Captain Phillips (film)

Paul Greengrass ன் இயக்கத்தில் 2013 ல் வெளிவந்த திரைப்படம். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அலாபாமா சரக்குக் கப்பல் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். Captain Richard Phillips ஆக நடித்திருப்பவர்  Tom Hanks. கொள்ளையர்களின் தலைவனான‌ Abduwali Muse ன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்  Barkhad Abdi.

தனக்கு இட்ட வேலைப்படி ஆயுதங்களில்லாத சரக்குக் கப்பலை ஓமனின் சாலாலா துறைமுகத்திலிருந்து கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு கொண்டு செல்ல பணியாளர்களுடன் புறப்படுகிறார் பிலிப்ஸ். சோமாலியக் கடத்தல்காரர்களைப் பற்றி வரும் எச்சரிக்கையை அடுத்து கப்பலை பத்திரமாகக் கொண்டு செல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் பிலிப்ஸ். இருப்பினும் நடுவழியில் சோமாலியக் கொள்ளையர்கள் இரு மோட்டார் படகுகளில் பின் தொடர்கின்றனர். அவர்கள் கப்பலிலிருந்து வரும் செய்திகளை உளவு பார்ப்பதை அறிந்துகொள்ளும் பிலிப்ஸ் தன் குரலை மாற்றி இன்னும் ஐந்து நிமிடத்தில் விமானம் பாதுகாப்பிற்காக வரும் என்கிறார். அதனை இடைமறித்துக்கேட்கும் கொள்ளையர்களில் ஒரு படகினர் பயந்து திரும்பி விடுகின்றனர்.

மற்றொரு படகினர் பயப்படாமல் கப்பலை நோக்கி முன்னேறி கப்பலை அடைந்துவிடுகின்றனர். அவர்கள் கப்பலை அடையாமல் இருக்க முயற்சித்து தோல்வியடையும் பிலிப்ஸ் அனைத்து பணியாளர்களையும் இன்ஜின் அறைக்கு செல்லும்படியும், ஒரு ரகசிய வார்த்தையைக் கூறி அதனை தான் திரும்பக் கூறினால் ஒழிய யாரும் வரக்கூடாது எனவும் கூறி அவர்களை மறைந்து கொள்ளச் சொல்கிறார். தன்னைத் தவிர யாரு பணயக் கைதிகளாக கொள்ளையர்களிடம் பிடிபடக்கூடாது என விரும்புகிறார் பிலிப்ஸ்.

பின்னர் படகில் வந்த நால்வரும் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு மற்றவர்கள் எங்கே எனக் கேட்கின்றனர். பிலிப்ஸ் தன‌க்குத் தெரியாது எனக்கூற, கொள்ளையர் தலைவன் முசேவும், மற்றொருவனும் அனைவரையும் தேடி கப்பலின் அனைத்து தளங்களுக்கும் செல்கின்றனர். அவர்களில் ஒருவன் செருப்பு அணியவில்லை என்பதனைத் தெரிந்துகொள்ளும் பிலிப்ஸ் அத்தகவலை ரகசியமாக இன்ஜின் அறைக்குள் மறைந்திருப்பவர்களுக்கு தெரிவிக்க அவர்கள் வரும் வழியில் கண்ணாடித் துண்டுகளைப் போட்டு வைக்கின்றனர். அதில் மிதிக்கும் கொள்ளையனின் காலில் அடிபட்டு ரத்தம் வருகிறது. அவனால் தன்னால் தொடரமுடியாது எனக்கூறிவிட்டு மேலே சென்று விடுகின்றான். தலைவனான முசே மட்டும் கீழே சென்று தேடுகிறான். அவனைக் கீழிருக்கும் பணியாளர்கள் பிடித்து வைத்துக்கொள்கின்றனர். தங்கள் கேப்டனை விடுவிக்க‌வேண்டும், அத்தோடு தங்களிடமுள்ள 30000 டாலர்களை மட்டும் எடுத்துக்கொண்டு, வேண்டுமானால் தங்களின் படகு ஒன்றினை எடுத்துக்கொண்டு புறப்படவேண்டும் என நிபந்தனை விதிக்கின்றனர். ஏற்றுக்கொள்ளும் கொள்ளையர்கள் பிலிப்ஸும் தங்களோடு படகு வரை வரவேண்டும் எனக் கூறிவிட்டு கடைசியில் பிலிப்ஸை விட மறுத்து தங்களோடு கடத்தி செல்கின்றனர். நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் தங்கள் தலைமைப் படகை அழைக்கின்றனர் கொள்ளையர்கள். அதற்குள் தகவல் அமெரிக்க கப்பல் படைக்கு செல்ல பாதுகாப்புக்கப்பல் வருகிறது. பின்னர் நடக்கும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முசேவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கைது செய்கிறது கப்பல் படை. அதே நேரத்தில் படகில் உள்ள மற்ற மூன்று கொள்ளையர்களும் கொல்லப்படுகின்றனர். பிலிப்ஸ் மீட்கப்படுகிறார்.

