற ஆசிரியரின் பார்வையில் மகாபாரதம் எனப் பொருள் கொள்வதே சரி எனலாம். அத்துணை பெரிய காவியம். எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள். படிக்க படிக்க திகட்டாத, தீராத காவியம். இந்து மரபின் உயரிய கருத்தான அறத்தை விளக்கும் காவியம். எவ்வளவு பருகினாலும் தாகத்தை தணிக்காத‌ காவியம். 

வடமொழியில் எழுதப்பெற்ற மகாபாரதத்தின் முழு தமிழ் மொழிபெயர்ப்பான கும்பகோணப் பதிப்பின் பக்கங்கள் 12000 க்கும் மேல். நாம் படிப்பதெல்லாம் கதைச் சுருக்கங்களே என்றாலும் நா.பார்த்தசாரதி அவர்கள் 600 பக்கத்திலேயே வெகு அழகாகவும், தொன்மையாகவும் மகாபாரதக் கதையினை விளக்கியிருக்கின்றார்.  முதன் முதலாக மகாபாரதத்தினை படிக்க விரும்புபவருக்கு ஏற்ற பதிப்பாக இதைக் கொள்ளலாம். 

வாசிப்பின் முடிவில் நம் அற உணர்வு தூண்டப்படுவதை படிக்கும் முன்னரும் பின்பும் இருக்கும் மனநிலை மாறுபாட்டிலேயே உணரலாம். ஒட்டுமொத்த மகாபாரதமுமே பெண்களாலேயே இயக்கப்படுகிறது என்பதை உணரும்போது ஒரு வித ஆர்வமும் சிலிர்ப்பும் நம்முள்ளே தொற்றிக்கொள்கிறது. ஆம் திருதராட்டிரனும், பாண்டுவும் சத்யவதியாலும், கௌரவர்கள் காந்தாரியாலும், பாண்டவர்கள் குந்தியாலும் பின்னாளில் த்ரௌபதியாலுமே இயக்கப்படுகிறார்கள். 

வடமொழிக்கலப்பில்லாத சிறந்த மொழியாக்கம். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நூல்.

 

நீங்கள் படிக்க விரும்பினால் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

 அறத்தின் குறல்‍ – மகாபாரதம் நா.பார்த்தசாரதி

  

Similar Posts

  • |

    கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்

    1950 களில் ப.சிங்காரம் அவர்களால் எழுதப்பெற்ற நாவல். இந்தோனேசியாவில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியலே கதையின் கரு. இந்த நாவலே முதன்முதலாக ப.சிங்காரத்தால் எழுதப்பெற்ற நாவல். இந்நாவலின் தொடர்ச்சியாகவே புயலிலே ஒரு தோணியை எழுதினார். ஆதலால் இந்த நாவலுக்கும் புயலிலே ஒரு தோணிக்கும் ஓர் இணைப்பை உணரலாம். அதே கதை மாந்தர்கள், அதே காலகட்டம். ஆனால் சற்றே வேறான கதைக்களம். வேலைக்காக இந்தோனேசியாவிலுள்ள ஒரு செட்டியாரிடம் அடுத்தாள் வேலைக்கு செல்கிறான் செல்லையா. அவனுடைய செட்டியார் முதலாளியும் அவனுடைய…

  • | | | | |

    புதிய தலைமுறை வார இதழில்

    நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…

  • |

    மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

    ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின் ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்பும் தரப்படுகிறது. இரண்டாவது பாகம் கவிதையின் மொழிபெயர்ப்பு ஆதலால் ஆர்வமுடன் வாசிக்க முடிகிறது. ஆனால் முதல் பாகம்…

  • மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது

    மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு – பசித்த பொழுது. படிக்கும் பொழுது “இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?” என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கான ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு. உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே.  பெரும்பாலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக வடித்திருக்கிறார். சமூக பொருளாதார சித்தாந்தங்களெல்லாம் ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை எனலாம். மொத்தம் உள்ள 236 கவிதைகளில் 99% கவிதைகளை காமம், மழை,…

  • |

    Rich Dad Poor Dad – Robert Kiyosaki

    Robert Kiyosaki ஆல் எழுதப்பெற்று 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வாழ்வில் பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு தனி மனித நுண்ணறிவு எத்தகைய முக்கியமான ஒன்று என்பதனை விவரிக்கும் நூல். 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான நூல். இந்நூல் வாசிப்பவர்கள் பொருளாதார தன்னிறைவினை அடைந்தார்கள் என்பதனை விட‌ Robert Kiyosaki கண்டிப்பாக இப்புத்தகத்தினால் பொருளாதார நிறைவினை அடைந்திருப்பார் என்பது நிதர்சனம். இப்புத்தகத்தினை பத்து தனி அத்தியாயங்களாக‌ Robert Kiyosaki…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.