Category: புத்தகம்

மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

ஜெர்மனியக் கவிதைகளின் அறிமுகமும், ஜெர்மனியக் கவிதைகளின் மொழி பெயர்ப்புமே இந்நூல். வெளியீடு சந்தியா பதிப்பகம். ஆக்கம் வத்ஸலா விஜயகுமார். இப்புத்தகம் இரண்டு பாகங்களால் ஆனது. முதல் பாகம் ஜெர்மனி கவிதைகளின் வரலாறு குறித்தும் அதன் வெவ்வேறு காலத்தைய கவிஞர்கள் குறித்தும் அறிமுகம் செய்கிறது. இரண்டாவது பாகம் அவற்றுள் குறிப்பிடத்தக்க கவிதகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனுடன் அக்கவிதைகளின்…

Continue Reading மெளனத்தூதன் – வத்ஸலா விஜயகுமார்

அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் எழுதப்பெற்று வெளிவந்த ஆசிரியர் கட்டுரைகளின் தொகுப்பு. பெரும்பாலும் 1947 ஆம் ஆண்டுகளின் வாக்கில் எழுதப்பெற்றவை. பெரும்பாலான கட்டுரைகள் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தவர்களைப் பற்றியும், இசைத்துறை சார்ந்தவர்கள் பற்றியுமாக இருக்கிறது. உதாரணமாக அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த இசை வல்லுநர்கள், கதா கலாட்சேபம் செய்பவர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள் போன்றவர்களைப்பற்றி. அனேகக் கட்டுரைகள் பிராமணர்களைப்…

Continue Reading அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

தவிப்பு – ஞானி

ஞானி அவர்களால் எழுதப்பெற்று விகடனில் தொடராக வெளிவந்த தொடரின் நாவல் வடிவம். வெளியீடு விகடன் பிரசுரம். வெளியிட்ட ஆண்டு ஆகஸ்ட் 2007. டில்லியில் அரசு தொலைக்காட்சியில் பணிபுரியும் விஜயனுக்கு ஒரு தமிழ்த் தீவிரவாதக் கும்பலுடன் சமரசம் பேசுவதற்கான அழைப்பு அரசால் விடுக்கப்படுகிறது. அத்தீவிரவாதிகள் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருக்கின்றனர். அத்தோடு அத்தீவிரவாதிகளுள் ஒருத்தியான ஆனந்தி விஜயனின் கல்லூரிக்…

Continue Reading தவிப்பு – ஞானி

இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் ‍- டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் மதம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றி ஜாகிர் நாயக் அவர்கள் ஆற்றிய உரைகளின் தமிழாக்கம். வெளியீடு சாஜிதா புக் சென்டர். வருடம் ந‌வம்பர் 2010. தமிழாக்கம் முஹம்மது. இஸ்லாம் மீதான விமர்சனமாக வைக்கப்படும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் ஆகியவற்றை மறுத்து குரானில் கூறப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் விளக்கங்களையும் விவரிக்கிறார்…

Continue Reading இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள் ‍- டாக்டர் ஜாகிர் நாயக்

ஏறுவெயில் – பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பெற்று 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த நாவல். இது அவருடைய முதல் நாவல். நகரமயமாதலின் பொருட்டு தன்னுடைய பூர்விக நிலத்தைவிட்டு செல்லும் ஒரு கிராமத்து குடும்பத்தின் கதை. கதைக்களம் நிகழ்வது 1980 களில். பொன்னையாவின் தாத்தாவிற்கு மூன்று மகன்கள். நிலத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் பொருட்டு நிலத்தை விற்றுவிட்டு அக்காசை மூன்று மகன்களுக்கும்…

Continue Reading ஏறுவெயில் – பெருமாள் முருகன்

குர் ஆனும் நவீன விஞ்ஞானமும் ‍ – டாக்டர் ஜாகிர் நாயக்

நவீன விஞ்ஞானம் கண்டறிந்து நிறுவிய பல்வேறு உண்மைகள் ஏற்கனவே எவ்வாறு குர் ஆனில் விளக்கப்பட்டுள்ளது என்பதனை விவரிக்கும் புத்தகம். சாஜிதா புக் சென்டர் வெளியீடு. தமிழாக்கம் இப்னு ஹூசைன். விண்ணியல்,இயற்பியல்,புவியியல்,மண்ணியல்,சமுத்திரவியல்,உயிரியல், தாவரவியல், விலங்கியல், மருத்துவம், உடல் செயலியல், கருவியல், பொது விஞ்ஞானம் ஆகிய துறைகளின் இந்நூற்றாண்டு கண்டுபிடிப்புகளும் அறிதல்களும் எவ்வாறு ஏற்கனவே குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன…

Continue Reading குர் ஆனும் நவீன விஞ்ஞானமும் ‍ – டாக்டர் ஜாகிர் நாயக்

அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? – டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கும், ராஷ்மிபாய் ஸ‌வேரி அவர்களுக்கும் இடையில் நடந்த அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? என்ற விவாதத்தின் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பகுதியினை சுருக்கமாக புத்தகவடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். அதுவே இப்புத்தகம். தமிழாக்கம் நூ.முகமது கனி. வெளியிடப்பட்ட வருடம் ஜனவரி 2011. அசைவ உணவு மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதனை…

Continue Reading அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? – டாக்டர் ஜாகிர் நாயக்

இந்திய வரலாறு ‍ – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

ஆரியர்கள் வருகை முதலாக இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசு கேரளத்தில் அமைந்தது வரையிலான இந்திய வரலாற்றை மார்க்சிய நோக்கில் விவரிக்கும் நூல். கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முதலமைச்சரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்களால் எழுதப்பெற்றது. எழுதப்பெற்ற ஆண்டு 1977. கிட்டத்தட்ட 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நுழையும் ஆரியர்கள் இங்கு வாழ்ந்து வரும் சிந்து…

Continue Reading இந்திய வரலாறு ‍ – ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

ரகுவம்சம் – அ.வெ.சுப்பிரமணியன்

ராமன் பிறந்த ரகுவம்சத்தின் வரலாறு, சுருக்கமான வடிவில். அ.வெ.சுப்பிரமணியன் அவர்களால் காளிதாசனின் மூலவடிவில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. எளிய பிழையற்ற மொழிநடை. திலீபனின் தொடங்கி, ரகு, அஜன், தசரதன் வழியாக ராமனின் வரலாறைக் கூறும் நூல். சூர்ய குலம் எனப்படும் ரகுவம்ச வரலாறை அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக இந்நூலை வாசிக்கலாம். ஒட்டுமொத்த அரசகுலத்தின் தோற்றம் கிடைக்கும். ரகுவம்ச…

Continue Reading ரகுவம்சம் – அ.வெ.சுப்பிரமணியன்

When Breath Becomes Air – Paul Kalanithi

You had become a popular neurosurgeon and suddenly one day you came to know that you have stage 4 cancer and your days are numbered. How will you feel? How your days will be from that moment? If your wife…

Continue Reading When Breath Becomes Air – Paul Kalanithi