|

சமையல்கட்டும் கிச்சனும்

கிச்சன் என்ற சொல் சமைய‌ல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கே தரையில் உட்கார்வதற்கு வழியே இல்லை. மிகக்குறுகலான இட வசதி கொண்டதாக இருக்கும். நகரங்களின் இடவசதிப்பற்றாக்குறையில் அதற்கு ஆகக்குறைந்த அள‌விற்கே இடம் ஒதுக்கும் இன்றைய சூழ்நிலையில் வேறு வழியும் இல்லை.

ஆனால் நான் உணர்ந்த சமைய‌ல்கட்டு என்பது மிகவும் அந்நியோன்யமானது. என் அம்மாவோடும், அக்காக்களோடும் அமர்ந்து சமையல்கட்டில் பேசும் போது ஏற்படும் மகிழ்ச்சி என்பது வீட்டின் ஹாலில் அமர்ந்து பேசுவதைவிட மிக பல நூறு மடங்கு நெருக்கமானது. அம்மா சமைத்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள், அக்காவும் சமையலறையிலேயே உட்கார்ந்து இருப்பார்கள். முற்றிலும் வெட்டிப்பேச்சே அங்கு மையம். அங்கு பேசப்படும் விஷயம் பலநூறு முறை முன்னர் பேசப்பட்டதாகவே இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது புதியதாக இருக்கும். எங்களுடைய புதிய வீட்டில் சமையல்கட்டு அமைக்கும் பொழுது அத்தனை திட்டமிட்டெல்லாம் சமையல்கட்டு அமைக்கவில்லை. ஆனாலும் இயல்பிலேயே நான் என் ஆழ்மனதில் விரும்பிய ஒரு சமையல்கட்டாகவே அது அமைந்து விட்டது. நல்ல இடவசதி. சமையல்கட்டில் இருந்து பின்புறம் செல்ல‌ கொல்லைப்புறமாக ஒரு வழி, உள்ளே டைனிங்க் ஹால் செல்ல ஒரு வழி. ஆக எப்பொழுதும் நல்ல வெளிச்சமாகவே இருக்கும்.

அத்தோடு வெளியே செல்லும் ப‌டிக்கட்டில் அமர்ந்துகொண்டு பேசுவது என்பது அத்தனை மகிழ்ச்சியானது. ஒவ்வொரு முறையும் அம்மா வெளியே செல்லும்போதும் ஏண்டா படிக்கட்டுல உட்கார்ர‌? அங்கிட்டு உட்கார்ந்தா என்ன என்று சொல்லிக்கொண்டே செல்வதும் வருவதுமாக இருப்பார்கள். பாட்டி வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்துகொண்டு ஏதாவது அரைத்துக் கொண்டோ, பாத்திரம் கழுவிக்கொண்டோ இருப்பார்கள். அதனால் உள்ளிருந்து வெளியிலேயும், வெளியிலிருந்து உள்ளேயும் ஏதாவது போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும். இதற்கிடையில் அம்மா சமைக்க எடுக்கும் ஒவ்வொரு பொருளிலும் ஏதாவது தின்னும் பொருளிருந்தால் எடுத்து நீட்டுவார்கள். அதனையும் தின்று கொண்டே பேச்சைத் தொடர்வோம். விரும்பிய சமையலறை அமைவதென்பதே ஒரு வரம்தான் என்ன!

Similar Posts

  • தேசியக்கட்சிகள் ஏன் மாநிலத்தை ஆளக்கூடாது?

    முந்தைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தின் இறுதியிலும், இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் அப்போதைய அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய தகவல் கூட்டணி ஆட்சியாக இருப்பதனால் தங்களால் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரமுடியவில்லை என்பது. 2009 ல் நடைபெற்ற‌ தேர்தலில் 206 இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையைவிட 66 இடங்கள் குறைவாக வென்றிருந்தது. தாங்கள் பெரும்பான்மை பெறாத காரணத்தால் தன்னிச்சையாக எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க முடியவில்லை என‌ மன்மோகன் சிங்கே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது…

  • நுகர்வு எனும் நோய்

    இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் குறித்த சுதந்திரத்திற்கு முந்தைய பிந்தைய நிகழ்வுகள், வனத்தைக் காத்தல் என்ற பெயரில் காட்டுவாசிகளை விரட்டி காட்டை வணிக நோக்கில் பயன்படுத்திய‌ செயல்பாடுகள்,அமெரிக்க வாழ்வினை போல வாழ முயலும் நம்முடைய நுகர்வு என‌ ஒட்டுமொத்த சூழலியல் பார்வையே how much a person should consume?. ராமச்சந்திர குஹா அவர்களால் ஆங்கிலத்தில்ல் எழுதப்பெற்ற‌ இந்நூல் தமிழில் போப்பு அவர்களால் நுகர்வெனும் பெரும்பசி எனும் பெய‌ரில் வெளிவந்துள்ளது.  தனிமனிதன் செய்யும் மனித குல அழிவிற்கான செயல்…

  • விளையாட்டல்ல வியாபாரம்

    சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலானவர்களின் பேச்சுக்களில் இந்த வார்த்தை இடம் பிடித்திருக்கும். IPL அவர்கள் அனைவருக்கும் (எனக்கும் சேர்த்து) கேள்வி இதுதான். IPL ஆல் அடைந்த நன்மைகள் என்னென்ன? பட்டியலிடுங்கள். நன்மை என்பது உங்களுக்காகவோ நாட்டுக்காகவோ இருக்கலாம். சிறந்த பொழுதுபோக்கு என்பதை தவிர்த்து ஒரு சில நன்மைகளை மட்டும்தான் கூற முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

  • |

    பெண்கள்,படைப்பாளிகள்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்

    சமீபத்தில் நடைபெற்று வரும் இளம் படைப்பாளிகள் தொடர்பான கருத்து மோதல்களை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அது தொடர்பான முழு சித்திரத்தையும் அறிந்து கொள்ள தொகுத்துள்ளேன். ஆனந்த விகடன் வார இதழின்  விகடன் மேடை பகுதியில் ஒரு வாசகரின் கேள்வியும் அதற்கு நாஞ்சில் நாடன் அவர்களின் பதிலும் என இந்நிகழ்வு தொடங்கியது. ”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?” பார்வதி, திருநெல்வேலி நாஞ்சில் நாடன்: ”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி,…

  • நாம் நாமல்ல

    நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.