Author: மகிழ்நன்

அடைமொழி

அடைமொழிக்கு ஆசைப்படும் மனிதாஅறிவாயா? இறந்தபின் உன் பெயரே உனதில்லை,பிணமென்பார்.

Continue Reading அடைமொழி

மச்சம்

இறைவன் வரைந்த கவிதையின் முற்றுப்புள்ளி,என்ன‌வளின் முகத்தில் மச்சம்.

Continue Reading மச்சம்

சாவு – சிறுகதை

நான் இதுவரைக்கும் பாக்காத‌ சாவு அது. வழக்கம்போல ஆபீசில‌ வேலை பார்த்துக்கிட்டுருக்கும்போதுதான் அந்த போன் வந்துச்சு. “நம்ம ஹவுஸ் ஓனர் அம்மா எறந்துட்டாங்க”. சொன்னது என் ரூம் மேட். கூடவே இதையும் சொல்லிட்டார். “வீட்ல சமைக்க முடியாதாம்; வெளியில சாப்பிட்டுக்கச் சொல்லிட்டார்”. போனை வச்சுட்டார். நான் வேலை பாக்குறது சிங்கப்பூருல.. வந்து வருச‌ம் ஒன்னாச்சு. நம்ம…

Continue Reading சாவு – சிறுகதை

மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது

மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு – பசித்த பொழுது. படிக்கும் பொழுது “இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?” என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கான ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு. உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே.  பெரும்பாலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக…

Continue Reading மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது

சிறிது வெளிச்சம் – என் பார்வையில்

சமீபத்தில் ராமகிருஷ்ணன் எழுதிய “சிறிது வெளிச்சம்” நூலைப் படித்தேன். ஆனந்த விகடனில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல புத்தகம். நாம் அன்றாடம் சந்திக்கும் கவனிக்காது விட்ட பல்வேறு அவலங்களையும், மகிழ்வுகளையும் விவரித்திருக்கிறார். வாரம் தோறும் வெளியானதாலோ என்னவோ ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகவே இருக்கின்றன. ஆனாலும் தனித்தனியே ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சமூகக் கருத்தை…

Continue Reading சிறிது வெளிச்சம் – என் பார்வையில்

நாம் நாமல்ல

நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். எனது பள்ளி நாட்களில் நான் முதல்…

Continue Reading நாம் நாமல்ல

இசையும் பாடலும்

நம் மனநிலையை மாற்றும் சக்தி இசைக்கும் பாடலுக்கும் எப்போதுமே உண்டு. இசையும் பாடலும் ஆரம்ப காலம் தொட்டே நம்மோடு இணைந்து வருகிறது. முற்றிலும் படிப்பறிவில்லாத காலகட்டத்திலும் கூட நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே கிராம மக்கள் வேலை செய்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றும் சில கிராமங்களில் வேலை நேரங்களின் போது வேலையாட்கள் பாடுவதைக் கேட்கலாம். நன்கு உற்று…

Continue Reading இசையும் பாடலும்

அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

சில்லறை வர்த்தக அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்? இந்தியச் சந்தையில் அந்நிய முதலீட்டிற்கான பல்வேறு விதிகளையும், உச்ச வரம்பையும் மத்திய அரசு தளர்த்தியிருக்கின்றது. அதில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனைத்து மாநில ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்து அதன் காரணமாக எழுந்த கொந்தளிப்புகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. இது தற்காலிகம்தான். …

Continue Reading அந்நிய நேரடி முதலீடு என்ன செய்யும்?

விஜய் டிவியில் எப்படி Program நடத்துவது?

எளிய‌ வழிமுறைகள். 1. எந்த program ஆ இருந்தாலும் அதுல குண்டா ஒரு பையன் இருக்கணும். (Ex 7C,கனா காணும் காலங்கள், Super Singer இப்படி) 2. program 30 நிமிஷம்னா விளம்பரம் கொறஞ்சது 6 மணி நேரமாவது போடணும். (Ex: இளையராஜா கனடாவுல பண்ற program 1 மணி நேரம்னா, விளம்பரம் 15 மணி…

Continue Reading விஜய் டிவியில் எப்படி Program நடத்துவது?

விளையாட்டல்ல வியாபாரம்

சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலானவர்களின் பேச்சுக்களில் இந்த வார்த்தை இடம் பிடித்திருக்கும். IPL அவர்கள் அனைவருக்கும் (எனக்கும் சேர்த்து) கேள்வி இதுதான். IPL ஆல் அடைந்த நன்மைகள் என்னென்ன? பட்டியலிடுங்கள். நன்மை என்பது உங்களுக்காகவோ நாட்டுக்காகவோ இருக்கலாம். சிறந்த பொழுதுபோக்கு என்பதை தவிர்த்து ஒரு சில நன்மைகளை மட்டும்தான் கூற முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Continue Reading விளையாட்டல்ல வியாபாரம்