திரைக்கதை, காட்சி அமைப்பு, கதாபாத்திர தேர்வு மூன்றும் கச்சிதமாக அமைந்த திரைப்படம். பல்வேறு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்து. ஆனால் Barkhad Abdi மட்டும் சிறந்த துணை கதாபாத்திர விருது கிடைத்தது. 55 மில்லியன் அமெரிக்க டாலர்களில் எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவரை 218 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. இந்த திரைப்படத்தினைப் பார்த்த பின்னர் அந்த சம்பவத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்பி அது தொடர்பான தகவல்களை வாசிக்கின்ற பொழுது புலப்பட்ட ஒன்று அனைத்துக் காட்சிகளையும் உண்மைக்கு மிக அருகிலேயே எடுத்திருக்கிறார்கள். உதாரணமாக அலபாமா என அழைக்கப்பட்ட அந்த சரக்குக்கப்பலினை போன்ற‌ அச்சு அசலாக அதே மாதிரி தோற்றம்  கொண்ட‌ ஒன்றினை உபயோகப்படுத்தியுள்ளார்கள். அதோடு அவர்கள் செல்லும் படகு, உபயோகப்படுத்தும் துப்பாக்கி எல்லாமே உண்மையில் உபயோகப்படுத்தப்பட்டவற்றை ஒட்டியே அமைத்துள்ளது. பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்று.

Similar Posts

  • |

    ஆயிரம் ஜன்னல் ‍‍- ஜக்கி வாசுதேவ்

    ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக வெளிவந்த ஜக்கி வாசுதேவ் அவர்கள் எழுதிய‌ கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தாக்கம் சுபா. வாராந்திரக் கட்டுரை வடிவில் வெளிவந்ததனால் ஒட்டு மொத்த தொடர்ச்சி கிடையாது. ஒரு எளிய கட்டுரை அதனுள் ஒரு சிறு அறம். இப்படித்தான் பெரும்பாலானவை. இத்தொடர் வெளிவந்த காலகட்டத்திலேயே ஜக்கி வாசுதேவ் ஒரு புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவர் சாதாரணமாகச் சொல்வதைக்கூட பிரமாண்டமாகவே எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வாசிப்பவர்கள் சென்றே ஆக வேண்டும். அப்படிப்பட்டவையே இக்கட்டுரைகள். வாராந்திர சஞ்சரிகைகளையும், தினசரி செய்திகளையும்…

  • |

    The Psychology of Money – Morgan Housel

    Morgan Housel ஆல் எழுதப்பெற்ற நூல். வெளிவந்த ஆண்டு 2020.நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் நம்முடைய உணர்வுகளும், நம்பிக்கையும், எண்ணங்களும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதினை விளக்கக்கூடிய‌ நூல். குறிப்பாக நம்முடைய கடந்த கால அனுபவங்கள், நம்பிக்கைகளே பெரும்பாலும் நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் முக்கியப்பங்காற்றுகின்றன என்பதனை விளக்குகிறார். பணத்தினைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை மாற்றக்கூடிய ஒரு புத்தகம். உண்மையில் செல்வம் என்ற ஒன்று நம்மால் காண முடியாத ஒன்று. நம்மால் எதை செய்ய முடியும் என்பதற்கும்,…

