|

Work Rules!: Insights from Inside Google

கூகுள் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரி லாஸ்லோ போக்கால் எழுதப்பட்ட ஓர் சுய முன்னேற்ற நாவல். பெரும்பாலும் இந்நாவல் மற்ற நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகளை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மேலாண்மை அதிகாரியின் பார்வையில் எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பேணலாம் என விளக்குவதே இப்புத்தக்கத்தின் அடிப்படை. பணியாளர் விரும்பும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்க‌க்கூடிய நிறுவனங்களில் கூகுள் ஒன்று. லாஸ்லோ போக் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எப்படி கூகுளை அந்த நிலையை அடைய வைத்தோம் என்பதனை விளக்குவதே இந்த புத்தகத்தின் ஒட்டு மொத்த நோக்கம்.

ஒரு பணியாளர் கூகுளில் எப்படியெல்லாம் நடத்தப்படுகிறார் அல்லது அவருக்கு என்னென்ன விதமான சலுகைகள் தரப்படுகின்றன அல்லது எந்த விதமான சுதந்திரம் அனுமதிக்கப்படுகிறது போன்றவற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்களும் இந்நூலை வாசிக்கலாம். ஏனெனில் யாரோ ஒருவரின் பார்வையில் கூகுளை மதிப்பிடுவதை விட அந்நிறுவனத்தின தலைமை அதிகாரியின் சொற்களில் அறிவதற்கு நம்பகத்தன்மை அதிகம் தானே!

ஒட்டுமொத்தமாக இந்த புத்தகம் முன்னிறுத்தும் கருத்துக்கள் இவையே

  • Give your work meaning.
    • நம்முடைய நோக்கம் என்ன? எதற்காக இந்த வேலையை செய்கிறோம்? நிறுவத்தில் இதன் ஒட்டுமொத்த விளைவு  என்ன?  என்பதனை ஒவ்வொரு பணியாளரும் உணரச் செய்தல்.
  • Trust your people.
    • நம்முடைய பணியாளர்களை முழுவதுமாக நம்புதல், அல்ல‌து ஒளிவு மறைவின்றி இருத்தல் அல்லது முழுமையாக நம்புபவர்களை மட்டுமே வைத்திருத்தல்
  • Hire only people who are better than you.
    • நம்மை விட மேலானவர்களை மட்டும் பணிக்குத் தேர்வு செய்தல். இது சற்று காலம் பிடித்தாலும் இறுதியில் அது ஒரு சிறந்த ஓர் பணியாளர் குழுவாக இருக்கும்.
  • Don’t confuse development with managing performance.
    • தொடர் கலந்துரையாடல்கள் வழியாக நம்முடைய நோக்கத்தில் தெளிவாக இருத்தல். உள் வேலைகளில் தலையிடாது இருத்தல்.
  • Focus on the two tails.
    • ஆகச்சிறந்த அல்லது இருப்பவர்களிலேயே ஆகச்சிறந்த பணியாளர்களையும், ஆக மோசமான அல்லது இருப்பவர்களிலேயே மோசமான பணியாளர்களையும் அதிகமாக கவனித்தல் அல்லது உற்சாகப்படுத்துதல்
  • Be frugal and generous.
    • உயர்ந்த எண்ணம் கொண்டு பணியாள‌ர்களுக்கான சலுகைகளை செய்தல்
  • Pay unfairly.
    • எல்லாருக்கும் ஒரே ஊதியம் என்ற எண்ணமில்லாமல் அவரவர் திறமைக்கேற்ப, ஒரே நிலையில் இருந்தாலும் வெவ்வேறு ஊதியம் வழங்குதல்
  •  Nudge.
    • சின்னச் சின்ன மாற்றங்கள் மூலம் பெரிய விளைவுகளை ஏற்படுத்துதல்
  • Manage the rising expectations.
    • மாற்றமும் சலுகைகளும் மேலும் சலுகைகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்க்கும் என்பதனை உணர்ந்து அதற்கேற்ப திட்டமிடுதல்
  • Enjoy! And then go back to No. 1 and start again.
    • மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றுதல்

மேற்கூறிய கருத்துக்களை உதாரணங்களோடும், தகவல்களோடும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளக்கியிருக்கிறார் லாஸ்லோ போக்.

