நிறமும் மொழியும்

நம்மில் பலருக்கும் இந்த எண்ணம் உண்டு. சிவப்பாய் இருப்பவர்கள் அழகானவர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவானவர்கள். அது தவறான எண்ணம் என்பதே திண்ணம்.

நம்மிடத்து உள்ள இந்த எண்ணம் நமக்கு முந்தைய தலைமுறையிடமிருந்து நம்மிடத்தே வந்து விட்டது. நமக்கு முந்தைய தலைமுறையிடம் இருந்த அளவிற்கு இப்போது இல்லையென்றாலும், அற‌வே இல்லையெனக் கூறிவிடலாகாது.

உண்மை இதுதான். சிவப்பு அழகல்ல, நிறம். ஆங்கிலம் அறிவல்ல, மொழி. 

கடந்த காலப் பெரும்பான்மையான புத்தகங்கள், தொழில்நுட்பம் சார்ந்த நூல்கள் ஆங்கிலத்தில் வெளியானமையால் ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி என படிப்படியாக வலுக்கொண்டுவிட்டது. அதேபோல நம்மை ஆண்டவர்கள் வெள்ளையாய் இருந்த காரணத்தாலோ என்னவோ சிவப்பாய் இருப்பவர்கள் உயர்வானவர்கள் என்ற எண்ணம் கொண்டு பின்னாளில் சிவப்பானவர்கள் அழகானவர்கள் என்ற எண்ணமும் கொண்டுவிட்டோம்.

ஒன்றைத் தெரிந்து கொள்வோம். நம்முடைய அழகும், ஆங்கிலமும் முப்பது நாட்களுக்கு மேல் நமக்குப் புகழ் சேர்க்காது. உண்மை.

நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதாக வைத்துக்கொள்வோம். சேர்ந்த சில நாட்களுக்கு உங்களூடைய அழகும், ஆங்கிலமும் உங்களுக்கு முக்கியத்துவத்தைப் பெற்றுத்தரலாம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல உங்கள் அழகையும் ஆங்கிலத்தையும் தாண்டிய நட‌த்தையும் அறிவும்தான் உங்களுக்கான முக்கியத்துவத்தைப் பெற்றுத்தரும்.

ஒருவேளை உங்களுக்கான முக்கியத்துவம் அழகாலும் ஆங்கிலத்தில் சரளமாய் பேசுவதாலும் மட்டுமே கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் முப்பது நாட்களுக்கு ஒருமுறை உங்கள் வேலையையும், சந்திக்கும் நபர்களையும் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒருவேளை அழகாய் இருப்பவர், அறிவாகவும் நன்னடத்தையுடனும் இருந்து விட்டால் அவருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் முப்பது நாளிலும் கிடைக்கும். அதற்குப் பின்னரும் கிடைக்கும். ஆனால் முதல் முப்பது நாட்களில் கிடைத்தது. அவரது அழகுக்காகவும் பின்னாளில் கிடைத்தது அவருடைய அறிவுக்கும், நடத்தைக்குமாகவும் இருக்கும். ஒன்று நிதர்சனம். நம் வண்ணத்தை கருப்பிலிருந்து சிவப்பாக எந்த களிம்பைப் பூசுவதாலும் கொண்டுவரமுடியாது.

ஆனால் நம் நடத்தையையும் அறியாமையையும் மாற்ற முடியும். எப்படி? நிறைய புத்தகங்கள் படிப்பதன் மூலமாக. படிப்பதென்பது நாம் தின்னும் நொறுக்குத்தீனிப் பையிலிருந்து தொழில்நுட்ப புத்தகம் வரை எல்லாவற்றையும் படிக்க வேண்டும். அது இலக்கியமாக, கவிதையாக, கட்டுரையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதில் முக்கியமானது அப்படிப் படிப்பதை நாம் நமக்காகச் செய்ய வேண்டும். அதை விடுத்து தினம் அலுவலகத்திற்கு வரும்பொழுதும் பொகும்பொழுதும் மட்டும் எல்லோரும் பார்க்கும்படி கையில் பிடித்துக்கொண்டு படிப்பது அல்ல.

நன்றி.

Similar Posts

  • அழிக்கப்பட‌ வேண்டியது சாதியா?

    கடந்த 10,20 ஆண்டுகளாகவே நாம் இதனை கேள்விப்பட்டிருக்கக்கூடும். “சாதிகள் அழிக்கப்பட வேண்டும்” என்று. அனைவரும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் கேட்பதனால் நாம் நம்மை சாதிக்கு எதிரானவராக காட்டிக்கொள்ள முயல்கிறோம். (எல்லோரும் அல்ல). நாம் உயர் வகுப்பினராகவோ, நடுத்தர வகுப்பினராகவோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ குறிப்பிடப் படலாம். முதலில் நாம் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். நாம் சாதிக்கு எதிரானவரா அல்லது சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானவரா?

  • ராமரும் பாபரும்

    திசம்பர் 6, 1992. அயோத்தியிலிருந்த பாபர் மசூதி முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்ட நாள். 20 ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் தனது இறுதித்தீர்ப்பை அறிவித்து விட்டது. (அதனை இரு தரப்பினரும் ஏற்கவில்லை என்பது வேறு.) இந்நிலையில் எஸ். சொக்கனால் தொகுக்கப்பட்டு இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள நூல் அயோத்தி. முதல் பதிப்பில் பெற்ற வரவேற்பின் காரணமாக, இறுதித் தீர்ப்பு விவரங்களோடு, மேலும் பல விவரங்களையும் இணைத்து வெளிவந்துள்ள நூல்.  முதன் முதலாக பாபர் ஆப்கனிலிருந்து வந்து…

  • நாம் நாமல்ல

    நாம் நம் இடத்தை விடுத்து நீண்ட தூரம் செல்லச் செல்ல நம்முடைய செயல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் எந்த ஒரு நிலையிலும் நம்முடைய செயல்பாடு நாம் சார்ந்திருக்கக்கூடிய சமூகத்தின் செயல்பாடாகவே பார்க்கப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் சமூகம் என்பது நம் இடத்தையும் பதவியையும் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். எனது பள்ளி நாட்களில் நான் முதல் பரிசு பெற்றபொழுது எனது சுற்றுவட்ட கிராமங்களில் எனது செயல்பாடு எனது கிராமத்தின் ஒருவனது செயல்பாடாகவே பார்க்கப்பட்டது. ” School First…

  • தேசியக்கட்சிகள் ஏன் மாநிலத்தை ஆளக்கூடாது?

    முந்தைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்காலத்தின் இறுதியிலும், இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் அப்போதைய அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய தகவல் கூட்டணி ஆட்சியாக இருப்பதனால் தங்களால் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரமுடியவில்லை என்பது. 2009 ல் நடைபெற்ற‌ தேர்தலில் 206 இடங்களில் காங்கிரஸ் பெரும்பான்மையைவிட 66 இடங்கள் குறைவாக வென்றிருந்தது. தாங்கள் பெரும்பான்மை பெறாத காரணத்தால் தன்னிச்சையாக எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க முடியவில்லை என‌ மன்மோகன் சிங்கே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது…

  • மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

    “இது எதுக்கு? சறுக்கி வெளையாடுதக்கா?” “கெடட்டி” இந்த வரியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன் கிட்டத்தட்ட இரண்டு வாரமாக‌. நேற்று புத்தகத்தை நூலகத்தில் திருப்பி செலுத்தும்பொழுது அமர்ந்து மீண்டும் அவ்விடத்தை வாசித்தேன். வாய்விட்டு சிரித்துவிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். பார்த்து விட்டுப் போகட்டுமே! அதனால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.