Category: கட்டுரை

புகழுக்கு இருபடி முன்னால்

தான் வாழும் காலத்தில் புகழ் பெற்ற அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இவ்வுலகில் எத்தனை பேர்? வெகு சொற்பம். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் மறைந்த பின்னர் பல காலம் கழித்து அவர்களை இந்த சமூகம் புகழின் உச்சியில் கொண்டு சென்று வைத்துவிடுகிறது. இது ஏன் நிகழ்கிறது? முதல் காரணம் அறிவியளாளர்கள் அல்ல‌து சிந்தனையாளர்கள் அவர்கள் வாழும் காலங்களில் மற்றவர்களால்…

Continue Reading புகழுக்கு இருபடி முன்னால்

இந்தியக் கண்டுபிடிப்புகள்

கடந்த நூறாண்டுகளில் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனை தொழில்நுட்பங்கள் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்விக்கான விடை பெரும்பாலும் பூஜ்யமே. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் அதன் விகிதாச்சாரம் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் புறந்தள்ளக்கூடியதே. சரி 700 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாம் மட்டுமே 120 கோடி. சராசரியாக 6 விழுக்காடு உலக மக்கள்…

Continue Reading இந்தியக் கண்டுபிடிப்புகள்

ஒற்றைப்படையாகும் உலகம்

நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண…

Continue Reading ஒற்றைப்படையாகும் உலகம்

வாசிப்பு

ஒட்டு மொத்த மனித குலத்திலேயே அதனை முன்னெடுத்து செல்பவர்கள் இரண்டு விழுக்காடு மட்டுமே, மற்றவர்களெல்லாம் அவர்கள் கண்டறிவதை தலைமுறை தலைமுறையாகக் கடத்துபவர்கள் மட்டுமே என்று ஒருமுறை ஜெயமோகன் கூறியிருந்தார். அதனை நான் பல நாட்கள் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். அது சரிதான். தன்னள‌வில் செய்யும் ஒழுங்கீனங்களுக்கு விளக்கம் கொடுத்தே பழக்கப்படும் ஒருவர் எந்த ஒரு தருணத்திலும்…

Continue Reading வாசிப்பு

சமையல்கட்டும் கிச்சனும்

கிச்சன் என்ற சொல் சமைய‌ல்கட்டு என்ற சொல்லிருந்து எவ்வளவு தூரம் வேறுபடுகிறது? என்னால் என்றுமே கிச்சனை அத்தனை அந்நியோன்யமாக உணர முடிந்ததே இல்லை. அது முற்றிலும் நிற்பதற்கான இடம் மட்டுமே. சமைப்பதற்கான இடம் மட்டுமே. அங்கு வேறு எதுவும் செய்ய முடியாது. அங்கே தரையில் உட்கார்வதற்கு வழியே இல்லை. மிகக்குறுகலான இட வசதி கொண்டதாக இருக்கும்….

Continue Reading சமையல்கட்டும் கிச்சனும்

அழகானவர்கள்

சிவப்பாய் இருப்பவர்களே அழகானவர்கள், கருப்பு நிறத்தவர்கள் சற்று கீழே என கடந்த 30 ஆண்டுகளாகவே ஒருவகை மனநிலை நமக்குள் திணிக்கப்படுகிறது. இருபத்தைந்து விழுக்காடு சிவப்பு நிறத்தவர்கள்  இருந்தால் சற்றே ஆச்சரியம் அளிக்கக்கூடிய இந்த தமிழகத்தில் இந்த மனநிலை எப்படி நம‌க்குள் வந்திருக்கலாம்? ஒரு சில நண்பர்கள் இல்லை என மறுத்துப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்களுக்கும் அந்த…

Continue Reading அழகானவர்கள்

ஆசானுக்கு

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு இந்த‌க்கடிதத்தினை தங்களுக்கு இன்னும் சில நாட்கள் கழித்தே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் முன்னரே எழுதினால் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் எழுதுவீர்கள் என்று நம்பியே இப்பொழுதே எழுதுகிறேன். முதலில் சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்கள். எனக்கு அவரைப்பற்றி தெரியாது. தங்களின் மூலமே தெரியும். இருந்தாலும் சரியான…

Continue Reading ஆசானுக்கு

உலகத்தொழிலாளர்களே! (ஆசானிடமிருந்து)

உலகத்தொழிலாளர்களே என்ற தலைப்பில் மே தினத்தினையொட்டி ஆசான் 2011 ல் எழுதிய கட்டுரை. எத்துனை அடர்த்தியான கட்டுரை. அவர் ஆசானாக இருப்பதில் வியப்பேதுமில்லை. நன்றி: ஜெயமோகன் http://www.jeyamohan.in/16732#.VUbd7_mqqko மே மாதம் ஒன்றாம் தேதி, ஒலிபரப்புவதற்காக ஒரு பண்பலை வானொலியில் இருந்து தொலைபேசிப் பேட்டி எடுத்தார்கள். ஓரிரு சொற்கள், அதில் பாட்டுகளில் ஊடாக ஒலிக்கும் என நினைக்கிறேன்!…

Continue Reading உலகத்தொழிலாளர்களே! (ஆசானிடமிருந்து)

அறிதலின் துவக்கம்

அறிதலின் அடிப்படைத்துவக்கமே தன் குறைகளைத் தன்னளவில் ஏற்றுக்கொள்வதே. தன் செயலை சரியாக செய்யக்கூடிய ஒருவன் அதனை மேம்படுத்தும் வழியைத் தேடுகிறான். தன்னால் செயலையே செய்து முடிக்க‌ முடியாத ஒருவன் அச்செயலை செய்து முடிப்பதையே பெரிய சாதனையாகக் கருதும்பொழுது அங்கே மேம்படுத்துவது என்ற‌ சொல்லே பொருளற்றுப் போகிறது.

Continue Reading அறிதலின் துவக்கம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

“இது எதுக்கு? சறுக்கி வெளையாடுதக்கா?” “கெடட்டி” இந்த வரியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன் கிட்டத்தட்ட இரண்டு வாரமாக‌. நேற்று புத்தகத்தை நூலகத்தில் திருப்பி செலுத்தும்பொழுது அமர்ந்து மீண்டும் அவ்விடத்தை வாசித்தேன். வாய்விட்டு சிரித்துவிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். பார்த்து விட்டுப் போகட்டுமே! அதனால் என்ன?

Continue Reading மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு