|

கன்னி நிலம் – ஜெயமோகன்

ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது. மணிப்பூர் மாநில எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ அதிகாரி நெல்லையப்பனின் கதை, ஜெயமோகனுக்கே உரிய சொல்லாடல்களுடன்.

நெல்லையப்பன் மணிப்பூர் எல்லையில் பணியாற்றும் ராணுவத் தலைமை அதிகாரி. அவர்கள் ஒருநாள் தங்களுடைய வழக்கமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது காட்டுப்பகுதியில் ஒரு போராளிப்பெண்ணை கைது செய்கிறார்கள். அப்பெண்ணை கைது செய்து ராணுவ முகாமுக்கு கொண்டு வரும் வழியில் போராளிக்குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களில் சிலர் இறந்து விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களிடம் கைதியாக மாட்டிக்கொள்கின்றனர். மீதமுள்ளவர்கள் ராணுவ முகாமுக்கு திரும்புகின்றனர். அதனைத் தொடர்ந்து ராணுவத்திற்கும், அப்போராட்டக்குழுவிற்கும் சமரசப் பேச்சுவார்த்தை நடக்கிறது. ராணுவ வீரர்களை விடுவிக்கக் கோருகிறது ராணுவம். ஜ்வாலாமுகியை விடுவிக்க போராளிகள் கோருகிறார்கள்.

இதற்கிடையில் அப்பெண்ணை விசாரிக்கும் நெல்லையப்பன் அவள் ஏதோ ஒரு விதத்தில் அக்குழுவிற்கு முக்கியமானவள் என்றும் அதனால் தான் இத்தனை தூரம் அவர்கள் அவளை மீட்க முயலுகிறார்கள் எனவும் நினைக்கிறான். அதனால் அவள் பற்றிய தகவல்களை ராணுவத் தலைமையகத்திற்கு அனுப்ப உத்தரவிடுகிறான். அவள் பெயர் ஜ்வாலாமுகி என்றும், அவள் அப்போராளிக்குழுத் தலைவரின் மகள் என்பதும் தெரிய வருகிறது. அத்தோடு அவளை உயிருடன் ராணுவத்தலைமையகம் கொண்டுவருமாறும் உத்தரவிடப்படுகிறது.

இந்நிலையில் போராளிக்குழுவால் கைது செய்யப்பட்ட‌ ராணுவ வீரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டது தெரிகிறது. அதனைத் தொடர்ந்து போராளிக்குழு ராணுவ முகாமைத் தாக்க திட்டமிடுகிறது. அதனை அறியும் நெல்லையப்பன் ராணுவத்தலைமையகத்துக்கு உடனடியாக‌ தகவல் தெரிவிக்க உத்தரவிடுகிறான். அச்சமயத்தின் புயல் காரணமாக உடனடியாக அதனை செய்ய முடியவில்லை.

அவர்கள் ராணுவ முகாமைத் தாக்குகிறார்கள். அவர்கள் எண்ணிக்கை பல்ம‌டங்கு இருப்பதை அறியும் நெல்லையப்பன் இருக்கும் ராணுவத்தையும் ஆயுதங்களையும் கொண்டு முடிந்தவரை போரிடுகிறான். போராளிக்குழுவின் கை ஓங்குகிறது. ஒருகட்டத்தில் இதற்கு மேலும் போரிட முடியாது என உணரும் நெல்லையப்பன் ஜ்வாலாமுகியோடு தப்பியோடுகிறான். அவளை எப்படியாவது ராணுவத்தலைமையிடம் கொண்டு சேர்த்துவிட நினைக்கிறான்.

காட்டுக்குள் தப்பியோடும் நெல் ஒரு கட்டத்தில் ஜ்வாலாமுகியோடு நெருக்கமாகிறான். அதனைத் தொடர்ந்து காதலிக்கும் இருவரும் இருபக்கமும் சேராமல் இந்தியாவிற்கும் மியான்மருக்கும் நடுவில் இருக்கும் நோ மென்ஸ் லேண்டில் வாழ விரைகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் நிலையில் ராணுவத்திற்கு துரோகம் செய்து காட்டிக்கொடுத்துவிட்டதாக எண்ணும் ராணுவம் இருவரையும் கைது செய்கிறது. நெல் துன்புறுத்தப்படுகிறான். நெல்லையப்பனின் விளக்கங்கள் ஏற்கப்படவில்லை. இதற்கிடையில் ஜ்வாலாமுகி ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படுகிறாள்.

பின்னர் ஒரு கட்டத்தில் ராணுவத்தில் இருந்து தப்பிக்கும் நெல் ஜ்வாலாமுகியோடு போய் சேர்கிறான். இருவரும் மீண்டும் நோ மென்ஸ் லேண்டுக்கு செல்கிறார்கள். வாழ்க்கை தொடங்குகிறது.

