|

The Psychology of Money – Morgan Housel

Morgan Housel ஆல் எழுதப்பெற்ற நூல். வெளிவந்த ஆண்டு 2020.நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் நம்முடைய உணர்வுகளும், நம்பிக்கையும், எண்ணங்களும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதினை விளக்கக்கூடிய‌ நூல். குறிப்பாக நம்முடைய கடந்த கால அனுபவங்கள், நம்பிக்கைகளே பெரும்பாலும் நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் முக்கியப்பங்காற்றுகின்றன என்பதனை விளக்குகிறார்.

பணத்தினைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை மாற்றக்கூடிய ஒரு புத்தகம். உண்மையில் செல்வம் என்ற ஒன்று நம்மால் காண முடியாத ஒன்று. நம்மால் எதை செய்ய முடியும் என்பதற்கும், எதைச் செய்கிறோம் என்பதற்குமான வேறுபாடே நம்முடைய வளர்ச்சியை நிர்ணயிக்கிறது என இப்புத்தகம் முழுவதுமே மேற்கோள்களால் நிரம்பியிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் நான் விரும்பிய சில மேற்கோள்கள். அந்த மேற்கோள்களிலிருந்தே இந்நூலின் சாராம்சத்தை தெரிந்து கொள்ளலாம்.

Be wealthy not rich

Things that never happened before happened all the time

Investing is a group of people making imperfect decisions with limited information

Historians are not prophet always

Experience leads to overconfidence

To succeed you have to survive

The ability to do what you want, when you want and how long you want has an infinite ROI

Everything that can break will eventually break

Every job looks easy when you are not the one doing it

Greed is an indelible feature of human nature

Growth is driven by compounding, which always takes time. Destruction is driven by single point of failure which can happen in seconds and loss of confidence which can happen in an instant

Stories are more powerful than statistics

We don’t know what we don’t know

Risk is what’s left over when you think you have thought of everything

At some point you have to make a choice between “Being Right” or “Being Happy”

வாசிக்க வேண்டிய புத்தகம்.

Similar Posts

  • சொர்க்கத்தின் குழந்தைகள்

    சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven). ஈரானியத்திரைப்படம். 1997 ல் வெளிவந்தது. மஜித் மஜித் இயக்கம். அலி, சாரா இருவரும் அண்ணன் தங்கை. மிக ஏழ்மையான குடும்பம். தந்தை வேலைக்கு செல்ல, தாய் உடல் நலமின்றி இருக்கிறார். ஒருநாள் தங்கையின் கிழிந்த ஷூவை தைத்துக்கொண்டு வரும் வழியில் அலி அதனை தவற விட்டு விடுகிறான். தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தங்கையிடம் அதனை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூற வேண்டாம் எனக் கேட்கிறான். இரவு படிக்கும் பொழுது ரகசியமாக இருவரும் காகிதத்தில்…

  • இந்திய அரசியலமைப்பு – லக்ஷ்மிகாந்த்

    இந்திய அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட்டது? அதிலுள்ள ஒவ்வோர் அம்சமும் என்ன? அவை தரும் உரிமைகள் எவை? அவை தரும் கட்டுப்பாடுகள் எவை? எந்தெந்த நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்களில் இருந்து அவை தருவிக்கப்பட்டன? இந்த நிலத்தை ஆளும் முறையை எவ்வாறு தீர்மானிப்பது? எதிர்காலாத்தில் ஏதேனும் ஓர் மாநிலம் தனி நாடு கோரினால் என்ன செய்வது? போன்ற அனைத்தையும் விளக்கும் அரசியலமைப்பு சட்டத்தினைப் பற்றி தெளிவாக விளக்கக் கூடிய ஓர் புத்தகம். நம் மனநிலையில் இந்தப் புத்தகம் ஓர் போட்டித்தேர்வுக்கான…

  • |

    பெண்கள்,படைப்பாளிகள்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன்

    சமீபத்தில் நடைபெற்று வரும் இளம் படைப்பாளிகள் தொடர்பான கருத்து மோதல்களை அறிந்திருப்பீர்கள். இருப்பினும் அது தொடர்பான முழு சித்திரத்தையும் அறிந்து கொள்ள தொகுத்துள்ளேன். ஆனந்த விகடன் வார இதழின்  விகடன் மேடை பகுதியில் ஒரு வாசகரின் கேள்வியும் அதற்கு நாஞ்சில் நாடன் அவர்களின் பதிலும் என இந்நிகழ்வு தொடங்கியது. ”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?” பார்வதி, திருநெல்வேலி நாஞ்சில் நாடன்: ”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி,…

  • | | |

    இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்

    ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா. ஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப்…

  • |

    Work Rules!: Insights from Inside Google

    கூகுள் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரி லாஸ்லோ போக்கால் எழுதப்பட்ட ஓர் சுய முன்னேற்ற நாவல். பெரும்பாலும் இந்நாவல் மற்ற நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகளை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மேலாண்மை அதிகாரியின் பார்வையில் எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பேணலாம் என விளக்குவதே இப்புத்தக்கத்தின் அடிப்படை. பணியாளர் விரும்பும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்க‌க்கூடிய நிறுவனங்களில் கூகுள் ஒன்று. லாஸ்லோ போக் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எப்படி கூகுளை அந்த நிலையை அடைய…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.