ராமரும் பாபரும்

திசம்பர் 6, 1992. அயோத்தியிலிருந்த பாபர் மசூதி முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்ட நாள். 20 ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது இறுதித்தீர்ப்பை அறிவித்து விட்டது. (அதனை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பது வேறு.) இந்நிலையில் எஸ். சொக்கனால் தொகுக்கப்பட்டு இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள நூல் அயோத்தி. முதல் பதிப்பில் பெற்ற வரவேற்பின் காரணமாக, இறுதித் தீர்ப்பு விவரங்களோடு, மேலும் பல விவரங்களையும் இணைத்து வெளிவந்துள்ள நூல். ayodhi

முதன் முதலாக பாபர் ஆப்கனிலிருந்து வந்து டில்லி மீது படையெடுத்த முதலாம் பானிபட் போர், அயோத்தியை வென்று 1528 ல் பாபர் மசூதியை கட்டுதல், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள், இடைப்பட்ட காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள், 1947 ல் மசூதியின் உள்ளே புகுந்து ராமர், சீதா சிலைகளை நிறுவியது, அதன் பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், அரசியல் நிகழ்வுகள், 1992 ல் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து உத்திரப் பிரதேச அரசு கலைப்பு, மும்பை கலவரம், குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், பின்னர் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள், இறுதித் தீர்ப்பு விவரம் என ஒட்டு மொத்த தகவல்களையும் எந்த ஒரு சாரரின் சார்பும் இன்றி தகவல்களாக மட்டுமே தொகுத்துள்ளார் ஆதாரங்களோடு. பாபர் மசூதி தொடர்பான முழு தகவல்களையும் புரிந்து கொள்ள சிறந்த தொடக்க நூல்.

முடிவில் யாரும் தீர்ப்பை ஏற்காத நிலையில் வாசிப்பின் முடிவில் நமக்குத் தோன்றுவதெல்லாம் “ராமரும் பாபரும் இன்று இருந்திருந்தால் அவர்களே சமாதானமாகப் போயிருப்பார்கள்”

Similar Posts

  • | |

    மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்

    எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே….

  • உலகத்தொழிலாளர்களே! (ஆசானிடமிருந்து)

    உலகத்தொழிலாளர்களே என்ற தலைப்பில் மே தினத்தினையொட்டி ஆசான் 2011 ல் எழுதிய கட்டுரை. எத்துனை அடர்த்தியான கட்டுரை. அவர் ஆசானாக இருப்பதில் வியப்பேதுமில்லை. நன்றி: ஜெயமோகன் http://www.jeyamohan.in/16732#.VUbd7_mqqko மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்! அப்போது மனதில் பட்டதைச் சொன்னாலும் அதன்பின் அச்சிந்தனைகளை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. இன்று உழைப்பாளிகளின் நிலைமை எப்படி இருக்கிறது,…

  • ஜெயமோகன் அவர்களிடமிருந்து

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நான் எழுதிய மடலுக்கான ஜெயமோகன் அவர்களுடைய‌ பதிலை இங்கே பதிவிடுகிறேன். நான் படித்த சில புத்தகங்கள் வாயிலாகவே என்னையறியாமல் வந்த தலைக்கனத்தின் மீது மீண்டும் ஒரு குட்டு. நான் செப்பனிடப்படுகிறேன். அன்புள்ள மகிழ்நன் உங்கள் முந்தைய கதைக்கான என் பதிவுக்கு நீங்கள் இப்படி எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள் என்றால் வருந்துகிறேன். நீங்கள் உங்கள் இடத்தை, நிலையை சற்றும் பரிசீலனைசெய்ய தயாராக இல்லை என்றுதான் அர்த்தம். எழுத்தாளர்களின் இயல்பு அது அல்ல. உங்கள் கடிதம் அதிலுள்ள கோபம்…

  • |

    சமையல்கட்டும் கிச்சனும்

    கிச்சன் என்ற சொல் சமைய‌ல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கே தரையில் உட்கார்வதற்கு வழியே இல்லை. மிகக்குறுகலான இட வசதி கொண்டதாக இருக்கும். நகரங்களின் இடவசதிப்பற்றாக்குறையில் அதற்கு ஆகக்குறைந்த அள‌விற்கே இடம் ஒதுக்கும் இன்றைய சூழ்நிலையில் வேறு வழியும் இல்லை. ஆனால் நான் உணர்ந்த…

  • கேள்வியும் பதிலும்

    நம்மிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. அது சரியானதா இல்லையா என்பதை விட என்னால் பதிலளிக்க முடிகிறது என்பதனையே நம் திறமையாக எண்ணுகிறோம். நமக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலோ, கேள்வி ஞானத்தின் அடிப்படையிலோ இப்போதைய கேள்விக்கான பதிலை உருவாக்குகிறோம். பின்னர் அதை மெய்ப்பிப்பதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் நம் மனம் இறங்கி விடுகிறது. கற்றலின் முதல் நிலையென்பதே நமக்குத் தெரியாத ஒன்றை தெரியாது என ஒப்புக் கொள்வதிலிருந்தே தொடங்குகிறது. நாம் ஒருவருடைய கேள்விக்கு பதிலளிக்கும்போதே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.