|

கயம் – குமார செல்வா

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த குமாரசெல்வாவினால் எழுதப்பெற்ற ஆறு சிறுகதைகளின் தொகுப்பு. காலச்சுவடு பதிப்பகம். 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது.

நாகமலை
குறுவெட்டி
உயிர்மரணம்
கயம்
கிணறு
விடாலு

இவையே அந்த ஆறு சிறுகதைகள். இவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த கதை உயிர்மரணம். கடாட்சம் தன் தந்தை சொன்ன சொல்லுக்காக தன் இரண்டு வயது மகன் றாபியைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு மனைவி அஞ்சம்மாளோடு வெளியேறுகிறார். ஒன்றுக்கும் உதவாது என ஊர் நினைக்கும் ஓர் நிலத்தில் உழைத்து முன்னேறுகிறார். அவர் அடையும் உச்சம் அவர் மகன் காலத்திலேயே அழிகிறது. அதனை நினைக்கும் அவரின் எண்ண‌ ஓட்டங்கள், அவருக்கும் அவரது மனைவிக்குமான உறவின் ஆழம் என கதை விரிகிறது. கண்ணீர் வரவழைக்கும் கதை.

மற்றொரு கதை குறுவெட்டி. பாலியல் நோய் வந்ததாக எண்ணும் ஒருவனின் மன அலைச்சல்கள் தான் கதை. அரசாங்க மருத்துவமனையில் அவன் எவ்வாறு நடத்தப்படுகிறான், அங்கிருக்கும் டாக்டர், நர்ஸ்கள் அவனை எவ்வாறு ஏளனம் செய்கிறார்கள், அலட்சியமாகப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் ஆழ விவரிக்கும் சிறுகதை.

மற்றபடி கிணறு,விடாலு இரண்டும் குறிப்பிடத்தகுந்த கதைகள். இதன் ஆசிரியரின் உண்மையான பெயர் தெரியவில்லை. குமார செல்வா என்பது புனைப்பெயர் போலும். இணையத்தில் தேடினேன், காணவில்லை.

வாசிக்க வேண்டிய சிறுகதைகள்.

Similar Posts

  • | |

    தூய்மை இந்தியா

    சமீபத்தில் நமது பிரதமர் அவர்களால் தூய்மை இந்தியா துவங்கப்பட்டதை விமர்சனம் செய்து பல்வேறு விதமான கட்டுரைகளும் பேச்சுக்களும் இணையத்தில் உலாவுகின்றன. ஒரு எளிய இணைய வாசகன் வாசிக்கும்பொழுது அவன் நம்பக்கூடிய வண்ணமே அப்பதிவுகள் இடப்படுகின்றன. எதற்காக அவர்கள் அதனை செய்கிறார்கள்? ஒன்று அவர்கள் மோடியை வெறுப்பவராகவோ, அல்லது எதிர்க் கட்சியை சேர்ந்தவராகவோ இருப்பார். ஆனால் அவர்களின் எண்ணங்களை இணையத்தில் முடிந்த அளவிற்கு பரப்பி அதனைப் பெருக்குகிறார்கள். உதாரணமாக ஒரு அமைச்சர் குப்பையை ஓரிடத்தில் பரப்பி வைத்துவிட்டு பின்னர்…

  • |

    நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

    நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம். அந்த பத்தொன்பது பேர் இவர்களே மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு பி.ஆர்.அம்பேத்கர் ராம்மோகன் ராய் ரவீந்திரநாத் தாகூர் பாலகங்காதர திலகர் ஈ.வே.ராமசாமி முகம்மது அலி ஜின்னா சி.ராஜகோபாலச்சாரி ஜெயப்பிரகாஷ் நாராயணன் கோபால கிருஷ்ண கோகலே சையது அகமது கான்…

  • பார்த்திபன் கனவு ‍- அம‌ரர் கல்கி

    அமரர் கல்கி அவர்களால் 1941 ஆம் ஆண்டு எழுதப்பெற்ற நூல், காவியம். சோழ நாடும், பல்லவ நாடுமே கதைக்களங்கள். பார்த்திப மன்னனின் கனவான சுத‌ந்திர தேசத்தை அவரது மகனான விக்கிரமன் நனவாக்குவதே கதை. இது காதல் காவியமோ என்ற எண்ணம் அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கிறது. எளிய கதை.மிகச் சிறந்த வர்ணனை. அந்த வர்ணனைகளுக்காகவே மறுபடியும் படிக்கலாம். பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவனின் மகளாகிய குந்தவி தேவியின் அழகை விவரிக்கும் அழகே அழகு. அவ்வளவு வசீகரமானவள்,அழகானவள். அந்த குந்தவி…

  • தேவை பஜ்ரங்கி பைஜான்கள்

    சமீபத்தில் மீண்டும் ஒருமுறை பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தை பார்த்தேன். ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு இந்திய சினிமா ஆற்றிய பயன் என்று பார்த்தால் அதிகபட்சம் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவே என்பது என் எண்ணம். 95 விழுக்காடு சீர்கேடே. இது இல்லையென்றால் செழிப்போடு இருந்திருப்போம் என்ற பொருளிலல்ல, இல்லாமலிருந்திருந்தால் இத்தனை விரைவாக இத்தனை மோசமாக ஆகியிருக்க மாட்டோம் என்ற பொருளில். சமூகத்தின் பெரும்பகுதி சீரழிந்து விட்டது என்ற பொருளில‌ல்ல, சீரழிவின் பெரும்பகுதி சினிமாவால் என்ற பொருளில். நூற்றில் ஐந்து திரைப்ப‌டங்கள் சமூகத்தின்…

  • | |

    கொரோனா தோல்வி

    கொரோனாவைக் கையாள்வதில் இந்திய அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தோல்விக்கான முழுப்பொறுப்பும் பாரதிய ஜனதா அரசினையே சாரும். தேர்தல் ஆணையத்திற்கும், இந்தியக் கட்சிகளுக்கும் கணிசமான பங்கும் உண்டு. முதலில் உலக நாடுகளில் முதலாம் கட்ட அலை ஏற்பட்ட போது வெறும் 34 வெளிநாட்டு விமான நிலையங்களைக் கட்டுப்படுத்த முடியாத நாம் 32 லட்சம் சதுர கிலோமீட்டர் கொண்ட நிலப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என நினைத்தது மகா முட்டாள்தனம். நம் அதிகாரிகள் அப்படித்தான் நினைத்தார்கள். அதுவும் மிகப்பிந்தியே…

  • சித்தி

    சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சியில் ஒரு பழைய திரைப்படத்தின் காட்சி ஒளிபரப்பானது. அந்தக் காட்சியில் தன் வீட்டு வறுமையை தன் தம்பிக்கு தெரியாமல் மறைப்பாள் அக்கா. தம்பியை டாக்டராக்க வேண்டும் என்பது அவள் கனவாக இருக்கும். அந்த அக்கா பத்மினி, தம்பி முத்துராமன். அப்படத்தின் பெயர் தெரியாததால் என் அம்மாவிடம் காட்சியை விளக்கிக் கேட்டேன். பட்டென்று பதில் வந்தது, சித்தி என்று. அப்படத்தைப் பார்த்தேன். எஸ்.எஸ். வாசன் அவர்களின் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இசை எம்.எஸ்.விஸ்வநாதன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.