கற்போம்

education2கல்வி என்பது என்ன?

இன்றைய நிலையில் கல்வி என்பது தனிமனித பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு கருவி என்பதாகிவிட்டது.அதாவது ஒருவன் தனது கல்வியினால் தன்னுடைய பொருளாதாரத்தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் போனால் அவன் கற்ற கல்வி தவறானது என்றே பொருள் கொள்ளப்படும்.

அது கல்வி அல்ல. பயிற்சி. ஒரு குறிப்பிட்ட எதிபார்ப்போடு செய்யப்படக்கூடிய ஒரு செய்முறை என்பது பயிற்சியே. கல்வி என்பது அதுவல்ல.

 கல்வி என்பது கற்றல். அது நாம் பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே கற்க முடியும் என்பதல்ல. அங்கே கிடைப்பது கல்விக்கடலின் ஒரு துளி. சமுத்திரத்தின் மிச்சமும் சேர்ந்ததுதான் கல்வி.அது பள்ளி செல்லாத ஒருவரிடமும் உண்டு. சூழ்நிலைகளினின்று கற்றிருப்பார்.

நமது பாடத்திட்டம், தேர்வு இந்த இரண்டையும் தாண்டி அறியத்துவங்கும் ஒரு செயல்பாடே கல்வி. உலகின் மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் எல்லோருமே பள்ளி, கல்லூரிக்கல்விக்கு அப்பாற்பட்டு கற்றவர்களே.

 அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அதிகம் வாசிப்பதே இதன் முதல் நிலை. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கலை, அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், கவிதை, வரலாறு, வணிகம் என எதுவாக வேண்டுமானாலும்.  எது என முடிவு செய்ய முடியவில்லையா? எல்லாவற்றையும் படிப்போம்.

புத்தகங்கள் வாசிப்பதில் பல நன்மைகள் உண்டு. ஒரு மிகப்பெரும் எழுத்தாளர் எழுதிய ஒரு நூலை வாசிக்கும் பொழுது அது தொடர்பான அவருடைய அறிவை எல்லாம் நாம் பெற்று விட முடியும்.

உதாரணமாக ஒரு வருட முயற்சியில் அவர் அந்த நூலை வெளியிட்டிருப்பாரானால் அதனை ஒரு வாரத்தில் படித்து முடித்துவிடுவதன் மூலமாக அவரின் அந்த நூல் தொடர்பான‌ அறிவை நாம் பெற்றுவிடலாம். அல்லது குறைந்த பட்சம் 90 விழுக்காட்டையாவது பெற்றுவிடலாம். ஏனென்றால் ஒரு எழுத்தாளர் தனக்குத் தெரிந்த தகவல்களை மறைத்து எந்த ஒரு நூலையும் எழுத மாட்டார்.

மிக முக்கியமான இன்னொரு நன்மை யாதெனின் ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுதும் நம் மனநிலை துவங்கும்பொழுது இருந்த மனநிலையை விட பல படிகள் உயர்வானதாக‌ இருக்கும். சிற்றின்பம் விடுத்து பேரின்பம் நோக்கிச் செல்ல நம் மனநிலைச் செம்மைப் படுத்துவதற்கான சிறந்த வழியும் அதுவே.

நன்றி.

Similar Posts

  • மருந்து உலகம் – மாய உலகம்

    இன்றைய இந்தியக்குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் மருந்துப்பொருட்கள் வாங்காத குடும்பங்கள்? 5 விழுக்காட்டிற்கும் குறைவு. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிக அளவிலான‌ மருந்து மாத்திரைகள் வாங்கப்படுகின்றன. இந்தியர்களின் சராசரி ஆயுள் உயர்ந்திருந்தாலும், பெரும்பாலானோர் தன் வாழ்நாளை ஏதாவது ஒரு நோயுடன் கழிக்கின்றனர். வயது குறைந்தோறும் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.40 வயது உடையவர்களுக்கு சர்க்கரை நோய் வருவது இயல்பாகி விட்டிருக்கிறது. மருந்து மாத்திரைகள் இல்லாத வாழ்வென்ப‌து இல்லாது போனது.  இவையெல்லாம்தான் நவீன இந்தியா. இப்போதைய பிரச்சினை ஒவ்வொரு குடும்பத்திற்குமான மருத்துவச்செலவு. மாதந்தோறும்…

  • | |

    காஷ்மீரும் ராணுவமும்

    காஷ்மீர் ராணுவத்தின் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள் பற்றிய நேரத்தில் வாசித்த சிறந்ததொரு கட்டுரை. திருச்சி வே விஜயகிருஷ்ணன் அவர்களால். எனக்கு சாதாரணமாகவே ஒரு கட்டுகோப்பான இயக்கங்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு. அது கம்யூனிசமானாலும் ஆர்எஸ்எஸ் ஆனாலும் சரி. அதுவே இராணுவம் என்றால் சற்று அதிக்கப்படியான மரியாதைதான். அவற்றின் அங்கத்தினர்கள் சாமான்ய மனிதர்களின் உந்துதள்களை மீறிய வாழ்வை வாழ்வதனாலேயே அவர்களுக்கு சற்று சலுகைகள் தேவை என்பதே என் எண்ணம். அதிலும் இராணுவம் போன்ற தன உயிரை…

  • அதிக பணம் அச்சடித்தால் என்ன?

    பொருளாதாரம் பற்றி அறியத்துவங்கிய காலத்தின் ஆரம்பகாலக் கேள்விகளுள் ஒன்று. இந்தக் கேள்வியோடிருப்பவர் நீங்களென்றால் உங்களுக்கே இந்தப் பதிவு. இந்தியாவின் கடன் தொகை பல லட்சம் கோடிகளில். ரூபாய் மதிப்பு சரிவு. இதைச் சரிசெய்ய அதிக பணம் அச்சடித்தால் என்ன? அடிப்படைக்கேள்வி. அடிக்கலாம். என்ன நடக்கும்? அரசாங்கம் அதிக பணம் அச்சடிக்கும். அதை புழக்கத்தில் விடும். புழக்கத்தில் விட வேண்டுமென்றால் அரசு திட்டங்களுக்காக செலவிடலாம், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக தரலாம் அல்லது மக்களுக்கு  மணியார்டர் செய்யலாம். எப்படியோ மக்களிடம்…

  • கழுதையும் உருளைக்கிழங்கும்

    ஒரு சமயம் பெர்னாட்ஷா ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னாட்ஷா அவரை வரவேற்று “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்” என்றார்.அதற்கு நண்பர் “உருளைக்கிழங்குகளா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார். பெர்னாட்ஷா சிரித்தபடி ஒரு உருளைக்கிழங்கை எடுத்தார். அப்போது அது தவறி கீழே விழுந்து தோட்டத்தின் பக்கம் உருண்டு ஓடியது.அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஓர்…

  • |

    சமையல்கட்டும் கிச்சனும்

    கிச்சன் என்ற சொல் சமைய‌ல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கே தரையில் உட்கார்வதற்கு வழியே இல்லை. மிகக்குறுகலான இட வசதி கொண்டதாக இருக்கும். நகரங்களின் இடவசதிப்பற்றாக்குறையில் அதற்கு ஆகக்குறைந்த அள‌விற்கே இடம் ஒதுக்கும் இன்றைய சூழ்நிலையில் வேறு வழியும் இல்லை. ஆனால் நான் உணர்ந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.