Similar Posts

  • சொர்க்கத்தின் குழந்தைகள்

    சொர்க்கத்தின் குழந்தைகள் (Children of Heaven). ஈரானியத்திரைப்படம். 1997 ல் வெளிவந்தது. மஜித் மஜித் இயக்கம். அலி, சாரா இருவரும் அண்ணன் தங்கை. மிக ஏழ்மையான குடும்பம். தந்தை வேலைக்கு செல்ல, தாய் உடல் நலமின்றி இருக்கிறார். ஒருநாள் தங்கையின் கிழிந்த ஷூவை தைத்துக்கொண்டு வரும் வழியில் அலி அதனை தவற விட்டு விடுகிறான். தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தங்கையிடம் அதனை அம்மாவிடமும், அப்பாவிடமும் கூற வேண்டாம் எனக் கேட்கிறான். இரவு படிக்கும் பொழுது ரகசியமாக இருவரும் காகிதத்தில்…

  • | | |

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

  • |

    Get To The Top – Suhel Seth (புத்தகம் – 1)

    இந்திய தொழிலதிபர் சுஹெல் சேத் அவர்களால் எழுதப்பெற்ற சுயமுன்னேற்ற‌ நூல். இந்தப்புத்தகம் பெரும்பாலும் நண்பர்களைப் பெறுவது எவ்வாறு, அவர்களை பேணுவது எவ்வாறு என்பதனை விளக்கும் ஒரு புத்தகம். சுஹெல் தொழிலதிபர் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் தலையங்கம் எழுதக்கூடியவரும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும், பேச்சாளரும் கூட. ஆதலால் அவருக்கு இருக்கும் தொடர்புகள் மேல்மட்டத்திலானவையாக இருக்கின்றன. உதாரணமாக அருண் ஜேட்லி, விஜய் மல்லையா, மம்தா பானர்ஜி என. அத்தகைய அவருடைய மேல்தட்டு அனுபவங்களின் நிகழ்வுகளை விவரித்து அவற்றிலிருந்து இப்புத்தகத்திற்கான கருத்துக்களை ஒருங்கிணைத்துள்ளார். ஒரு…

  • |

    The Psychology of Money – Morgan Housel

    Morgan Housel ஆல் எழுதப்பெற்ற நூல். வெளிவந்த ஆண்டு 2020.நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் நம்முடைய உணர்வுகளும், நம்பிக்கையும், எண்ணங்களும் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதினை விளக்கக்கூடிய‌ நூல். குறிப்பாக நம்முடைய கடந்த கால அனுபவங்கள், நம்பிக்கைகளே பெரும்பாலும் நம்முடைய பொருளாதார முடிவுகளை எடுப்பதில் முக்கியப்பங்காற்றுகின்றன என்பதனை விளக்குகிறார். பணத்தினைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை மாற்றக்கூடிய ஒரு புத்தகம். உண்மையில் செல்வம் என்ற ஒன்று நம்மால் காண முடியாத ஒன்று. நம்மால் எதை செய்ய முடியும் என்பதற்கும்,…

  • |

    THE ANTHROPOCENE REVIEWED – JOHN GREEN (புத்தகம் – 2)

    John Green என்பவரால் எழுதப்பெற்ற புத்தகம். வலையொளியில் podcast ஆக வெளிவந்த ஒலித் தொகுப்புகள் புத்தமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகத்தின் தலைப்பு THE ANTHROPOCENE REVIEWED. அது நிகழ் யுகத்தினைக் குறிக்கக்கூடிய ஒரு சொல். ஏறத்தாழ மனிதனின் செயல்பாடுகள் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தத்தொடங்கிய காலத்திலிருந்து தொடங்கும் காலம் அது. இக்காலக்கட்டத்தில் இப்பூமியில் உள்ள, மனிதனால் உருவாக்கப்பட்ட பலதரப்பட்டவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சினிமா,உணவகம்,இடம் என‌ எல்லாவற்றையும் நட்சத்திர குறியீட்டு அளவினால் அளவிடும் காலகட்டதிற்கு நாம் வந்துவிட்டதால்,…

  • மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது

    மனுஷ்யபுத்திரனின் கவிதைத்தொகுப்பு – பசித்த பொழுது. படிக்கும் பொழுது “இதெல்லாம் கவிதைதானா? வெற்று வசனங்கள்தானே ?” என கேட்கத்தூண்டும் வண்ணம் பல கவிதைகள் இருக்கிறது. ஒருவேளை அவைதான் சரியான கவிதைகளோ? நமக்குத்தான் அதற்கான ஞானம் வரவில்லையோ என்ற எண்ணமும் இப்போது வரை உண்டு. உங்களுக்கும் தோன்றினால் நீங்களும் என் இனமே.  பெரும்பாலும் தன் வாழ்வின் நிகழ்வுகளைத்தான் கவிதைகளாக வடித்திருக்கிறார். சமூக பொருளாதார சித்தாந்தங்களெல்லாம் ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை எனலாம். மொத்தம் உள்ள 236 கவிதைகளில் 99% கவிதைகளை காமம், மழை,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.