ஜெயமோகன் அவர்கள் தனக்கே உரிய வகையில் காட்சிகளை கண்முன்னே வடித்திருக்கிறார். அவருடைய வெண்முரசு நாவலினை வாசித்த பொழுது நான் நினைப்பதுண்டு எப்படி இத்தனை நுணுக்கமாக விவரிக்க முடியும் என்று. ஆனால் இந்நாவலை வாசித்த பின்னர் தோன்றுகிறது இவ்விவரிப்பு அவரிடம் என்றுமே உள்ள ஒன்று என. அத்தோடு இந்த விவரிப்பு எப்படி உருமாறி உருமாறி தற்போதைய அதி நுட்பமான‌ நிலையை அடைந்திருக்கிறது என்னால் அழகாக பொருத்திப்பார்க்க முடிகிறது.

வாசிக்க வேண்டிய நாவல்.

Similar Posts

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • |

    FACTFULNESS – Hans Rosling

    ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த மருத்துவர் Hans Rosling ஆல் எழுதப்பெற்ற புத்தகம். அவருடைய பணி பல்வேறு நாடுகளில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுக்களை ஆராய்ந்து அதனை ஆரம்பத்திலேயே தடுப்பது மற்றும் மருத்துவ, சுகாதார படிநிலைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களின் சார்பாக பணியாற்றுவது. அத்தகைய பணிகளின் போதும் தன்னுடைய மற்ற அனுபவங்களின் வாயிலாகவும் கற்ற, அறிந்த தகவல்களை பல்வேறு அறிஞர்கள் கூடும் நிகழ்வுகளில் எடுத்துரைப்பதினையும் தன்னுடைய பணியாக செய்து வந்தார். பெரும்பாலும்…

  • |

    ஆயிரம் கைகள் – ஜெயமோகன்

    ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரதமாகிய வெண்முரசுவில் வரும் பரசுராமன் தொடர்பான அத்தியாயங்களைத் திரட்டி ஒரு சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் கூறியது போல இது வெண்முரசில் நுழைய ஒரு வழி. பரசுராமனி பிறப்பிற்கான காரணம் முதல் பிருகுகுல பிராமணர்களிற்கும், யாதவ குடிகளுக்கும் பல தலைமுறைகள் நடந்த போரினைப் பற்றி சுருக்கமாக விளக்கும் நாவல். வாசிக்க வேண்டிய புத்தகம்.

  • |

    புத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்

    பாரசீகக் கவிஞர் உமார் கய்யாமின் பாடல்களை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தப் பாடல்களையும் அதற்கான பொருள்களையும் கமலா முருகன் என்பவர் தொகுத்திருக்கும் நூல் இது. நேரடியான மொழிபெயர்ப்பு கிடையாது. அதாவது தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் அந்தக் கருவை நம் மொழியில் வடித்துள்ளார். ஒரு கவிதையில் கம்பராமயணம் பற்றிக் கூட உண்டு. பொதுவாக இந்த நூலில் உள்ள பாடல்கள் மூன்று வகையாக இருக்கின்றன. ஒன்று வாழிவின் நிலையாமை பற்றிய பாடல்கள். உதாரணமாக, புலர்ந்து…

  • 200 பிரபலங்கள் 200 மறக்க முடியாத நிகழ்ச்சிகள்

    அப்பாஸ் மந்திரியால் தொகுக்கப்பட்டது. நர்மதா பதிப்பகம் வெளியீடு. மிக எளிய புத்தகம். ஆரம்பகால வாசகர்கள் மற்றும் குழ‌ந்தைகளுக்கான சிறந்த தொடக்கமாக இந்நூலைக் கொள்ளலாம். எளிய மொழிநடை. அறம் பேணும் நிகழ்வுகள். தமிழக, இந்திய, உலக வரலாற்றின் உயர்ந்த மனிதர்களுடைய‌ வாழ்வியல் நிகழ்வுகளை மிக அழகாகவும், எளிமையாகவும் விளக்கும் புத்தகம். வாழ்வியல் நெறிகளைப் போதிக்கும் ஆசிரியர்கள் மிகச் சிறந்த உதாரணங்களைக் கூற‌ இந்நூலை உபயோகிக்கலாம்.

  • |

    இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு பாகம் 1

    ராமச்சந்திர குஹாவால் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல் ஆர்.பி.சாரதியால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த மொழியாக்கம். புத்தகம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. சரி, ஏற்கனவே இந்திய வரலாற்றினைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளனவே, அவற்றில் இல்லாத அப்படி என்ன சிறப்பு இந்தப்புத்தகத்திற்கு? இரண்டு முக்கியமான காரணங்கள். முதலாவது, இதுவரையான இந்திய வரலாற்று நூல்கள் இந்தியப் போராட்ட நிகழ்வுகளை அதிகமாக விவரித்து சுதந்திரத்தோடு நின்று விடும், அல்ல‌து இந்திய மன்னர்களது காலங்களில் அதீத கவனம் செலுத்துவதாய் இருக்கும். இந்த நூல்…

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.