  • |

    ஆரோக்ய நிகேதனம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய

    1951 ஆம் ஆண்டில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் வங்க மொழியில் எழுதப்பெற்ற நாவல். பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் த.நா.குமாரசாமி அவர்கள் 1972 ல் மொழிபெயர்த்துள்ளார். இந்திய அரசின் சாகித்திய அகாதெமி மற்றும் மேற்கு வங்க அரசின் ரபீந்திர புரஷ்கார் விருதுகளை வென்ற நாவல். இந்நாவல் ஜீவன் மாஷாய் என்னும் வைத்தியரின் நினைவோட்டத்தின் வாயிலாக சொல்லப்படுகிறது. மூன்று தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்துவரும் ஜீவன் மாஷாயின் வாழ்வு மற்றும் ஆயுர்வேத மருத்துவம் ஆங்கில மருத்துவ‌த்தின் வருகையினால்…

  • | |

    The Boss Baby – குழந்தை முதலாளி

    2017 ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம். 2010 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த The Boss Baby என்ற புத்தகத்தினை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் இதுதான். கதை எதிர்காலத்தில் நடைபெறுகிறது. டிம் தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய சிறு வயதுக்கதையைக் கூறுவதாகப் படம் தொடங்குகிறது. டிம் தன்னுடைய பெற்றோருக்கு ஒரே பையன். செல்லமாகவும் புத்திசாலித்தனமாகவும் வளர்ந்து வருகிறான். டிம்மின் பெற்றோர் பப்பிஸ் கார்ப் என்ற‌ நாய்க்குட்டிகளை விற்பனை செய்யும் கம்பெனியில் பணியாற்றுகின்றனர். பரபரப்பான வேலைக்கு மத்தியிலும்…

  • |

    காரல் மார்க்ஸ் – பட்டத்தி மைந்தன்

    2008 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக விவரித்துள்ளார்கள். ராமையா பதிப்பகம் வெளியீடு. 1818 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ட்ரியர் என்னுமிடத்தில் பிறந்தார் மார்க்ஸ். யூத இனத்தைச் சேர்ந்தவர். மார்க்ஸின் தந்தை ஒரு வக்கீல். யூதர்கள் ஜெர்மனியில் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வந்ததால் யூத மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிக்கொண்டார். அவர் மார்க்ஸ் படிக்கும் காலத்தில் தொடர்ச்சியாக கடிதம் எழுதும் வழக்கம் வைத்திருந்தார். மார்க்ஸ் தன் குடும்ப நண்பரின் மகளாக ஜென்னியைக் காதலித்து…

  • | | |

    சட்டத்தை நிறைவேற்றுபவர்களின் ஆட்சி

    தமிழக,இந்திய‌ அரசியல் தொடர்பான எந்த ஒரு நிகழ்வையும் வரலாற்றுத்தகவல்களோடு அணுகவேண்டும், அன்றாட‌ வெற்று அரசியல் கூப்பாடுகளுக்கு செவி மடுக்கக்கூடாது என்ற நினைப்பு எனக்கு எப்பொழுதும் உண்டு. அதனால் பெரும்பாலான‌ நிகழ்கால அரசியல் விவாதங்களில் என்னுடைய கவனத்தை முற்றிலுமாக நான் தவிர்த்து விடுவதுண்டு. கடந்த ஒரு மாதங்களில் ஏதேனும் ஓர் ஊடகத்தில் வெளிவந்த விவாதங்களை ஒட்டுமொத்தமாக தொகுத்துப் பாருங்கள். அவையெல்லாம் வெற்றுக் குப்பைகள், அன்றன்றைய சொறிதலுக்கு மட்டுமேயானவை என்பது தெரியும். அதன் காரணமாகவே இந்த வெற்று நுரை கொப்புளிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.